இதே நாளில் அன்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜூன் 01, 2019
 இதே நாளில் அன்று

ஜூன் 2, 1943 இளையராஜா: தேனி மாவட்டம், பண்ணபுரத்தில், 1943, ஜூன் 2ல் பிறந்தார். இயற்பெயர், ராசய்யா. கடந்த, 1976ல், அன்னக்கிளி படத்தின் மூலம், தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இதுவரை, 1,000-க்கும் மேற்பட்ட படங்களில், 4,500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு
இசையமைத்துள்ளார்.

இவரது இசைக்காகவே, எண்ணற்ற படங்கள் வெற்றி பெற்றன. 1992ம் ஆண்டு மட்டும், 52 படங்களுக்கு இசையமைத்தார். 'பஞ்சமுகி' எனும் ராகத்தை உருவாக்கினார்; திருவாசகத்திற்கு இசை அமைத்தார் என, அவரின் சாதனைகள் எண்ணற்றவை. கவிதை தொகுப்புகளும் வெளியிட்டுள்ளார். இந்திய அரசின், பத்ம பூஷன், பிலிம்பேர், தேசிய விருது என, பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். பிரபல நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், உலகின் சிறந்த இசையமைப்பாளர் பட்டியலில், ஒன்பதாவது இடம் பிடித்தார். இப்பட்டியலில் இடம்பெற்ற, ஒரே இந்தியர் அவர் தான். இசைஞானி இளையராஜா, பிறந்த தினம் இன்று!


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X