சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பரமத்திவேலூரில் துணை மின்நிலையம் முற்றுகை

Added : ஏப் 21, 2011
Advertisement

ப.வேலூர் : பரமத்திவேலூரை சுற்றி உள்ள ஏடர்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மஞ்சள் மற்றும் கரும்பு சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதற்காக தினமும் 2 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இது போதாது எனவும், தினமும் 14 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் விவசாயிகள் சார்பில் பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை 10 மணியளவில் நூற்றுக்கம் மேற்பட்ட விவசாயிகள் ஏடர்பாளையம் துணை மின்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து துணை மின்நிலைய ஜெ.இ., காளிதாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X