பொது செய்தி

இந்தியா

சி.டி., விவகாரத்தில் உண்மை என்ன? சாந்தி பூஷனுக்கு எதிர்ப்பும், ஆதரவும்

Updated : ஏப் 21, 2011 | Added : ஏப் 21, 2011 | கருத்துகள் (30)
Share
Advertisement
புதுடில்லி: லோக்பால் மசோதா வரைவு கமிட்டிக்கு இணைசேர்மனாக நியமிக்கப்பட்ட சாந்திபூஷன் தொடர்பான சி.டி., உண்மையானது என்று டில்லி போலீசார் கூறியுள்ளது சர்ச்சையை அதிகப்படுத்தியுள்ளது. எனினும் சாந்தி பூஷன் மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும், உறுப்பினர்கள் யாரும் பதவி விலக தேவையில்லை என்றும் மற்றொரு உறுப்பினரான அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நாட்டில்
Bhushan CD not tampered with: Sources, ஊழல் ஒழிப்பு மசோதா இணை சேர்மனுக்கு சிக்கல்; நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்கமுயற்சி ��

புதுடில்லி: லோக்பால் மசோதா வரைவு கமிட்டிக்கு இணைசேர்மனாக நியமிக்கப்பட்ட சாந்திபூஷன் தொடர்பான சி.டி., உண்மையானது என்று டில்லி போலீசார் கூறியுள்ளது சர்ச்சையை அதிகப்படுத்தியுள்ளது. எனினும் சாந்தி பூஷன் மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும், உறுப்பினர்கள் யாரும் பதவி விலக தேவையில்லை என்றும் மற்றொரு உறுப்பினரான அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.


நாட்டில் ஊழல் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர லோக்பால் மசோதாவை பார்லி.,யில் தாக்கல் செய்ய வேண்டும் என்று, காந்தியவாதி அன்னாஹசாரே உண்ணாவிரதம் இருந்ததையடுத்து, மத்திய அரசு வரும் குளிர்கால கூட்டத்தொடரில் அம்மசோதாவை கொண்டுவர ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிலையில், இம்‌மசோதவை தயாரிக்கும் வரைவுக்குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், பிரபல வழக்கறிஞருமான சாந்தி பூஷன் மற்றும் அவரது மகன் பிரசாந்த் பூஷன் ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டு வெளிவந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


சாந்திபூஷன், முலாயம்சிங் மற்றும் அமர்சிங்குடன் நடந்த உரையாடல் கொண்ட சி.டி., தான் இந்த பிரச்னைக்கு காரணம். இந்த சி.டி.,யில் நீதிபதியை ரூ. 4 கோடிக்கு விலைக்கு வாங்குவது தொடர்பான விஷயம் உரையாடலாக பதிவாகியிருக்கிறது. இது சில பத்திரிகை அலுவலகங்களுக்கு மர்ம நபர்களால் அனுப்பி வைக்கப்பட்டது. இது தம் மீது களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது, இது முற்றிலும் பொய்யாக ஜோடிக்கப்பட்டவை என ஆணித்தரமாக தெரிவித்திருந்தார் பூஷன். இது தொடர்பான உண்மையை விசாரிக்கும் படி போலீசில புகார் மனுவும் அளித்தார்.


இந்த புகாரை விசாரித்த போலீஸ் இந்த சி.டி., ஜோடிக்கப்பட்டவை அல்ல என்றும் இந்த உ‌ரையாடலில் இருப்பது சாந்திபூஷனின் குரல்தான் என்றும் கூறியுள்ளது. ஆனாலும் இது தொடர்பான முடிவுக்கு வருவதற்கு இன்னும் கூடுதல் ஆதாரங்கள் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளது. இந்த சி.டி., ஐதராபாத் தடயவியல் ஆய்வாளர்களால் பரிசோதிக்கப்பட்டு ரிப்போர்ட் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பூஷனுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கின்றன. இவர் இந்த பொறுப்பில் நீடிக்க கூடாது என்றும் எதிர்ப்பு குரல் உயர்ந்திருக்கிறது.


ஒருபுறம் ஆதரவு: இந்நிலையில், சாந்தி பூஷன் மற்றும் பிரசாந்த் பூஷனுக்கு ஆதரவான குரல் வரைவு குழு உறுப்பினர்களிடையே எழுந்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள குழு உறுப்பினர் அரவிந்த் கெஜ்ரிவால், இவ்விவகாரம் தொடர்பாக தாங்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுகப்போவதாக தெரிவித்துள்ளார். லோக்பால் மசோதா வரைவுக்குழு மக்கள் பிரிவு உறுப்பினர்களுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்திருப்பதாக குற்றம்சாட்டிய அவர், இதற்காக குழு உறுப்பினர்கள் யாரும் பதவி விலகத்தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பூஷனுக்கு ஆதரவாக கிரண் பேடியும் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugal - covai,இந்தியா
22-ஏப்-201101:15:26 IST Report Abuse
Pugal சாந்தி பூஷன் பக்கத்திலேயே வாழ்ந்து வருவது போல அவர் ஊழல் செய்யாதவர் என்று எப்படி இங்கே சிலர் சொல்கிறார்கள்? ஆச்சரியமாக இருக்கிறது! அந்த சி டி யை ஆராய்ந்தவர் நேர்மையானவராக இருக்க வாய்ப்பில்லையா? சி டி யை ஆராய்ந்தவரின் பின்னணி இங்கே யாருக்கும் தெரியாது; அப்புறம் எப்படி அவர்கள் காங்கிரசுக்கு பணிந்துபோனவர்கள் என்று சொல்கிறீர்கள்? நாம் எதிர் பார்க்கும் முடிவை சொல்லாமல் வேறு சொன்னால் சொல்பவன் சரியில்லை என்று சொல்வது அபத்தம். சாந்தி பூஷன் அவரது மகனை இந்த குழுவில் நுழைத்த போதே தெரிந்தது இந்த ஆள் ஒன்றும் சுத்தமான ஆள் இல்லை என்று. நான் கேட்கிறேன் - ஏன் சில இந்தியர்கள் லஞ்சம் கொடுக்கிறார்கள்? கொடுப்பதால் தானே வாங்குகிறார்கள்? தவறான வழியில் காரியம் சாதிக்க முற்படுபவர்கள் திருந்தினால் ஒழிய அரசியல்வாதிகளோ அதிகாரிகளோ திருந்தப்போவதில்லை. சாந்தி பூஷன் இல்லன்னா வேற ஆளே இல்லையா? ஏதாவது சொல்லி டிலே பண்ணிட்டே இருங்க. அப்படியே இந்த குழு வந்தாலும் லோக் பால் மசோதாவின் வடிவமைப்பு செய்ய ஒரு மூன்று நான்கு ஆண்டுகள் எடுக்கும்; அதைப் பற்றி ஒரு வருடம் விவாதிக்கலாம். அதற்குள் அடுத்த தேர்தல்..எல்லோரும் அதன் பின்னால் ஓடலாம்; இது மீண்டும் கிடப்பில் போடப்படும் ( 1968 முதல் கிடப்பில் இருப்பதுதானே லோக் பால் - இப்போ லானோ திபோ என்று அடித்துக்கொள்ளும் எதிர் கட்சிகள், அவர்கள் ஆண்ட போது என்ன புடிங்கிக் கொண்டிருந்தாரகள்? ஏன் இந்த சட்டத்தை கொண்டுவரவில்லை? இப்போ எல்லோரும் காங்கிரஸ் மேல் பாய்கிறார்கள்!
Rate this:
Cancel
Ramesh Bp - Chennai,இந்தியா
22-ஏப்-201100:04:47 IST Report Abuse
Ramesh Bp Any imitator can talk like others and that cannot be confirmed by technology with 100% surety. CBI itself is working for Congress, then Delhi police definitely will work for congress they will arrest everyone who raise voice against corruption including Anna Hazare and continue grabing money from common citizens.
Rate this:
Cancel
S.Prasanna - chennai,இந்தியா
21-ஏப்-201115:14:28 IST Report Abuse
S.Prasanna வெட்கம் ..! வெட்கம் ..! இதை தவிர வேறு வார்த்தை இல்லை ..! லஞ்சம் என்பதும் ஊழல்தான் .! ஆக யாரும் இங்கே புத்தர் இல்லை ..௧ ஊருக்கு இங்கே தகுதி இல்லை ..! ச.பிரசன்னா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X