விஸ்வரூபம் எடுக்கிறார் அமித் ஷா?

Updated : ஜூன் 02, 2019 | Added : ஜூன் 02, 2019 | கருத்துகள் (96)
Share
Advertisement

பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, நிதி அமைச்சராகப் போகிறார் என, ஊடகங்கள் செய்தி வெளியிட, பலரும் அது குறித்து, கருத்துகளை தெரிவித்தனர்.latest tamil news
ஆனால், அவர் உள்துறை அமைச்சராக, நம்ம ஊர் நிர்மலா சீதாராமன், நிதி அமைச்சராகிவிட்டார். யாருக்கு எந்த இலாகா என்ற விபரம் வெளியே கசியவேயில்லை. மோடி அரசில், ரகசியத்தை அப்படி காக்கின்றனர்.பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக, அமைச்சரவையில், 'பவர்புல்' ஆக இருப்பவர் அமித் ஷா. கடந்த, 2014 பா.ஜ., ஆட்சியில், இந்த துறையை, ராஜ்நாத் சிங் கவனித்து வந்தார். இவர், அமைதியானவர். எந்த விஷயத்திலும் தடாலடியாக இறங்க மாட்டார்.


latest tamil news
ஆனால், அமித் ஷா அப்படியல்ல. ராஜ்நாத்திற்கு முற்றிலும் நேர் எதிரானவர். உள்துறை அமைச்சகத்தில், பல பரபரப்பான விஷயங்கள் அரங்கேற போகிறது என்கின்றனர், அமித் ஷாவிற்கு நெருக்கமானவர்கள். மோடி மற்றும் அமித் ஷாவிற்கு குடைச்சல் கொடுத்த, காங்கிரஸ் தலைவர்களுக்கு, இனி பிரச்னை தான். அவர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் எல்லாம் துாசி தட்டி எடுக்கப்பட்டு, அவர்களை சிறைக்கு அனுப்ப, அமித் ஷா முயற்சிப்பார் என, சொல்லப்படுகிறது.

இன்னொரு முக்கியமான விஷயமும் சொல்லப்படுகிறது. அமித் ஷாவிற்கு இப்போது, 54 வயதாகிறது. மோடி தன் வாரிசாக, அமித் ஷாவைக் கொண்டு வந்துள்ளார். மோடிக்கு பிறகு, பா.ஜ. ஆட்சி அமைக்கும் போது, அமித் ஷாதான் பிரதமர். இப்படி சொல்வது, பா.ஜ., 'சீனியர்' தலைவர்கள்.

Advertisement
வாசகர் கருத்து (96)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Chennai,இந்தியா
04-ஜூன்-201902:56:49 IST Report Abuse
Kumar உண்மையை சொல்ல போனால், ரவுடிக்கு ரவுடி இந்த அமித்ஷா. உள்நாட்டு பாதுகாப்புக்கு மிக சரியான மனிதர். காஷ்மீர் தீவிரவாதிகள் , நக்ஸல்கள், மொழி மற்றும் மத பிரிவினைவாதிகள் பற்றி தொடர்ச்சியாக உளவெடுத்து சரியான நேரத்தில் சரியான நடவடிக்கையை "சரியான" விதத்தில் எடுக்கும் (NRC உள்பட )திறமை உள்ளவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. (குஜராத்தில் 56 ஹிந்துக்களை கொன்ற தாக்குதலில், இரண்டே நாட்களில் விமானத்தில் இருந்து உ பி யில் உள்ள காஜியா பாத் சென்று இந்த தாக்குதலுக்கு மூளையாய் இருந்த முல்லாவை கைது செய்து அன்றே விமானத்தில் அகமதாபாத் இழுத்து சென்றவர் ) செய்வாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
02-ஜூன்-201921:20:02 IST Report Abuse
Anantharaman Srinivasan இந்திய முழுதும் காவி FLAG பறக்கபக்கணும். பாத்து பாத்து பொல்லாத நேரம் வந்தால் யானையும் அடிசறுக்கும். பாமக ராமதாஸ் கதை என்ன ஆச்சு ???
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
07-ஜூன்-201901:21:38 IST Report Abuse
Aarkayயாரோடு, யாரை ஒப்பிடுவது? கொடுமை...
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,யூ.எஸ்.ஏ
02-ஜூன்-201920:37:50 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN     என்னமோ உலக மகாயோகியான் போல புய்ல்ட் up எதற்கும் ஒரு எண்டு கார்டு உண்டு எவ்வளவு பேரை பார்த்திருக்கிறோம் இவர் ஒன்னும் அவதார புருஷன் இல்லையே இவரும் மோடியும் இருந்த குஜராத் எந்த வைகையுள் தமிழ்நாட்டை விட உசந்து உள்ளது
Rate this:
kumar - Erode,இந்தியா
06-ஜூன்-201903:19:07 IST Report Abuse
kumarபணத்துக்கும் இலவசத்துக்கும் வாக்குகளை விற்காத மக்களாக வளர்த்திருக்கிறார்கள். தமிழ் நாட்டில்??? யாரும் யோக்கியன் இல்லை. ஆனால் பிற மதங்களுக்கு நாட்டை விற்க தயங்காத, தேச துரோகிகளுக்கு, தீவிர வாதிகளுக்கு வக்காலத்து வாங்காத, நாட்டை கொள்ளை அடிக்காதவனாக இவர்களை பெரும் பாலனவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். திராவிட கட்சிகளின் வேற்று அடுக்கு மொழி பேச்சில் மட்டும் ஐம்பது வருடங்களாக மயங்கி இருக்கும் பலருக்கு தெளிவு வர சில வருடங்களாகும்....
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
07-ஜூன்-201901:25:41 IST Report Abuse
Aarkayதேர்தல் முடிவுகள் தந்த சோகத்திற்குப்பின்னே கூலிக்கு கருத்தெழுதும் கூட்டம் இப்போதுதான் வேலைக்கு திரும்பியிருக்கிறார் போலிருக்கிறது ஒரு நான்கு வருடங்கள் தூங்கிவிட்டு, தேர்தல் நேரத்தில் வந்தால் போதும் Take good rest புதிதாக ஏதாவது சொல்ல யோசியுங்கள் இன்னமும் குஜராத்தைவிட்டு நகரமாட்டேனென்கிறீர்கள் Grow up Get d...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X