தமிழை போற்றி வளர்ப்போம் : நிர்மலா சீத்தாராமன்

Updated : ஜூன் 02, 2019 | Added : ஜூன் 02, 2019 | கருத்துகள் (48)
Share
Advertisement

புதுடில்லி : தொன்மையான தமிழை போற்றி வளர்ப்பதற்கு மத்திய அரசு முன் நிற்கும் ; ஒரே பாரதம் உன்னத பாரதம் என்று பிரதமர் துவக்கிய இயக்கம், அனைத்து இந்திய மொழிகளையும் வளர்ப்பதற்குத்தான் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.



latest tamil news


மத்திய அரசு, புதிய கல்வி கொள்கை வரைவு திட்டத்தை மக்கள் கருத்துக்காக, மனிதவளத்துறை இணையத்தில் பதிவேற்றி உள்ளது. அதில், வரும் ஜூன் 30 வரை மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. ஆனால், அதிலே மும்மொழிக்கொள்கை அமல்படுத்த பரிந்துரைப்பதாகவும், இது இந்திபேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்கும் முயற்சி என்றும் தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


latest tamil news



ஆனால், மத்திய அமைச்சர்கள் ரமேஷ் பொக்ரியால், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட பலரும், எந்த மொழியும் எந்த மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது. இன்னும் கொள்கை முடிவு எடுக்கப்படவில்லை என்று தொடர்ந்து கூறிவருகின்றனர். இந்தநிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழிலேயே ஒரு பதிவை இட்டுள்ளார்.
அதில், ''மக்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்பே கல்வி குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும். பிரதமர் அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்க விரும்பியே “ஒரே பாரதம் உன்னத பாரதம்” “#EkBharatSreshthaBharat முயற்சியை துவக்கினார். தொன்மையான தமிழை போற்றி வளர்பதற்கு மத்ய அரசு முன்னின்று ஆதரிக்கும்.'' என்று கூறப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
05-ஜூன்-201901:56:10 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam பதவி ஏற்றபோது, கன்னடத்தில் சத்தியப்பிரமாணம் எடுத்தவர் இவரா?
Rate this:
Share this comment
Cancel
Jayvee - chennai,இந்தியா
04-ஜூன்-201913:16:04 IST Report Abuse
Jayvee 'ழ' என்ற எழுத்தை சரியாக உச்சரிக்கத் தெரியாத தமிழ் அரசியல் வியாதிகளின் மத்தியில் நிர்மலா சீதாராமன் தமிழ் எவ்வளவோ மேல் . அனால் தமிழகத்தின் பிரதிநிதி என்று சொல்லுவது தவறு.. குறைந்தபட்சம் அவரை தமிழகத்திலிருந்து மேல் சபைக்கு தேர்வு செய்யப்பட்டால் அப்பொழுது அவ்வாறு கூறுவதில் நியாயம் உள்ளது.. இவரையும் ஜெய்சங்கரையும் தமிழிககத்திலிருந்து தேர்வு செய்ய BJP ஆவண செய்யவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Srivatsava -  ( Posted via: Dinamalar Android App )
03-ஜூன்-201908:12:07 IST Report Abuse
Srivatsava . பிஜெபி வளர வேண்டும் என அயராது உழைத்தவர் தமிழிசை சவுந்தர ராஜன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X