மே.வங்கத்தில் அதிரும் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம்

Updated : ஜூன் 02, 2019 | Added : ஜூன் 02, 2019 | கருத்துகள் (33)
Share
Advertisement

கோல்கட்டா : மேற்கு வங்கத்தில், 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் எடுபடாது, எங்களது கோஷம் 'ஜெய் காளி' என்று வங்கத்தின் கோஷத்தை முன்வைத்தார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. இது தேர்தலின் போது பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தேர்தலுக்கு பின்னரும் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்தை முன்வைத்து போராட்டங்கள் தொடர்கின்றன.latest tamil newsதடியடி ;


ஜெய் ஸ்ரீராம் கோஷங்கள் திரிணாமுல் காங்கிரஸின் கட்சி கூட்டத்தில் மீண்டும் ஒலித்தன. பாராக்பூர் தொகுதியில் காஞ்சாப்பாரா பகுதியில் மம்தா பானர்ஜி அரசின் மூன்று அமைச்சர்கள் நடத்திய கட்சி கூட்டத்தில் சுமார் 200 அடி தூரம் தள்ளி ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் எழுப்பப்பட்டது. காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.


ரயில் மறியல் ;


அமைச்சர்கள் ஜோதிப்ரியோ மல்லிக் மற்றும் தபோச் ராய் ஆகியோர் அந்த இடத்தை விட்டு அகன்றதும் பா.ஜ., ஆதாரவாளர்கள் 15 நிமிடங்கள் காஞ்சாப்பாரா ரயில் நிலையத்தில் ரயில்களை தடுத்தனர். சுமார் 4 மணியளவில் பா.ஜ., தொழிலாளர்கள் காவல் நிலையத்திற்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த தர்ணாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்களும் இணைந்தனர்.


latest tamil news10 லட்சம் தபால் :


இதனிடையே, முதல்வர் மம்தா பானர்ஜி இல்லத்திற்கு ஜெய் ஸ்ரீராம் என எழுதப்பட்ட 10 லட்சம் தபால் அட்டைகளை அனுப்ப உள்ளோம். மக்கள் திரிணாமுல் காங்கிரசை தோற்கடித்ததால் அவர்கள் மோசமாக நடந்துகொள்கிறார்கள். கோஷம் போடும் தொண்டர்களை அவர்கள் போலீஸ் மூலம் அடிக்கிறார்கள்,'' என பா.ஜ.,வினர் தெரிவித்துள்ளனர்..

திரிணாமூல் காங்கிரஸ் தலைவரான மம்தா பானர்ஜி “ஜெய் ஸ்ரீ ராம்” என்ற கோஷத்திற்கு எதிரிப்பு தெரிவித்தார். பா.ஜ.,வினர், அவர் எங்கு சென்றாலும் ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை எழுப்பி தங்கள் எதிர்ப்பினை தெரிவித்தபடியே இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sukumaran Sankaran Nair - Taiping (Perak).,மலேஷியா
22-ஆக-201922:49:31 IST Report Abuse
Sukumaran Sankaran Nair அவதாரம் என்பதை எப்படி கண்டுகொள்வது என்பதை பஹாய் சமய பாதுகாவலர் முகாந்திரங்களாக கொள்ளும்படி குறிப்பிட்டுள்ளார் :- 1.கடந்த காலங்களின் அவதாரங்கள் அளித்த அடுத்து வரவிருக்கும் தீர்க்கதரிசனம் குறித்த வாக்குறுதி.2.விண்ணிலும்,புவியிலுமான திடீர் மாற்ற அறிகுறிகள் (உதாரணத்திற்கு இரட்டை அவதாரங்களான பாப் பெருமானார் ,இறை ஜோதி பஹாவுல்லா தோன்றலை க்குறிக்கும் வகையில் குறியீடாக தோன்றிய இரட்டை வானவில் (23 மே மாதம் 1844) மற்றும் முதன் முதலாக சாமுவேல் மோர்ஸ் என்ற விஞ்ஞானி மேற்கும் கிழக்கும் தொலைத்தொடர்பு கொள்ள கண்டுபிடித்த கம்பியற்ற (Morse Code Wireless Communication ) போன்ற மாற்றங்கள் போன்றவை குறிப்பிடத்தக்கது.4 புதிய கலாசார திடீர்மாற்றங்கள் 5 புனித நாட்களை அனுசரிப்பதற்கான நாள்காட்டி.6. அவதாரங்களால் மட்டுமே தாங்கிக்கொள்ள முடிகிற வேதனைகளும், உயிரத்தியாகங்களுடனான சீடர்களின் எழுச்சி, 1000 வருடங்களுக்கு குறையாத ஒரு நாகரிக கட்டமைப்பு இத்தியாதிகளுடனான தனித்துவமான திருவொப்பந்த வழிபாடுடனான இறை போதனைகள்.
Rate this:
Cancel
03-ஜூன்-201911:19:24 IST Report Abuse
கிழவன் நாம ஜெய் காளி .. ஜெய் ஷ்ரீ ராம்னு சண்டை போட்டுட்டு இருப்போம் .. நடுவுல இயேசு உங்களை ரட்ச்சிப்பார் னு ஒரு கூட்டம் வந்து மதமாற்றிட்டு போயிடும் ....
Rate this:
Cancel
Tamilselvan - Chennai,இந்தியா
03-ஜூன்-201908:25:36 IST Report Abuse
Tamilselvan இந்த அம்மா ஒரு மெண்டல் . விரைவில் விரட்டி அடிக்க படுவார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X