தமிழ்நாடு

மணவாளநல்லூர் அரசு குவாரியில் மணல் வளம் கொள்ளை! அரசியல் கட்சிகள் ஒற்றுமையாக களம் இறங்க முடிவு

Added : ஜூன் 02, 2019
Share
Advertisement
விருத்தாசலம்: மணவாளநல்லுார் அரசு மணல் குவாரியில் அளவுக்கு அதிகமாக மணல் சுரண்டப்பட்டதால், வெள்ளம் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.வெள்ளாறு, மணிமுக்தாறுகளில் ஆன்லைன் மூலம் செயல்பட்ட அரசு மணல் குவாரிகளில் வெளி மாநில, மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்களில் வந்து மணல்
மணவாளநல்லூர் அரசு குவாரியில் மணல் வளம்  கொள்ளை! அரசியல் கட்சிகள் ஒற்றுமையாக களம் இறங்க முடிவு

விருத்தாசலம்: மணவாளநல்லுார் அரசு மணல் குவாரியில் அளவுக்கு அதிகமாக மணல் சுரண்டப்பட்டதால், வெள்ளம் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.வெள்ளாறு, மணிமுக்தாறுகளில் ஆன்லைன் மூலம் செயல்பட்ட அரசு மணல் குவாரிகளில் வெளி மாநில, மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்களில் வந்து மணல் அள்ளப்பட்டது. களிமண் தெரியும் அளவிற்கு மணல் சுரண்டப்பட்டது.இதனால் ஆறுகளில் தண்ணீர் வந்தாலும் தேங்கி நிற்க வழியின்றி, கடலில் கலந்து வீணாகும் நிலை உள்ளது. இதனை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டதன் விளைவாக, பெரும்பாலான குவாரிகள் மூடப்பட்டன.
இதன் விளைவாக, மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகள் பாதித்தன. அதை தொடர்ந்து, விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுாரில், கடந்தாண்டு அரசு மணல் குவாரி திறக்கப்பட்டது. துவக்கத்தில் மாட்டு வண்டிகளுக்கு மட்டும் அனுமதி தரப்பட்ட நிலையில், அரசு பணிகளுக்கு மட்டும் என கூறி டிராக்டரில் மணல் அள்ளப்பட்டது.
இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடியதால், மாட்டு வண்டிகளில் மட்டும் மணல் எடுக்கப்படுகிறது.ஆனால், தினசரி அனுமதித்த நேரத்தை காட்டிலும், விடிய, விடிய அனுமதியின்றி மணல் அள்ளப்பட்டதால் மணவாளநல்லுார் மணிமுக்தாறில் ராட்சத பள்ளங்கள் உருவாகி உள்ளது. தரை வெளியே தெரியும் அளவிற்கும் மணல் சுரண்டப்பட்டுள்ளது.வெள்ள நீர் கரைபுரண்டோடும்போது ஊருக்குள் வெள்ளம் புகுகும் அபாயம் உள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி, மாவட்ட நிர்வாகம் முதல், தலைமை செயலகம் வரை அனைத்து தரப்பினருக்கும் மனு அனுப்பியும் இதுநாள் வரை நடவடிக்கை இல்லை.எனவே, மணல் குவாரியை மூடக் கோரி ரேஷன் கார்டு, ஆதார், வாக்காளர் அட்டை உள்ளிட்ட அரசு சான்றுகள் அனைத்தையும் ஒப்படைப்பதுடன், உள்ளாட்சி தேர்தல் புறக்கணிக்க போவதாக தெரிவித்துள்ளனர்.கல்லா கட்டும் ஊழியர்கள்?மணவாளநல்லுார் குவாரியில் தினசரி 420 மாட்டு வண்டிகளுக்கு சுழற்சி முறையில் மணல் அள்ள அனுமதி தரப்பட்டுள்ளது. ஆனால், அங்கு பணியில் உள்ள ஊழியர்கள் ஒத்துழைப்புடன் தினசரி 600 முதல் 750 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி செல்லப்படுகிறது.
இதன் மூலம் நாளொன்றுக்கு 25 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை அதிகாரிகள் லாபம் பார்ப்பதாக புகார் எழுந்துள்ளது.பலி கேட்கும் பள்ளங்கள்மணிமுக்தாற்றில் அளவுக்கு அதிகமாக 10 முதல் 15 அடி ஆழத்திற்கு ஆங்காங்கே ராட்சத அளவில் பள்ளம் தோண்டி மணல் அள்ளப்பட்டுள்ளது.
இதனால் ஆற்றில் நீர்வரத்து இருக்கும்போது குளிக்க செல்லும் சிறுவர்கள், பெண்கள் பலியாக வாய்ப்புள்ளது. கால்நடைகளும் பலியாகும் வாய்ப்புள்ளது.அரசியல் கட்சிகள் ஒற்றுமைமணவாளநல்லுார் ஊராட்சியில் அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும் மணல் குவாரிக்கு எதிராக ஒற்றுமையாக களமிறங்க முடிவு செய்துள்ளனர். மேலும் மணவாளநல்லுார் மணிமுக்தாற்றில் நிரந்தரமாக மணல் குவாரியை மூட சட்டப் போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X