திருவனந்தபுரம்: கேரளாவில், மாணவர்களை பாலியல் பலாத்காரம் செய்த மதரசா ஆசிரியரை, போலீசார் கைது செய்தனர்.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, ஆலுவா மாவட்டத்தை சேர்ந்தவன், யூசுப், 63. கோட்டயம் மாவட்டம், தலயோபரம்பு நகரில் உள்ள மசூதி சார்பில் நடத்தப்படும், மதரசா பள்ளியில் ஆசிரியராக, கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தான். மதரசாவில், 15 வயதுக்குட்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்நிலையில், மதரசாவில் படிக்கும், 12 வயது மாணவர், தன்னிடம் யூசுப் முறைகேடாக நடந்து கொண்டதாக, பெற்றொரிடம் புகார் செய்தார். பெற்றோர், போலீசில் புகார் செய்தனர்.
விசாரணையில், யூசுப், கடந்த இரண்டு ஆண்டுகளில், 19 மாணவர்களை, பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, யூசுப்பை போலீசார் கைது செய்தனர்.அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனி சட்ட வாரியத்தை சேர்ந்த, ஷைஸ்டா அம்பர் கூறியதாவது:இது போன்ற பலாத்கார வழக்குகளில், குற்றவாளியை, பலர் முன்னிலையில், தண்டிக்க வேண்டும் என, இஸ்லாமிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆசிரியர் தவறு செய்தால், தண்டனை மிக கடுமையாக இருக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.