சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஜூன் 02, 2019
Advertisement
 'டவுட்' தனபாலு

ம.தி.மு.க., பொதுச் செயலர், வைகோ: பதவிகள் மீது எனக்கு என்றுமே ஆசை கிடையாது. கட்சியினரை பதவியில் அமர்த்தி அழகு பார்ப்பேனே தவிர, நான் அந்த பதவிக்கு ஆசைப்படுவது இல்லை.

டவுட் தனபாலு: இவ்வளவு உருக்கமாகப் பேசுறீங்க... அப்படீன்னா, தி.மு.க., சார்பில், ராஜ்யபா, எம்.பி.,யாக நீங்க தேர்வாகப் போவதில்லையா... இதை, யாருக்கு தாரை வார்க்கப் போறீங்க என்ற, 'டவுட்'டையும் விளக்கிவிட்டால் என்ன...!

தமிழக மின் துறை அமைச்சர், தங்கமணி: தமிழ்நாடு மின் மிகை மாநிலம். இங்கு மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. அதேபோல், குடிநீர் பற்றாக்குறையும் கிடையாது.

டவுட் தனபாலு: மின்வெட்டு கிடையாது; பராமரிப்புப் பணிக்காக, மின்தடை செய்யப்படுகிறதுன்னு சொல்லி இருந்தாலாவது பரவாயில்லை... மின்சாரம், தண்ணீர் இரண்டு பிரச்னைகளை இணைத்துப் பேசுவது தான், பல, 'டவுட்'களை கிளப்புது... ஊரெங்கும், காலி குடங்களோடு மக்கள் அலைபாயும் தகவல் ஏதும் உங்க காதுக்கு எட்டலையோ...!

பா.ம.க., இளைஞரணி தலைவர், அன்புமணி: எட்டு வழிச்சாலை திட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு, உழவர்களின் நிலங்கள், அவர்களுக்கே சொந்தம் என்பது உறுதி செய்யப்படும் வரை, பா.ம.க., தொடர்ந்து போராடும்.

டவுட் தனபாலு: சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற, மத்திய அரசும் உறுதியாக இருக்கு... மாநில முதல்வரும், ஆர்வமா இருக்காரு... அதன்பிறகும், எதற்கு காத்திருக்கீங்க... அவசரப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் இறங்கி விட்டால், ராஜ்யசபா, 'சீட்' கனவும் பறிபோகிடும்னு, தயக்குறீங்களோ என்ற, 'டவுட்'டுக்கு என்ன பதில் வெச்சிருக்கீங்க...!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X