பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மின் கணக்கீட்டு அட்டையில் மதமாற்ற வாசகம்
அதிகாரிகள் துணை போகிறார்களா?

சென்னை : தமிழ்நாடு மின் வாரியத்தின் மின் கட்டண அட்டைகளில், மதமாற்றம் செய்யும் வகையில், இடம் பெற்றுள்ள விளம்பரத்தால், சர்ச்சை எழுந்துள்ளது. அதிர்ச்சி அடைந்துள்ள பொதுமக்கள், துணை போன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர்.

மின் அட்டை, மதமாற்ற வாசகம், சென்னை ,மின் நுகர்வோர்,


தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழகத்தில் உள்ள வீடுகள், கடைகளில் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவை கணக்கிட, மீட்டர்களை பொருத்துகிறது. அவற்றில் பதிவாகும் அளவை, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, மின் வாரிய ஊழியர்கள் சென்று, மின் கணக்கீட்டு அட்டைகளில் குறிக்கின்றனர். இந்த மின்

கணக்கீட்டு அட்டைகளை, தனியார் நிறுவனங் களிடம் இருந்து, மின்வாரியம், நன்கொடையாக அச்சிட்டு வாங்குகிறது. அந்த அட்டையின் பின் புறத்தில், மின்சார வாரியத்தின் அறிவுரைகள் இடம் பெறும்.அட்டையின் கீழ்,சிறுபகுதியில், அட்டையை அச்சடித்து வழங்கும், நகை, ஜவுளி உள்ளிட்ட கடைகளின் விளம்பரத்தை, அச்சிட்டுக் கொள்ளலாம்.

இந்நிலையில், மதமாற்றத்தில் ஈடுபடும், குறுகிய எண்ணம் உடைய சில அமைப்புகள்,மின்சார வாரிய அதிகாரிகளை தவறாக பயன்படுத்தி உள்ளன. மின் கணக்கீட்டு அட்டையின் ஒரு புறத்தில், 'இதயம் கலங்காதிருப்பதாக...உங்களுக்காக நாங்கள் ஜெபிக்க தயாராக இருக்கிறோம்' என கூறி, மொபைல் போன் எண்களை அச்சிட்டு கொடுத்து உள்ளனர். அட்டையின் மற்றொரு பக்கத்தில், பிரசார மையத்தின் படம் இடம் பெற்றுள்ளது.வேலுார் மாவட்டத்தில்,இதுபோன்ற அட்டைகள், மின் வாரியம் வாயிலாக வினியோகிக்கப்பட்டு உள்ளன. இது, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மத அடையாளங்களுடன், மதம் மாற்றும் வகையிலான வாசகங்கள் இடம் பெற்ற

Advertisement

விளம்பரத்தை அச்சிட, தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்புதல் அளித்தது, எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதுபோன்ற செயல்பாடு கள், மத ரீதியான பிரச்னைகள் ஏற்பட வழி வகுத்து விடும்.எனவே, சர்ச்சைக்குரிய மின் கணக்கீட்டு அட்டைகளை திரும்ப பெற்று, புதிய அட்டை களை வழங்க, மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதமாற்றம் செய்யும் வகை யிலான விளம்பரம் செய்ய, துணை போன அதிகாரிகள் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


Advertisement

வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mal - Madurai,இந்தியா
03-ஜூன்-201918:50:27 IST Report Abuse

MalMr. Divahar... Government takes temple money n temple properties...so keeping temples photo is not bad ... Free all temples and give back all those lands taken by government for constructing hospitals, bus stands n donated to missionaries churches n schools back to temples ... Then we will think of what you suggested....

Rate this:
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
03-ஜூன்-201918:07:09 IST Report Abuse

Rasheelதமிழ்நாட்டில் பின் தங்கிய வகுப்பினர் மற்றும் பட்டியல் சாதியினர் மதம் மாறி சலுகைகளை அனுபவிக்கும் நபர்களுக்கு எதிராக மிக பெரிய போராட்டத்தையும் மற்றும் வழக்கையும் தொடுக்க வேண்டும். இவர்கள் பின் தங்கிய மற்றும் பட்டியல் சாதி என அரசியல் அமைப்பு சட்டத்தால் மற்றும் ஹிந்து மதத்தினர் என்ற பேரில் தான் சலுகைகளை அனுபவிக்கிறார்கள். ஆனால் மதம் மாற்றிய கிறிஸ்துவ மற்றும் முஸ்லீம் களுக்கு ஏன் இந்த சலுகை? மதம் மாற்றியவர்கள், தங்களின் சான்றிதழ்களை மாற்றாமல் இந்துமத சலுகைகளை அனுபவித்துக்கொண்டு இருப்பது எந்தவிதத்தில் நியாயம்? மற்ற மாதங்களில் சாதி முறையே கிடையாதே? அப்புறம் எதற்காக பின் வாசல் வழியாக சலுகைகளை அனுபவிப்பது பின் தங்கிய வகுப்பினர் மற்றும் பட்டியல் சாதியினர் இதை தட்டி கேளுங்கள். உங்கள் வாய்ப்புகளை இழக்காதீர்கள்.

Rate this:
03-ஜூன்-201917:45:59 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்ஒரு அட்டையை கூட அச்சிட்டு வாங்க துப்பில்லை என்றால் மின் துறையை தனியாரிடம் விற்று விட்டு செல்லுங்கள் , இப்படி பாவாடைகளிடம் விற்று எங்கள் மானத்தை வாங்க வேண்டாம்

Rate this:
Indian - COIMBATORE,இந்தியா
04-ஜூன்-201911:36:03 IST Report Abuse

Indianசொல்லித்தாரு அண்ணாமலை ஜெயராமன் ...

Rate this:
மேலும் 39 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X