அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஹிந்தி திணிப்பு என பொய் பிரசாரம்: தமிழிசை ஆவேசம்

Added : ஜூன் 02, 2019 | கருத்துகள் (34)
Share
Advertisement
ஹிந்தி திணிப்பு என பொய் பிரசாரம்:  தமிழிசை ஆவேசம்

சென்னை: 'ஹிந்தி மொழி விவகாரத்தில், இல்லாத கறுப்பு பூனையை, இருட்டில் தேடுகின்றனர்' என, தமிழக, பா.ஜ., தலைவர், தமிழிசை கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:கஸ்துாரி ரங்கன் தலைமையிலான குழு, புதிய கல்விக் கொள்கைக்கான பரிந்துரையை, மத்தியஅரசுக்கு அனுப்பியுள்ளது.அதில், மும்மொழி கொள்கை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அது, பரிந்துரை தான்; மத்திய அரசு இன்னும் ஏற்கவில்லை; முடிவும் செய்யவில்லை.'எந்த மொழியும், எந்த மாநிலத்திலும் திணிக்கப்படாது' என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெளிவாகச் சொல்லி விட்டார். அதேபோல, மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர், ரமேஷ் போக்ரியால் நிஷாங்கும், 'ஹிந்தியை திணிக்கும் எண்ணம் இல்லை' என, கூறியிருக்கிறார். இதே கருத்தை, பிரதமர் அலுவலகமும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இல்லாத கறுப்பு பூனையை, இருட்டில் தேடுகின்றனர். இனி யாரும், ஹிந்தி திணிப்பு என, பொய் பிரசாரம் செய்ய வேண்டாம்; அது, எடுபடாது.'கஸ்துாரி ரங்கன் குழு, இப்படி ஒரு அறிக்கையை எப்படி தரலாம்' என, ஸ்டாலின் கேட்கிறார். அறிக்கை கொடுக்கலாம்; அதை ஏற்றுக் கொண்டால் தானே கொள்கை முடிவு.மீத்தேன் ஆராய்ச்சிக்கு, ஸ்டாலின் கையெழுத்திட்டார். ஏன் ஆராய்ச்சிக்கு அனுமதித்து கையெழுத்திட்டார்; முதலிலேயே முடியாது என, ஏன் கூறவில்லை?பக்தவத்சலம் முதல்வ ராக இருந்த காலத்தில் தான், ஹிந்தி திணிப்பும், எதிர்ப்பாளர்கள் மீது, துப்பாக்கி சூடும் நடந்தது.

இதையெல்லாம் மறந்து விட்டு, இன்றைய காங்கிரசார், தி.மு.க.,வுடன் சேர்ந்து, ஹிந்தியை எதிர்ப்பதாக சொல்வது தான் நாடகம்.மத்திய அரசின் அலுவலகங்களில், ஹிந்தி பயன்பாட்டை அதிகரிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக செயல்பட்ட, ப.சிதம்பரம், இன்று, ஹிந்தி பயன்பாட்டை கண்டிப்பது வேடிக்கை.இவ்வாறு, தமிழிசை கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
03-ஜூன்-201923:47:19 IST Report Abuse
Rajas முப்பது ஆண்டுகளுக்கு முன் உலகில் இரண்டாவது அதிகம் தெரிந்த மொழி பிரென்ச். முன்பு மாணவர்கள் பிரென்ச் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இன்டர்நெட் வந்த பின் ஆங்கிலம் மட்டுமே முதன்மையாகி விட்டது. மருத்துவத்தில், இன்ஜினியரிங்கில், விவசாயத்தில், மேனஜ்மென்டில் இருக்கும் புத்தகங்களை படிக்க ஆங்கில அறிவு அதிகம் இருக்க வேண்டும். ஜப்பானியர்கள் மற்றும் சீனார்களே ஆங்கிலத்திற்கு மாறி விட்டார்கள். இன்னுமும் இந்தி இந்தி என்று பழைய பல்லவியையே பாடி கொண்டிருந்தாள் எப்படி. இந்தி எதற்கு தெரிய வேண்டும் என்று யாராவது சொன்னால் நல்லது
Rate this:
Share this comment
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
03-ஜூன்-201920:45:42 IST Report Abuse
Rajagopal அரசியல் கட்சிகள் துரித கதியில் அதிகாரத்தைப் பிடிக்க வேண்டுமானால், ஒருப் பெரும் எதிரியை ஏற்படுத்தி, அதை பூதாகாரமாக்கி, வன்முறையைத் தூண்டி, மக்களைத் திசை திருப்பி ஆதாயம் தேடுவது நடந்து கொண்டே இருக்கிறது. ஜின்னா பெயரில்தான் ஒரு முஸ்லீம். ஆனால், நேரு இருக்கும் வரைத் தனக்கு ஒரு நாட்டின் அதிபராக வழியே இல்லை என்பதை உணர்ந்து, திடீரென முஸ்லிம்களுக்காக ஒருத் தனி நாடுக் கோரி, அது சூடுப் பிடிக்காமல் போய், வன்முறையைக் கடைசியில் கையாண்டு, தனது குறிக்கோளை நிறைவேற்றிக் கொண்டார். அதன் பிறகு பாகிஸ்தான் நாட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று அவர்களுக்குத் தெரியவில்லை. இந்துக்களை எதிரியாகி நாடு உண்டாகி விட்டது. அது முஸ்லிம்களுக்கிடையே எந்த ஒற்றுமையையும், முன்னேற்றத்தையும் கொடுக்கவில்லை. இந்துக்கள் நிறைந்த இந்தியாவை ஒருப் பெரும் கொடூரமான மிருகத்தைப் போல ஏற்படுத்தி, அதை வைத்து இன்னும் வண்டி ஓட்ட முயன்று கொண்டிருக்கிறார்கள் அங்கே. நடுவில் இரண்டாகவும் உடைந்து விட்டார்கள். தமிழகத்தில் பெரியாரின் தொண்டர்கள் அதே மாதிரி ஆரிய-திராவிட வெறுப்பு அரசியலைப் புகுத்தி, உண்மைகளைத் திரித்து அதிகாரத்தைக் கைப்பற்ற முயலுகையில், இந்தி எதிர்ப்பு என்ற தீப்பந்தம் கிடைத்தது. அதை வைத்துப் புரளியைக் கிளப்பி, கலவரங்களும் ஆர்ப்பாட்டங்களும் செய்து 67 இல் ஆட்சியை பிடித்தார்கள். வெறுப்பை வைத்து அதிகாரத்தைப் பிடித்தவர்கள் அதை எப்படி விட்டுக் கொடுப்பார்கள்? சுதந்திரத்துக்கு முன்னால் நம் ஊரில் இந்தி, தெலுங்கு, சமஸ்க்ரிதம், ஆங்கிலம், ஆகியவை இல்லையா? அதனால் தமிழ் எந்த அளவுக்கு அழிந்திருந்தது? இரண்டாயிரம் ஆண்டுகளாக அழியாமல் வளர்ந்த மொழி, இந்தியால் எப்படி அழியும்? கேரளாவிலும், ஆந்திரத்திலும், கர்நாடகத்திலும், வங்காளத்திலும் தாய் மொழிப் பற்றில்லையா? அவர்களது மொழிகள், இத்தனை ஆண்டுகளில் இந்தியால் எத்தனை அழிந்திருக்கின்றன? தமிழை அழித்ததுத் திராவிடக் கட்சிகள். பெரியார்த் தமிழைக் காட்டு மிராண்டி பாஷை என்றவர். ஆங்கிலத்தை ஊக்குவி என்றவர். இவர்கள் இல்லாத எதிரி ஒன்றை ஏற்படுத்தி, அதி அதிகாரத்தைப் பிடித்து, பகல் கொள்ளை அடித்து, நன்றாகத் தங்களை நிலைப் படுத்திக் கொண்டு விட்டார்கள். இழப்பு சாதாரண மக்களுக்குத் தான். தமிழகத்தில் மக்களை மக்குகளாக்கி, பட்டை நாமம் போட்டுப் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மக்குகள் இருக்கும் வரை நமது மாநிலம் உருப்படாமல்தான் போகும்.
Rate this:
Share this comment
Cancel
பண்பாளன். கி - Chennai,இந்தியா
03-ஜூன்-201920:26:22 IST Report Abuse
பண்பாளன். கி எந்த ஒரு மொழியையும் பேச , படிக்க 3 அல்லது 6 மாதங்கள்போதும். இதற்க்காக ஏன் பள்ளி பருவத்தை வீணாக்க வேண்டும்?\
Rate this:
Share this comment
meenakshisundaram - bangalore,இந்தியா
04-ஜூன்-201904:04:29 IST Report Abuse
meenakshisundaramபள்ளிப்பருவத்திலே ஹிந்தி படிப்பது வீண் என்று கருதும் இவர் பள்ளிப்படிப்பிற்கு சென்றமாதிரி தெரியவில்லை. அங்கங்கே பிழைப்பைத்தேடி வயிறு கழுவ சென்ற தமிழன் ஹிந்தியில் தான் பேசுகிறான் ,'தாராவி' சென்று பார்க்கவும்,இங்கே யுள்ள சில தமிழர் தலைகளின் வாயில் ஹிந்தி ,சமஸ்க்ரிதம் நுழையாது என்று அவர்களாகவே நினைத்துக்கொண்டு ஹிந்தி எதிர்ப்பை ஒரு பிழைப்பாக செய்கிறார்கள். மேலும் ஹிந்தியை 'திணித்தால் 'தவறு என்கிறார்கள்,பொது மொழியாக கொண்டு வந்தால் நாங்கள் இரண்டாம்தர குடி (?) மகன்களாகி விடுவோம் என்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் ஹிந்தியை படிக்காததால் தான் அவர்கள் இரண்டாம் தர குடிமகன்களாக இருக்கிறார்கள் என்பதே உண்மை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X