தமிழ்நாடு

மணிமுக்தா அணை பராமரிப்பில் காய்ந்து சருகாகும் மரக்கன்றுகள் அலட்சியம்!

Added : ஜூன் 02, 2019
Share
Advertisement
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள மணிமுக்தா அணையின் கரையில் நடப்பட்ட மரக்கன்றுகள் பராமரிப்பின்றி காய்ந்து சருகாகி வருகின்றன.கள்ளக்குறிச்சி அடுத்தசூளாங்குறிச்சியில் உள்ள மணிமுக்தா அணை 1970 ஆண்டு கட்டப்பட்டு விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதன் மொத்த கொள்ளவு 36 அடி ஆகும். இந்த அணையை நம்பி 5,200 ஏக்கர் பரப்பளவிலான
 மணிமுக்தா அணை பராமரிப்பில் காய்ந்து சருகாகும் மரக்கன்றுகள்  அலட்சியம்!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள மணிமுக்தா அணையின் கரையில் நடப்பட்ட மரக்கன்றுகள் பராமரிப்பின்றி காய்ந்து சருகாகி வருகின்றன.
கள்ளக்குறிச்சி அடுத்தசூளாங்குறிச்சியில் உள்ள மணிமுக்தா அணை 1970 ஆண்டு கட்டப்பட்டு விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதன் மொத்த கொள்ளவு 36 அடி ஆகும். இந்த அணையை நம்பி 5,200 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் உள்ளன. இதில் தற்போது கோடைகால வெப்பத்தின் சீற்றத்தால் ஒரு அடி கூட தண்ணீர் இன்றி காய்ந்து கிடக்கிறது.மழை காலங்களில் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் போது மிதமான வகையில் தண்ணீர் வெளியேற்றுவதற்காக ரூ.71.16 கோடி மதிப்பில் கூடுதலாக புதிய ஷட்டர்கள் மற்றும் கரை பலப்படுத்துதல், பூங்கா உள்ளிட்ட பணிகள் கடந்த 2016ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது.
முதற்கட்டமாக அணையின் கரைகள் பலப்படுத்தப்பட்டு இரு புறமும் தடுப்பு கட்டைகள் அமைத்து தார்சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மண் அரிப்பை தடுப்பதற்கு கரைகள் முழுவதும் புல்பத்தையும் புதைக்கப்பட்டது. மேலும், பணிகள் முடியும் வரை அவ்வப்போது பெய்யும் மழை மற்றும் பருவ மழையில் புதிய ஷட்டர்கள் பகுதியில் பாதிப்பினை ஏற்படுத்தாமல் இருப்பதற்காக உட்புறத்தில் கரைகள் அமைத்து கருங்கற்கள் மூலமாக பலப்படுத்தப்படும் பணிகளும் நடந்தது.இருப்பினும் ஏற்கனவே ஷட்டர்கள் இருந்த இடத்தில் தண்ணீர் வெளியேற்றுவதற்காக பெரிய அளவிலான பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் அப்பணிகள் பாதியிலேயே நிறத்தப்பட்டு ஷட்டர்கள் வேறிடத்திற்கு மாற்றப்பட்டது. தற்போது அங்கு ஷட்டர் அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. தோண்டப்பட்ட பள்ளத்தை மண் கொட்டி சீரமைத்த பொதுப்பணித்துறையினர், அந்த இடத்தில் பூங்கா அமைப்பதற்கான பணிகளை துவக்கினர். வேம்பு, அரசு, ஆலம் உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டது.
இதனால் பல ஆண்டுகளாக காடுபோல் காணப்பட்ட இடம், பூங்காவாக உருவாகும் என மக்கள் மிகுந்து எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தால் முறையான பராமரிப்பு இல்லாமல் அங்கு நடப்பட்டுள்ள மரக்கன்றுகள் அனைத்தும் தண்ணீரின்றி காய்ந்து சருகாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியிலிருந்து தினமும் தண்ணீர் ஊற்றி பராமரிப்பதில் கவனம் செலுத்தாமல் அதிகாரிகளில் அலட்சியத்தால் மணிமுக்தா அணையின் பூங்கா உருவாகும் என்ற கனவு பலிக்காது என அப்பகுதி மக்கள் புலம்ப துவங்கியுள்ளனர்.
பொதுப்பணித்துறையில் பல்வேறு பொறியாளர்கள், அதிகாரிகள் என பலரும் பணியில் இருந்தும், மணிமுக்தா அணையின் கரை பகுதியில் பல ஏக்கர் பரப்பிலான நிலங்கள் வெறுமனே கவனிப்பாரின்றி கிடக்கின்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X