பதிவு செய்த நாள் :
 பா.ஜ.,நிதிஷ் , உரசல், மத்திய அமைச்சரவை,பீஹார்

பாட்னா : பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., இடையே உரசல் அதிகரித்துள்ளது. பீஹாரில், முதல்வர், நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை, நேற்று விரிவாக்கம் செய்யப்பட்ட போது, 'லடாய்' பகிரங்கமானது. அமைச்சர் பதவியை ஏற்க, பா.ஜ., மறுத்து விட்டது.
சமீபத்தில் நடந்து முடிந்த, லோக்சபா தேர்தலில், பீஹாரில், கூட்டணி கட்சிகளான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., அமோக வெற்றி பெற்றன. அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள, 40 இடங்களில், 16ஐ ஐக்கிய ஜனதாதளமும், 17ஐ, பா.ஜ.,வும் கைப்பற்றின.
அதைத் தொடர்ந்து நடந்த, புதிய அரசு பதவியேற்பின் போது, மோடி தலைமையிலான அரசில், ஐக்கிய ஜனதாதளம் இணைய, பீஹார் முதல்வரும், அக்கட்சியின் தலைவருமான, நிதிஷ் குமார், முட்டுக்கட்டை போட்டார்.ஏற்கவில்லை'எங்களுக்கு, மத்திய அமைச்சரவையில், ஒரு இடம் வழங்க, பா.ஜ., முன்வந்தது; அதனால், அதை ஏற்கவில்லை.
அமைச்சரவையில் இணையாவிட்டாலும், கூட்டணியில் தொடர்வோம்' என்றார். இதற்கிடையே, பீஹாரில்,

முதல்வர், நிதிஷ் குமார் தலைமையிலான அரசுக்கு, பா.ஜ., இரண்டு ஆண்டுகளாக ஆதரவு அளிக்கிறது. துணை முதல்வராக, பா.ஜ.,வின் சுஷில்குமார் மோடி மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த சிலர், அமைச்சர்களாக உள்ளனர். சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், மாநில அமைச்சர்களாக இருந்த மூன்று பேர், எம்.பி.,க் களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அங்குள்ள, முசாபர்பூர் சிறுமியர் காப்பகத்தில் நடந்த பாலியல் கொடுமை தொடர்பாக, ஒருவர், தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பல காரணங்களால், சில அமைச்சர் பதவியிடங்கள் காலியாக இருந்தன. அவர்களில், பா.ஜ.,வுக்கு கூடுதலாக, ஒரு அமைச்சர் பதவி வழங்க, நிதிஷ் குமார் முன்வந்தார்.
ஆனால், மத்திய அமைச்சரவையை, நிதிஷ்

கட்சி புறக்கணித்ததை காரணமாக வைத்து, மாநில அமைச்சரவையில் கூடுதல் பிரதிநிதித்துவம் பெற, பா.ஜ., முன்வரவில்லை. இதையடுத்து, அமைச்சரவையில், புதிதாக, எட்டு பேரை சேர்ப்பதற்கான பதவியேற்பு விழா நேற்று நடந்தது. புதிய மந்திரிகளுக்கு, கவர்னர், லால்ஜி தாண்டன், பதவிப் பிரமாணம் செய்தார்.
நிகழ்ச்சியில், முதல்வர், துணை முதல்வர், சபாநாயகர் விஜய்குமார் சவுத்ரி உட்பட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், இரு கட்சிகளுக்கும் இடையேயான உறவில் உரசல் அதிகரித்துள்ளது, வெட்டவெளிச்சமானது.

முன்வந்தார்

இது குறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், பீஹார் துணை முதல்வருமான, சுஷில்குமார் மோடி,

''ஒரு அமைச்சர் பதவியை கூடுதலாக வழங்க, முதல்வர் முன் வந்தார். அதை நாங்கள் ஏற்கவில்லை; தேவைப்படும் போது, அமைச்சர் பதவியை கேட்டுப் பெறுவோம்,'' என்றார்.
முதல்வர் நிதிஷ் குமார், கூறியதாவது : எங்களுக்குள் எந்த மோதலும் இல்லை. இரு தரப்பு உறவு சிறப்பாக உள்ளது. அமைச்சரவையில், எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களின் காலியிடங்கள், அதிகமாக இருந்ததால், அவர்கள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். பா.ஜ., காலியிடம் விரைவில் நிரப்பப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
நிதிஷ் குமார் இவ்வாறு பூசி மெழுகினாலும், தேசிய ஜனநாயக கூட்டணியின், இரு முக்கிய கட்சிகள் இடையேயான உரசல், தேர்தலுக்கு பின் அதிகரித்துள்ளது, நேற்று பகிரங்கமாகியுள்ளது.
பீஹார் மாநில, தேசிய ஜனநாயக கூட்டணியில், எந்த குழப்பமும் இல்லை. முதல்வர் நிதிஷ் குமார் தான், எங்கள் தலைவர். அவரும், கூட்டணியில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அப்படியே, உரசல் ஏதும் ஏற்பட்டால், அதை சரி செய்யும் ஊடகமாக நான் செயல்படுவேன்.
- ராம்விலாஸ் பஸ்வான் மத்திய அமைச்சர், லோக்ஜனசக்தி கட்சி


Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - tokyo,ஜப்பான்
03-ஜூன்-201919:54:20 IST Report Abuse

oceசட்டத்தின் முன் நிலையில் பதவி ஏற்பதில் சண்டையா. அது கிரிமினல் குற்றம். கவர்னர் ஆட்சி அமைப்பதை தள்ளி போடலாம்.

Rate this:
oce - tokyo,ஜப்பான்
03-ஜூன்-201919:52:41 IST Report Abuse

oceகாத்து வாங்கி கொண்டிருக்கிறார்.

Rate this:
R.Varadarajan - Chennai,இந்தியா
03-ஜூன்-201918:59:42 IST Report Abuse

R.Varadarajanபா ஜா க மீதுள்ள காட்டம் பொங்கி வழிவதில் இருந்தே வெளிப்படை சும்ம்மாவா ? வாங்கிய அடி அப்படி மோடியை சுலபமாக ஒழித்து விடுவோம் என்கிற அல் நாசர் கனவு , பகல் கனவா போயிடிச்சே அனுதாபங்கள்

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X