பொது செய்தி

இந்தியா

91 முக்கிய அணைகளில் நீர் மட்டம் கடும் சரிவு

Updated : ஜூன் 03, 2019 | Added : ஜூன் 03, 2019 | கருத்துகள் (7)
Advertisement
முக்கிய அணை, நீர் மட்டம், கடும் சரிவு

புதுடில்லி: நாட்டின் முக்கியமான, 91 அணைகளில், நீர் மட்டம், 10 ஆண்டுகளில் இல்லாத அளவில், கடுமையாக சரிந்துள்ளது.

நாட்டில், பெரும்பாலான மாநிலங்கள், கடும் வறட்சி காரணமாக, தண்ணீரின்றி பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மத்திய தண்ணீர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டில், முக்கியமான, 91 அணைகளில், நீர் மட்டம் மிகவும் சரிந்துள்ளது. இந்த அணைகளில் மொத்தம், 316.5 கோடி கன மீட்டர் நீர் தான் உள்ளது. இது, மொத்த கொள்ளளவில், 20 சதவீதம்.கடந்த, 23ம் தேதி, இது, 21 சதவீதமாக இருந்தது. ஒரு வாரத்தில், 1 சதவீதம் குறைந்துள்ளது. எனினும், ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மத்திய பிரதேசம், தமிழகம் ஆகிய மாநிலங்களில், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, நீர் கையிருப்பு, அதிகமாக உள்ளது.





கர்நாடகாவில் கடந்த ஆண்டு இருந்த நிலையே, இப்போதும் உள்ளது. ராஜஸ்தான், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம், திரிபுரா, மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, நீர் இருப்பு குறைவாக உள்ளது.

தென் மாநிலங்களான, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, தமிழகம் ஆகியவற்றில், 31 அணைகள், மத்திய தண்ணீர் ஆணையத்தின் கண்காணிப்பின் கீழ் உள்ளன.இந்த, 31 அணைகளின் மொத்த கொள்ளளவு, 5,159 கோடி கன மீட்டர். இப்போது, 591 கோடி கன மீட்டர் நீர் மட்டுமே உள்ளது. இது, மொத்த கொள்ளளவில், 11 சதவீதம்.கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், 12 சதவீத நீர் இருந்தது. கடந்த, 10 ஆண்டுகளில், இப்போது தான், மிகவும் சரிவை சந்தித்துள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GMM - KA,இந்தியா
03-ஜூன்-201908:29:46 IST Report Abuse
GMM நாட்டில் உள்ள அணைகளில் நீர்மட்டம் 10 ஆண்டு காணாத சரிவு. நீர் மேலாண்மை வளர்ச்சி புரிகிறது. உபரி நீரை தேக்க அணை. ஆனால், அணையில் குறைந்த அளவு நீர் இல்லை. மக்கள் குடிநீர் விலை கொடுத்து வாங்குகின்றனர். நிறுவனம், காலனி... லாரி மூலம் விலைக்கு தண்ணீரை வாங்கி வாங்குகின்றனர். National water ways authority யை நிறுவி, கங்கை, காவிரியை இணையுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
03-ஜூன்-201903:26:02 IST Report Abuse
jagan "தமிழகம் ஆகிய மாநிலங்களில், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, நீர் கையிருப்பு, அதிகமாக உள்ளது." இதில் இருந்தே இந்த அறிக்கையின் லட்சணம் தெரியுது
Rate this:
Share this comment
agni - chennai,இந்தியா
03-ஜூன்-201914:21:31 IST Report Abuse
agniசென்னையில் கடல் நீரை பார்த்துட்டு நீர் கையிருப்பு அதிகமாக உள்ளது அவங்க அறிக்கையை தப்பா சொல்லாதிங்க முதல் நீங்க போயி தினமும் செய்தித்தாள் படிங்க,அதில் அணைகளின் நீர்மட்டம் குறித்து போட்டுருப்பாங்க, தமிழ்நாட்டில் இந்த முதல் நாலு மாசம் ஒரு மழையும் இல்லை,அக்கினி அடித்த போதும் மழை இல்லை.போன வருஷம் சேமித்த நீரெல்லாம் நாம் பயன் படுத்தி இப்ப அணைகள் எல்லாம் காலியாகி விட்டது. கோவை, மாவட்டத்தில் பில்லூர் தவிர சிறுவாணி ,பரம்பிக்குளம் ,என மற்ற அணைகளில் நீர் வற்றி விட்டது.பாபநாசம் அணையும் வற்றிவிட்டது. மற்ற பெரிய அணைகளான மேட்டூர், பாபநாசம், மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, பவானிசாகர், முல்லைப் பெரியாறு, ஆழியாறு சாத்தனூர், திருமூர்த்தி உள்ளிட்ட பெரிய அணைகளில் நீர் இருப்பு மார்ச் மாதமே 25% அளவிற்கு கீழே குறைந்து விட்டது இந்த மே மாசம் பாபநாசம்,சில அணைகள்...
Rate this:
Share this comment
agni - chennai,இந்தியா
03-ஜூன்-201915:25:49 IST Report Abuse
agniதமிழ்நாட்டிலே நீர் கையிருப்பு அதிகமாக உள்ளது எந்த இடத்தில் சொல்லுங்கள் ? சென்னையில் கடலிலா ? நீங்க முதல தினமும் இணையத்தில் மாவட்ட செய்தித்தாள் படிங்க,அனைத்து அணைகளின் நீர் நிலவரம் அப்போது தெரியும் .தமிழ் நாட்டில் இந்த ஆண்டு மழையே இல்லை இதனால் மார்ச் மாதமே மேட்டூர், பாபநாசம், மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, பவானிசாகர், ஆழியாறு சாத்தனூர், திருமூர்த்தி உள்ளிட்ட 15 முக்கியமான பெரிய அணைகளில் 198 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட இந்த 15 அணைகளில் மார்ச் மாதமே 53 டி.எம்.சி நீர் மட்டுமே இருந்தது.இப்போ பாபநாசம் வத்திப்போச்சு மிச்ச அணைகளும் நீர் வற்றிவிடும் நிலையில் தான் இருக்கு .கோவைல,திருப்பூர் பகுதில பில்லூர் தவிர மற்ற அணைகள் எல்லாம் வற்றி விட்டன.சில பகுதிகளில் குடிநீர் பிரச்னை வர ஆரம்பிச்சிருச்சு.. தமிழ்நாட்டுல இந்த ஆண்டு முதல் நாலு மாசம் சுத்தமா மழை இல்லை கோடையிலும் மழை பெய்ய விலை அப்படியிருக்கும் போது நாம் சேமித்த நீரை தேவைக்காக பயன் படுத்தி இருக்கிறோம்,இனி பருவ மழை வரலைனா 15 நாளில தமிழ்நாட்டில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு வரும். தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் மட்டுமே நீர் எப்பவும் இருக்கு .மத்த பகுதிகளில் இனி பருவமழை பெய்தால் தான் இனி அணைகளில் நீர் வரும்....
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
03-ஜூன்-201901:08:53 IST Report Abuse
 Muruga Vel வைக்கோ சுடலை தலைமையில் இதுக்கு ஒரு போராட்டம் நடத்துவாரா ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X