போர் வெடிக்கும்: சீன ராணுவ அமைச்சர் பகிரங்க மிரட்டல்

Updated : ஜூன் 03, 2019 | Added : ஜூன் 03, 2019 | கருத்துகள் (13)
Share
Advertisement
தைவான்,சீனா, அமெரிக்கா, மிரட்டல்

சிங்கப்பூர்:'தைவான், சீனாவுக்கு சொந்தமானது என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. அதுபோல, தெற்கு சீனா கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த நினைக்கும், எந்த நாட்டையும், சீனா சும்மா விடாது. ராணுவ ரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டோம்' என, சீனா எச்சரித்துள்ளது.

உலக நாடுகளிலேயே, பல நாடுகளுடன், எல்லை மோதல் உடைய நாடு என்றால், அது சீனா தான். இந்தியா உட்பட, பத்துக்கும் மேற்பட்ட அண்டை நாடுகளுடன், எல்லைப் பிரச்னையை, சீனா கொண்டுள்ளது.மேலும், சீன கடல் பகுதியில், தைவான் உட்பட பல நாடுகளை, சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால், அந்த நாடுகள், சீனாவின் எதிரி நாடாக கருதப்படும் அமெரிக்காவுடன், நெருங்கிய நட்புறவு கொண்டுள்ளன. இது, சீனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், போர் பதற்றத்தை தணிக்கும் வகையில், சிங்கப்பூர் நாட்டில், பாதுகாப்பு மாநாடு நடந்தது. வெள்ளிக்கிழமை துவங்கிய மாநாட்டில், நேற்று முன்தினம், அமெரிக்க ராணுவ அமைச்சராக பொறுப்பு வகிக்கும், பாட்ரிக் ஷாநஹன் பேசியதாவது:

பிற நாடுகளின் ராணுவ தொழில்நுட்பங்களை திருடி, தெற்கு சீனா கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது, சீனா. இதன் மூலம், அந்த கடல் பகுதியில் உள்ள நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.அந்த பகுதியில், பல இடங்களில், போர் விமானங்களை இறக்குவதற்கான, ஓடுதளங்களை அமைத்துள்ளது. போர்க்கப்பல்களை குவித்து வருகிறது.

உலகின் மிகவும் பரபரப்பான, கப்பல் போக்குவரத்து நிலவும் அந்த பகுதியில், கட்டண வசூல் மையங்களை துவக்க, சீனா திட்டமிட்டுள்ளது. இதுபோன்ற அத்துமீறல்களை அமெரிக்கா பொறுத்துக் கொள்ளாது.இவ்வாறு அவர் கூறினார்.அப்போது, சீன ராணுவ அமைச்சர், வெய் பெங்கே, அந்த மாநாட்டு அரங்கில் இல்லை.

இந்நிலையில், நேற்று, அந்த மாநாட்டில், சீன ராணுவ அமைச்சர் பேசியதாவது:தனி நாடாக தன்னைத் தானே அறிவித்துள்ள தைவான், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி. அந்த விவகாரத்தில், பிற நாடுகளின் தலையீட்டை, சீனா விரும்பவில்லை. எங்கள் பகுதியில், ஒரு அங்குலத்தை கூட, யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.தைவான், மீண்டும் சீனாவுடன் அமைதியான முறையில் இணைய வேண்டும் என்பதையே, எங்கள் ராணுவம் விரும்புகிறது. பல நாடுகள், தன்னிச்சையாக, இந்த விவகாரத்தில் தலையிடுகின்றன.

பொறுமை எல்லை தாண்டும் போது,எங்கள் ராணுவம் சும்மா இருக்காது. எந்த நடவடிக்கைக்கும் தயாராகி விடுவோம்.தெற்கு சீனா பகுதியில், நாங்கள் எந்த வித அத்துமீறலிலும் ஈடுபட வில்லை. அந்த பகுதியில், மிகவும் குறைந்த அளவிலேயே, ராணுவத்தை நிறுத்தியுள்ளோம். அது, பிற நாடுகளை அச்சுறுத்த அல்ல. மாறாக, அந்தப் பகுதி மக்கள், குறிப்பாக, மீனவர்களின் பாதுகாப்புக்காகத் தான். அதுவும், அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே, அவ்வாறு செயல்படுகிறோம்.

எங்களுடன் அமெரிக்கா இணைந்து செயலாற்ற விரும்பினால், மோதல் இல்லாத, முரண்பாடு இல்லாத, பரஸ்பரம் மரியாதையுடைய முறையில், நேரான வழியில் இருக்க வேண்டும். அதைத் தான் நாங்கள் விரும்புகிறோம்.இவ்வாறு, அவர் பேசினார்.


latest tamil news


அதன் பின் நடைபெற்ற, இரு நாடுகளின் ராணுவ அமைச்சர்கள் சந்திப்பில், பரஸ்பரம் ஒற்றுமையாக செயல்படுவது, அதற்கான வழிமுறைகளை ஆராய்வது என, இரு நாடுகளும் முடிவு செய்தன.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - tokyo,ஜப்பான்
03-ஜூன்-201919:48:51 IST Report Abuse
oce எப்பொ வெடிக்கும் எதுக்கு வெடிக்கும் ஏன் வெடிக்கும் யாரால் வெடிக்கும் ஆனால் வெடிக்கும். அது யாருக்கும் தெரியாமல் வெடிக்கும். இது ரஜினி ஸ்டைல்.
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
03-ஜூன்-201913:02:01 IST Report Abuse
Nallavan Nallavan எப்போ வெடிக்கும் ?? எங்கே வெடிக்கும் ??
Rate this:
Cancel
சத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா
03-ஜூன்-201912:05:01 IST Report Abuse
சத்யமேவ ஜெயதே சீனா பேசுவது போல எந்த நாடும் பேசுவதில்லை. இந்தியா பல பிரிவாக பிரிந்துள்ளது. மகாபாரத காலத்தில் பண்டைய இந்தியா என்றால் ஈரான் முதல் இந்தோனேஷியா வரை கூற வேண்டும். இன்று அது போல பேச முடியமா ? சைனாவும் இப்படியே கூறிக்கொண்டு தன அண்டை நாடுகளை மிரட்டுகிறது. சைனாவில் கலகம் ஏற்பட்டால் இந்த நாடுகள் அனைத்தும் சைனாவுக்கு எதிராக தான் வேலை செய்யும். இன்று சைனா பலத்துடன் இருக்கலாம். நாளை எதுவும் நடக்கலாம். ஆக மிரட்டி பார்க்காமல், நட்புடன் இருப்பது எல்லோருக்கும் நல்லது. உலகத்தின் ஒரு மூலையில் குழப்பம் என்றால் பல நாடுகள் அதனால் பாதிப்பை அடையும் என்பது இன்றைய உலகமயமாக்கலின் தத்துவம். ஒற்றுமை என்பதே வாழ்வு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X