துவக்கம்!அடையாறு ஆறு இரண்டாம் கட்ட சீரமைப்பு பணி...திருநீர்மலை - பட்டினப்பாக்கம் இடையே ஜரூர்...2020 மார்ச்சில் முடிக்க பொதுப்பணித் துறை இலக்கு| Dinamalar

தமிழ்நாடு

துவக்கம்!அடையாறு ஆறு இரண்டாம் கட்ட சீரமைப்பு பணி...திருநீர்மலை - பட்டினப்பாக்கம் இடையே ஜரூர்...2020 மார்ச்சில் முடிக்க பொதுப்பணித் துறை இலக்கு

Added : ஜூன் 03, 2019 | கருத்துகள் (2)
Share
திருநீர்மலை முதல் பட்டினப்பாக்கம் முகத்துவாரம் வரையிலான, அடையாறு ஆற்றில், 25.4 கி.மீ., துாரத்திற்கு, 90 கோடி ரூபாய் செலவில், மேம்பாட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இப்பணிகள், 2020, மார்ச்சில் முடியும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.கூடுவாஞ்சேரியை அடுத்த ஆதனுாரில் துவங்கும் அடையாறு, மண்ணிவாக்கம், வரதராஜபுரம், முடிச்சூர், திருநீர்மலை, அனகாபுத்துார், காட்டுப்பாக்கம், மணப்பாக்கம்
 துவக்கம்!அடையாறு ஆறு இரண்டாம் கட்ட சீரமைப்பு பணி...திருநீர்மலை - பட்டினப்பாக்கம் இடையே ஜரூர்...2020 மார்ச்சில் முடிக்க பொதுப்பணித் துறை இலக்கு

திருநீர்மலை முதல் பட்டினப்பாக்கம் முகத்துவாரம் வரையிலான, அடையாறு ஆற்றில், 25.4 கி.மீ., துாரத்திற்கு, 90 கோடி ரூபாய் செலவில், மேம்பாட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இப்பணிகள், 2020, மார்ச்சில் முடியும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூடுவாஞ்சேரியை அடுத்த ஆதனுாரில் துவங்கும் அடையாறு, மண்ணிவாக்கம், வரதராஜபுரம், முடிச்சூர், திருநீர்மலை, அனகாபுத்துார், காட்டுப்பாக்கம், மணப்பாக்கம் வழியாக, பட்டினம்பாக்கம் அருகே கடலில் கலக்கிறது.இதன் மொத்த நீளம், 42 கி.மீ., ஆகும். அகலம், இடத்திற்கு ஏற்ப, 60 - 200 அடி என, மாறுபட்ட அளவில் இருந்தது. காலப்போக்கில், கரையோரம் ஆக்கிரமிப்பு அதிகரித்ததால், 20 - 100 அடியாக சுருங்கியது.காஞ்சிபுரம் மாவட்டத்தின் வடகிழக்கு பகுதிகள், தென்சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து, மழைக் காலத்தில் வெளியேறும் உபரிநீரை, கடலுக்கு எடுத்து செல்லும் பணியை, அடையாறு ஆறு செய்கிறது.லேசான மழை பெய்தாலே, ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடும். 2015ம் ஆண்டு, கன மழையில், அதிகபட்ச அளவை காட்டிலும், 10 அடி உயரத்திற்கு வெள்ளம் ஓடியது. இதனால், ஆற்றை ஒட்டியுள்ள குடியிருப்புகள் மூழ்கின.
அப்போது, வரதராஜபுரம், முடிச்சூர், அனகாபுத்துார், திருநீர்மலை பகுதிகள், அதிக பாதிப்புக்குள்ளாயின. அதன் எதிரொலியாக, அப்போதே சில ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.ஆதனுார் - மணப்பாக்கம் வரை, 22 கி.மீ., துாரத்திற்கு, 19 கோடி ரூபாய் செலவில், அடையாறு ஆறு, முழு அளவிற்கு துார்வாரி அகலப்படுத்தப்பட்டது.தற்போது, இரண்டாம் கட்டமாக, திருநீர்மலை முதல் பட்டினப்பாக்கம் முகத்துவாரம் வரை, 25.4 கி.மீ., துாரத்திற்கு, சென்னை நதிகள் சீரமைப்பு திட்டத்தின் கீழ், மேம்பாட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன.இதில், 90 கோடி ரூபாய் செலவில், துார்வாருதல், கரையை பலப்படுத்துதல், நீர் உள்வாங்கி அமைத்தல் போன்ற பணிகள் நடக்கின்றன.
திருநீர்மலையில், செம்பரம்பாக்கம் ஏரி கால்வாய் சந்திப்பில், தடுப்பு சுவர் கட்டப்பட்டு வருகிறது. ஆறு பிரிவுகளாக நடக்கும் இப்பணி, 2020, மார்ச்சுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இப்பணி முடிந்தால், 2015 கனமழை போல, மீண்டும் மழை பெய்தாலும், அடையாற்றில் ஏற்படும் வெள்ளத்தை சமாளிக்க முடியும்.
பணிகள் விபரம்!
துார்வாரி ஆழப்படுத்தி, கரையை பலப்படுத்துல்* கால்வாய்கள் இணையும் பகுதிகளான, திருநீர்மலையில் - 400, காசி தியேட்டர் அருகே - 500, சைதாப்பேட்டை - ஜாபர்கான்பேட்டை வரை - 800 மீட்டர் துாரத்திற்கு, கருங்கற்களால் கரையை பலப்படுத்துதல்* மழைக்காலத்தில், ஆற்றுக்கு மழைநீர் வரும் வகையில், எட்டு இடங்களில், நீர் உள்வாங்கி எனப்படும், மதகு அமைத்தல்தடுப்பணை கட்டலாமே!அடையாற்றில், திருநீர்மலை அருகே தடுப்பணை கட்ட, 10 ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டு, சில காரணங்களால் கைவிடப்பட்டது. தற்போது, ஆற்றின் பாதி துாரத்திற்கு, முழு அளவிற்கு அகலப்படுத்தி, ஆழப்படுத்தப்பட்டுள்ளது. மீதி துாரத்தை ஆழப்படுத்தும் பணி துவங்கியுள்ளது.இந்த நேரத்தில், தடுப்பணைகளை கட்டலாம். இதன்மூலம், தண்ணீரை சேமித்து, சுற்றுப்புற பகுதி, நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகுக்கலாம். இதன் மூலம், கோடையில் புறநகர் பகுதிகளில், தண்ணீர் தட்டுப்பாட்டை தடுக்கலாம். அதேபோல், கழிவு நீர், தோல் மற்றும் ரசாயன கழிவுகள் கலப்பதையும் தடுக்க வேண்டியது அவசியம்.-- நமது நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X