ஆன்மிகத்திற்காக இந்தியா வந்த வெளிநாட்டவர் முழு நேர விவசாயியாக மாறினார்| pilgrime turn farmer in Arovil | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆன்மிகத்திற்காக இந்தியா வந்த வெளிநாட்டவர் முழு நேர விவசாயியாக மாறினார்

Updated : ஏப் 21, 2011 | Added : ஏப் 21, 2011 | கருத்துகள் (23)
Share
புதுச்சேரி: ஆன்மிகத்தால் ஈர்க்கப்பட்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டவர், ஆரோவிலில் விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் ஹெர்பெர்ட். இவர் அந்நாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தவர். 30 ஆண்டுகளுக்கு முன், திபெத் பகுதிக்கு ஆன்மிகத்தில் ஈடுபட வந்தார். நாளடைவில் இந்திய கலாசாரங்கள் அவருக்குப் பிடித்ததால், இங்கேயே வாழ்க்கை

புதுச்சேரி: ஆன்மிகத்தால் ஈர்க்கப்பட்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டவர், ஆரோவிலில் விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்.


ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் ஹெர்பெர்ட். இவர் அந்நாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தவர். 30 ஆண்டுகளுக்கு முன், திபெத் பகுதிக்கு ஆன்மிகத்தில் ஈடுபட வந்தார். நாளடைவில் இந்திய கலாசாரங்கள் அவருக்குப் பிடித்ததால், இங்கேயே வாழ்க்கை நடத்த முடிவு செய்தார். 25 ஆண்டுகளுக்கு முன், புதுச்சேரி அருகேயுள்ள ஆரோவில் நகரில் தஞ்சமடைந்து, அந்நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றினார். துவக்கத்தில் ஆன்மிகத்தில் அதிகம் நாட்டம் கொண்ட இவர், பின்னர் விவசாயத்தில் ஆர்வம் காட்டத் துவங்கினார். ஆரோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான நிலங்களில் விவசாயம் செய்ய ஆரம்பித்தார். சேற்றில் இறங்கி ஏர் ஓட்டுவது, களையெடுப்பது, நெல் தூற்றுவது உள்ளிட்ட அனைத்து விவசாய வேலைகளையும் செய்து முழு விவசாயியாக மாறியுள்ளார்.


இது குறித்து அவர் கூறுகையில், நான் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்கு வந்தேன். இங்கு ஆன்மிக சிந்தனையில் வந்த எனக்கு, விவசாயமும் பிடித்தது. எனக்கு ஒரு முதியவர் விவசாயத்தை கற்றுக் கொடுத்தார். இங்கு விவசாயத்திற்கு ஆள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் மற்றும் ஆரோவில் பகுதிகளில் சுலபமாக வேலை கிடைப்பது போன்ற காரணங்களால் யாரும் விவசாயத் தொழிலுக்கு வருவதில்லை. இன்று நான் தனி ஒரு ஆளாக 7 ஏக்கர் நிலத்தில் பயிர் செய்து வருகிறேன். புதுச்சேரியைச் சேர்ந்த கீதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். அவரும், என்னுடன் சேர்ந்து விவசாயம் பார்க்கிறார். இதில், கிடைக்கும் வருவாயை ஆரோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து விடுகிறேன் என்றார்.


பயிர்களுக்கு மருந்து; ஹெர்பெர்ட் வேதனை: ஆரோவிலில் விவசாயம் பார்க்கும் ஹெர்பெர்ட் கூறுகையில், "பூமி என்பது ஒரு புண்ணிய தலம். இந்தப் பூமியில் விளையும் பொருள்களை நாம் உணவாகச் சாப்பிடுகிறோம். அந்த பூமியில் மருந்து தெளித்து பயிர்களை வளர்ப்பது தவறு. சிலர் மருந்து தெளித்து விவசாயம் செய்வது வேதனையாக உள்ளது. நான் சாகுபடி செய்துள்ள கரும்பு, நெல்லுக்கு மருந்துகள் தெளிப்பது கிடையாது. இயற்கை (ஆர்கானிக்) முறையில் விவசாயம் செய்து வருகிறேன். மாட்டு கோமியத்தை மருந்தாகத் தெளித்து விவசாயப் பொருட்களை அறுவடை செய்கிறேன்' என்றார்.


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X