தமிழ்நாடு

எப்போது! முறைகேடு கிரானைட் குவாரிகள் மீதான நடவடிக்கை .... அதிகாரிகளால் கிடப்பில் போடப்பட்ட ஆவணங்கள்

Added : ஜூன் 03, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
மதுரை:மதுரை மாவட்டத்தில் முறைகேடாக செயல்பட்டு அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய கிரானைட் குவாரிகள் மீதான நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது.இம்மாவட்டத்தில் அரசு விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட கிரானைட் குவாரிகளால் அரசுக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாக அப்போது கலெக்டராக இருந்த சகாயம் அறிக்கை அளித்தார். அதையடுத்து 2012 முதல் கிரானைட்
 எப்போது!  முறைகேடு கிரானைட் குவாரிகள் மீதான நடவடிக்கை .... அதிகாரிகளால் கிடப்பில் போடப்பட்ட ஆவணங்கள்

மதுரை:மதுரை மாவட்டத்தில் முறைகேடாக செயல்பட்டு அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய கிரானைட் குவாரிகள் மீதான நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது.இம்மாவட்டத்தில் அரசு விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட கிரானைட் குவாரிகளால் அரசுக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாக அப்போது கலெக்டராக இருந்த சகாயம் அறிக்கை அளித்தார். அதையடுத்து 2012 முதல் கிரானைட் குவாரிகள் தடை செய்யப்பட்டுள்ளன. அரசு, தனியார் பயன்பாட்டிற்காக கல் குவாரிகள் மட்டும் இம்மாவட்டத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.கிரானைட் குவாரி முறைகேடுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சகாயம் குழுவினர் விசாரித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த வழக்கு தீர்ப்புக்காக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முறைகேடாக செயல்பட்ட 89 கிரானைட் குவாரிகளுக்கு அரசுக்கு ஏற்பட்ட வருவாயை ஏன் அபராதமாக வசூலிக்க கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு சில குவாரி நிறுவனத்தினர் மட்டும் மாவட்ட நிர்வாகம் முன் ஆஜராகி விளக்கமளித்தனர். பெரும்பாலான கிரானைட் குவாரி நிறுவனத்தினர் விளக்கமளிக்கவில்லை.இந்நிலையில் தேர்தல், அதிகாரிகள் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை காட்டி நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது. இதை பயன்படுத்தி இந்நடவடிக்கையை நீர்த்து போக செய்யும் முயற்சிகளில் கிரானைட் குவாரி நிறுவனத்தினர் ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகள் மூலம் ஆளுங்கட்சியினரை சரிகட்டும் முயற்சியும் நடந்துள்ளது. கலெக்டர் நாகராஜன் தலையீட்டு முறைகேடு கிரானைட் குவாரிகளுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
03-ஜூன்-201911:47:54 IST Report Abuse
Manian தண்ணி பஞ்சம் த\லை விரித்தாடும்போது, இந்த குவாரிகள் வெட்டினவர்கள் அதில் மழை தண்ணிர் சேர்ந்தால் தண்ணீர் தேக்கு வாடகை காசு கேடடால், வாங்கின மாமுலை திருப்ப கொடுக்க வேண்டியது வருமே என்று கவலை படுகிறதாம் அரசு.
Rate this:
Cancel
03-ஜூன்-201906:45:25 IST Report Abuse
ஆப்பு அரசுக்குத்தானே இழப்பு? அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் இழப்பு நேர்ந்தால் தான் உடனடி நடவடிக்கை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X