தமிழ்நாடு

கோடை விழா இறுதிநாளில் குவிந்த சுற்றுலா பயணியர்: செல்லப்பிராணி கண்காட்சியில் கிரேடன் 'கிங்' சாம்பியன்

Added : ஜூன் 03, 2019
Share
Advertisement
ஏற்காடு: கோடை விழா இறுதி நாளில், ஏராளமான சுற்றுலா பயணியர் குவிந்தனர். அவர்கள், நாய் கண்காட்சியை பார்த்து ரசித்தனர். அதில், கிரேடன் இன நாய் 'கிங்' ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.சேலம் மாவட்டம், ஏற்காட்டில், கடந்த, 31ல், கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்கியது. இரு நாட்களாக, சுற்றுலா பயணியரின் கூட்டம், எதிர்பார்த்தபடி இல்லை. ஆனால், விழாவின் இறுதிநாளான நேற்று,

ஏற்காடு: கோடை விழா இறுதி நாளில், ஏராளமான சுற்றுலா பயணியர் குவிந்தனர். அவர்கள், நாய் கண்காட்சியை பார்த்து ரசித்தனர். அதில், கிரேடன் இன நாய் 'கிங்' ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில், கடந்த, 31ல், கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்கியது. இரு நாட்களாக, சுற்றுலா பயணியரின் கூட்டம், எதிர்பார்த்தபடி இல்லை. ஆனால், விழாவின் இறுதிநாளான நேற்று, ஏராளமான சுற்றுலா பயணியர் குவிந்தனர். கால்நடை பராமரிப்பு துறை சார்பில், நாய் கண்காட்சி நடந்தது. அதில், சேலம், அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து, அல்சேஷன், ஜெர்மன் ?ஷப்பர்டு, டாபர்மேன், பக், புல்டாக், பாக்சர், ஸ்பேனியல், கிரேடன், டால்மேஷன், ராட்வீலர், கோம்பை, ராஜபாளையம், சிப்பிப்பாறை உள்பட, பல்வேறு வகைகளைச் சேர்ந்த, 54 நாய்களை, அதன் உரிமையாளர்கள கொண்டுவந்தனர். இதுதவிர, சேலம் மத்திய சிறைச்சாலை, காவல் புலனாய்வு பிரிவு, ரயில்வே பாதுகாப்பு படை, சேலம் மாநகர போலீஸ் துறையில் பயன்படுத்தப்படும் நாய்கள், சாகச நிகழ்ச்சிகளை செய்து காட்டின. அதன் பயிற்சியாளர்களின் உத்தரவுப்படி, நாய்கள் செய்து காட்டியதோடு, மறைத்து வைத்த வெடிபொருட்களை கண்டுபிடித்ததால், சுற்றுலா பயணியர் ரசித்து ஆரவாரம் செய்தனர். இப்போட்டியின் ஒட்டுமொத்த சாம்பியனாக, சேலத்தைச் சேர்ந்த, சபரீசனுக்கு சொந்தமான, கிரேடன் இனத்தை சேர்ந்த, 'கிங்' நாய் தேர்வு செய்யப்பட்டது. மேலும், முதல் மூன்று இடங்கள் முறையே, ஏற்காட்டைச் சேர்ந்த, ஹரீஷ், வெங்கடேஷ், தமிழ்வாணன் ஆகியோருக்கு சொந்தமான ஜெர்மன் ?ஷப்பர்டு இன நாய்கள் வெற்றி பெற்றன. இதனால், அதை வளர்த்து வரும் உரிமையாளர்களுக்கு, பரிசு வழங்கப்பட்டது.

போக்குவரத்து மாற்றப்படாததால்... : கோடை விழாவையொட்டி, கடந்த, 31 முதல், நேற்று வரை, ஏற்காடு செல்லும் வாகனங்கள், கொண்டப்பநாய்க்கன்பட்டி வழியாகவும், அங்கிருந்து வரும் வாகனங்கள், குப்பனூர் வழியாக செல்ல, போலீசார் அறிவிப்பு வெளியிட்டனர். ஆனால், முதல் இரு நாட்கள், சுற்றுலா பயணியர் வருகை குறைவாக இருந்ததால், ஒருவழிப்பாதை அறிவிப்பை, போலீசார் கைவிட்டனர். இதனால், அனைத்து வாகனங்களும், கொண்டப்பநாய்க்கன்பட்டி மலைப்பாதை வழியாகவே சென்றுவந்தன. நேற்று, ஏற்காட்டில், ஏராளமான சுற்றுலா பயணியர் குவிந்தனர். இதனால், அங்குள்ள படகு இல்ல சாலை, அண்ணா பூங்கா சாலை, ரோஜா தோட்ட சாலை, பஸ் ஸ்டாண்ட் சாலை ஆகிய பகுதிகளில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன. போக்குவரத்தை கட்டுப்படுத்த முடியாமல், போலீசார் திணறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X