இந்தி திணிக்கப்படாது: கல்விக்கொள்கை மாற்றம்

Updated : ஜூன் 03, 2019 | Added : ஜூன் 03, 2019 | கருத்துகள் (84) | |
Advertisement
புதுடில்லி ; புதிய கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கையில் இந்தி பேசாத மாநிலங்களில், மும்மொழிகொள்கை என்ற பெயரால், இந்தி திணிக்கப்படுவதாக தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தது. இதனை அடுத்து கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கஸ்துாரி ரங்கன் குழு :சமீபத்தில், கஸ்துாரிரங்கன் தலைமையிலான குழுவினர், புதிய தேசிய

புதுடில்லி ; புதிய கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கையில் இந்தி பேசாத மாநிலங்களில், மும்மொழிகொள்கை என்ற பெயரால், இந்தி திணிக்கப்படுவதாக தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தது. இதனை அடுத்து கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.latest tamil news
கஸ்துாரி ரங்கன் குழு :


சமீபத்தில், கஸ்துாரிரங்கன் தலைமையிலான குழுவினர், புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரிடம் சமர்ப்பித்தனர். அந்த வரைவு அறிக்கை அமைச்சகத்தின் இணையதளத்தில் பொதுமக்களின் கருத்துக்காக, வெளியிடப்பட்டிருந்தது. மக்கள் இதுகுறித்த கருத்துகளை வரும் ஜூன் 30 வரை தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.


latest tamil news
தென்மாநில எதிர்ப்பு :


இந்த நிலையில், அந்த அறிக்கையில், இந்தி பேசும் மாநிலங்களில், மூன்றாவது மொழியாக ஏதேனும் ஒரு இந்திய மொழியும், இந்தி பேசாத மாநிலங்களில், இந்தி மொழியையும் கற்றுத்தர வேண்டும் என்ற முன்மொழிவு இடம் பெற்றிருப்பதாகக் கூறி இந்தியை திணிப்பதாக எதிர்ப்பு எழுந்தது. தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.


இந்தி கட்டாயமில்லை :


இதற்கு மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், பிரகாஷ் ஜவடேகர், ரமேஷ் பொக்ரியால் உள்ளிட்டோர் வரைவு அறிக்கை இறுதி முடிவல்ல என்றும், இந்தி உள்ளிட்ட எந்தமொழியும், எந்த மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது என்றும் உறுதி கூறினர். இந்த நிலையில், ஏற்கனவே வெளியிடப்பட்ட தேசிய கல்விக்கொள்கை வரைவு ஆவணம் தற்போது மாற்றப்பட்டுள்ளது.
அதில், 'மூன்றாவது மொழியாக இந்தியை ஏற்க வேண்டிய கட்டாயமில்லை,' என்று திருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (84)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naagarazan Ramaswamy - Chennai,இந்தியா
04-ஜூன்-201907:01:31 IST Report Abuse
Naagarazan Ramaswamy வட நாட்டில் சென்று வியாபாரம் செய்யும் வணிகர்கள் (பருப்பு வகைகள், பட்டாசு முதலியன), சுற்றுலா செல்பவர்கள், அங்கு சென்று படிக்கும் மாணவர்களுக்கும் இந்தி கட்டாயமாக தேவைப்படுகிறது. தாய்மொழியை (தமிழ்) புறக்கணிக்காமல் இந்தி கற்றுக்கொள்ளலாம் அவசியமும் ஆகும்
Rate this:
Cancel
03-ஜூன்-201923:15:42 IST Report Abuse
ஸ்ரீனிவாசன் அந்நிய மதம் வேணும்,அந்நிய மொழி வேணாம்.நல்லா இருக்குடா உங்க நியாயம்,
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
03-ஜூன்-201920:02:14 IST Report Abuse
J.Isaac Pugazh / coimbatore கூறும் கருத்து முற்றிலும் உண்மை . ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் வடநாட்டு நீதிபதிகள் வரவும் அவர்களது மாநிலத்தவரை ஸ்டெனோவாக நியமிப்பது மறைமுகமாக நடைமுறையில் உள்ளது . மாநிலங்களில் கீழமை நீதிமன்றங்களுக்கு மத்திய தேர்வானையம் மூலம் நீதிபதிகளை நியமிப்பது பரிசீலனையில் உள்ளது. ஏற்கனவே நீட் மூலம் கிராமபுற மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளாகள். மூன்று மொழி கொள்கையில் கிராமபுற மாணவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் பயந்து ஆரம்ப கல்வியை இடையில் விடக்கூடிய நிலை உருவாகும். ஹிந்தி ஆசிரியர்கள் நியமனத்திலும் வடநாட்டவர்க்கு வாய்ப்புகள் அதிகமாகும். தமிழர் தமிழக அனசு பணியில கூட வாய்ப்புக்களை இழப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X