இருமொழி கொள்கைக்கு ஆபத்து வந்தால்...: திமுக எச்சரிக்கை

Updated : ஜூன் 03, 2019 | Added : ஜூன் 03, 2019 | கருத்துகள் (59) | |
Advertisement
சென்னை ; தி.மு.க., எம்.பி.,க்கள் நாடாளுமன்றத்தில் கருணாநிதியின் பிரதிபிம்பங்களாக இருக்க வேண்டும். உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற முறையில் செயல்படவேண்டுமென, சென்னையில் நடந்த தி.மு.க., மாவட்டசெயலாளர்கள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.சென்னையில் உள்ள தி.மு.க., தலைமையகமான அறிவாலயத்தில், தி.மு.க., தலைவர்
தி.மு.க., தீர்மானங்கள், உரசிப்பார்க்காதீர், ஸ்டாலின்

சென்னை ; தி.மு.க., எம்.பி.,க்கள் நாடாளுமன்றத்தில் கருணாநிதியின் பிரதிபிம்பங்களாக இருக்க வேண்டும். உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற முறையில் செயல்படவேண்டுமென, சென்னையில் நடந்த தி.மு.க., மாவட்டசெயலாளர்கள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள தி.மு.க., தலைமையகமான அறிவாலயத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. இதில் மொத்தம் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில், '' இருமொழி கொள்கைக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்த ஒரு முடிவையும் தி.மு.க., எதிர்க்கும். மும்மொழித் திட்டம் என்ற பெயரில், மத்திய அரசு தமிழர்களை உரசிப்பார்க்க கூடாது. மக்களின் கருத்தை அறியாமல், மத்திய அரசு எந்த ஒரு முடிவையும் மேற்கொள்ளாது என்று நம்புகிறோம்,'' என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், 'தமிழகத்தில் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தின் டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்,'' என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கருணாநிதி பிறந்தநாள்


கருணாநிதியின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுகவினர் மரியாதை செலுத்தினர். திமுக தலைவர் ஸ்டாலின் ,மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, டி.ஆர். பாலு, ஆர்.எஸ்.பாரதி, மற்றும் தொண்டர்கள் சென்றனர். முன்னதாக அறிவாலயத்தில் உள்ள அவரது உருவ படத்திற்கு ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்தனர். தொடர்ந்து ஸ்டாலின் அன்னதானம் வழங்கினார்.

Advertisement
வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
04-ஜூன்-201903:49:49 IST Report Abuse
meenakshisundaram 'வந்தால் .அப்போ தமில் மாத்திரமே கற்போம் .அதற்கும் ஆதரவு இல்லீன்னா நாங்க படிக்கவே மாட்டோம்,,அதுவே எங்க இறுதி மூச்சு .திராவிட நாடு .இல்லையேல் சுடுகாடு. ஆஹா எப்பேர்ப்பட்ட அண்ணன்?அன்றே கூறிட்டு மறைஞ்சிட்டாரே மரீனா விலே?
Rate this:
Cancel
natarajan s - chennai,இந்தியா
03-ஜூன்-201918:31:33 IST Report Abuse
natarajan s இவர் நடத்தும் sunshine பள்ளியில் ஆங்கில மீடியமும் ஹிந்தியும்தான் பிரதானம் . ஹிந்தி படிக்கப் போவது மாணவர்கள் அவர்களிடம் கருது கேளுங்கள் அதைவிட்டு ஹிந்தி திணித்தல் என்று வெற்று கோஷம் . ஆனால் இவரது அப்பா என்ன நினைக்கிறாரோ அதைத்தான் ஏழு கோடி தமிழனும் பின்பற்ற வேண்டும் என்றுமட்டும் கூறுவாராம் அது திணித்தல் கிடையாதா ? (தமிழ் வருஷ பிறப்பை சித்திரையில் இருந்து தை மாதத்துக்கு மாற்றி உத்தரவு போட்டது என்னவாம் ) . இவங்களுக்கு தமிழும் தெரியாது ஆங்கிலமும் தெரியாது அதனால் தமிழ் கலாச்சாரமும் தெரியாது பண்பாடும் தெரியாது ம் தெரிந்த எல்லாம் வீனா போன பெரியாரிசம்தான் . நாடே குட்டிச்சுவர் ஆனது இதனால்.. இப்போதுள்ள இளைஞர்கள் விழித்து கொள்ள வேண்டும் .கூடுதலாக இந்தியை தெரிந்து வைத்திருந்தால் எவளவு நல்லது என்று வடநாட்டிற்கு சென்றால்தான் தெரியும் . மேலும் ஹிந்தி தெரிந்திருந்தால் இங்கு நிறைய பேர் தமிழ்நாட்டிற்கு வரும் வடநாட்டினருக்கு guide ஆக பணியாற்ற வாய்ப்புக்கிடைக்கும் . எதை எடுத்தாலும் ,முட்டுக்கட்டை போடத்தான் இவர்களுக்கு தெரியும் .தமிழன் அறிவுபெற்றுவிட்டால் இவர்கள் பிழைக்க முடியாதே .
Rate this:
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
03-ஜூன்-201916:36:44 IST Report Abuse
narayanan iyer திரு ஸ்டாலின் அவர்களே தங்கள் வெற்றி மகத்தானது .எங்களுக்கு தங்கள் ஏதாவது தண்ணீருக்காக செய்யவேண்டும் என்றால் தங்களின் முப்பத்தேழு எம் பி/ நூற்றி பதினொன்று எம் ஏ க்களை அழைத்துக்கொண்டு கர்நாடகா சென்று காவேரி நீரை தமிழக மக்களுக்காக கொண்டுவாருங்களேன் . மற்ற மாநிலங்களில் மூன்று மொழி கொள்கை கடைபிடிப்பதால் அவர்களின் தாய் மொழி அழிந்தாவிட்டது? நீங்களும் உங்கள் கூட்டாளிகளும் நடத்தும் பள்ளிகளில் ஏன் தமிழ் மட்டுமே போதிக்கப்படுவதில்லை ? அங்கு மட்டும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி சொல்லிக்கொடுப்பது ஏன் ? போதும் போதும் போதும் ஸ்டாலின் அவர்களே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X