"ஜெய் ஸ்ரீராம்".,க்கு போட்டியாக "ஜெய் ஹிந்த்"

Updated : ஜூன் 03, 2019 | Added : ஜூன் 03, 2019 | கருத்துகள் (35)
Share
Advertisement
கோல்கத்தா : மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் "ஜெய் ஸ்ரீராம்" என எழுதப்பட்ட 10 லட்சம் தபால் அட்டைகளை அனுப்பப் போவதாக பா.ஜ., அறிவித்திருந்தது. இதற்கு போட்டியாக பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ முகவரிகள் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கும் "ஜெய் ஹிந்த்" மற்றும் "ஜெய் வங்கம்" என எழுதப்பட்ட 20 லட்சம் தபால் அட்டைகளை அனுப்ப

கோல்கத்தா : மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் "ஜெய் ஸ்ரீராம்" என எழுதப்பட்ட 10 லட்சம் தபால் அட்டைகளை அனுப்பப் போவதாக பா.ஜ., அறிவித்திருந்தது. இதற்கு போட்டியாக பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ முகவரிகள் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கும் "ஜெய் ஹிந்த்" மற்றும் "ஜெய் வங்கம்" என எழுதப்பட்ட 20 லட்சம் தபால் அட்டைகளை அனுப்ப திரிணாமுல் காங்., திட்டமிட்டுள்ளது.latest tamil newsபா.ஜ.,வின் அரசியலில் மதத்தை கலக்கும் ஜெய் ஸ்ரீராம் முழக்கத்திற்கு எதிராகவே இந்த ஜெய் ஹிந்த் மற்றும் ஜெய் வங்காளம் தபால் அட்டைகள் அனுப்பப்பட உள்ளன என திரிணாமுல் காங்.,ன் மூத்த தலைவரும், அம்மாநில உணவுத்துறை அமைச்சருமா ஜோதிபிரியா முல்லிக் தெரிவித்துள்ளார். வனத்துறை அமைச்சர் பிரத்யா பாசு கூறுகையில், பா.ஜ., ஆர்எஸ்எஸ் போன்று எங்களுக்கு குறுகிய மனப்பான்மை இல்லை. மேற்குவங்கத்தில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவரை வங்காளர் எனவும், மகாராஷ்டிராவில் வசிக்கும் வங்காளத்தவர்களை மராத்தியர்கள் எனவுமே கூறி வருகிறோம். பிரிவினைக்கு மதத்தை பயன்படுத்தவில்லை. எங்களின் கலாச்சாரத்தை நிலை நிறுத்தவே நாங்கள் பாடுபடுகிறோம் என்றார்.


latest tamil news


ஜெய் ஸ்ரீராம் முழக்கம் தொடர்பாக சில நாட்களாகவே பா.ஜ., - திரிணாமுல் காங்., இடையே மிகப் பெரிய அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளது. பா.ஜ.,வின் பிரிவினைவாத அரசியலின் ஒரு அங்கம் தான் இந்த முழக்கம் என திரிணாமுல் குற்றம்சாட்டி வருகிறது. இதில் தங்கள் தரப்பை நியாயப்படுத்தும் வகையில் நீண்ட கட்டுரை ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ளார் மம்தா. அதில், தாங்கள் மதங்களையும், சமூக சித்தாந்தங்கள் ஆகியவற்றை மதிப்பதாகவும், அதே சமயம் அதை அரசியலுக்காக பயன்படுத்துவதை எதிர்ப்பதாகவும் மம்தா குறிப்பிட்டுள்ளார்.


latest tamil news


லோக்சபா தேர்தலில் மேற்குவங்கத்தில் அதிக இடங்களில் பா.ஜ., வெற்றியை அடுத்து பா.ஜ., - திரிணாமுல் இடையேயான மோதல் தீவிரமடைந்து வருகிறது. வன்முறை சம்பவங்களுக்கு ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்டிக் கொள்வது, ஒருவரின் கட்சி அலுவலகத்தை மற்றொருவர் கைப்பற்றுவது, மீண்டும் அதனை அந்த கட்சியினரே கைப்பற்றுவது, மம்தா செல்லும் இடங்களில் சென்று பா.ஜ.,வினர் ஜெய் ஸ்ரீராம் முழக்கமிடுவது என பல வழிகளில் மோதல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
04-ஜூன்-201904:27:27 IST Report Abuse
meenakshisundaram இதுலே அம்புட்டுலேயும் மம்தா அவர்களின் கை எழுத்து இருக்குமா?அவர் தனது வேலை விட்டு விட்டுஇதையேசெய்வாரா?இதே போல ஸ்டாலினும் எடப்பாடிக்கெதிராக செய்யலாமே?
Rate this:
Cancel
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
03-ஜூன்-201922:58:56 IST Report Abuse
Murugan இந்த தண்ட செலவு செய்யவா மக்கள் இவர்களை தேர்ந்தெடுத்தார்கள் …………..
Rate this:
Cancel
KSK - Coimbatore,இந்தியா
03-ஜூன்-201920:35:04 IST Report Abuse
KSK "நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற." Thirukural 304. இது மட்டுமல்ல, வெகுளாமை அதிகாரத்தில் உள்ள அத்தனை குறள்களும் தற்போது அதிகார போதையில் மமதை பிடித்து கோபாவேசத்தில் தம் மாநில மக்கள் மீதே அதீத கோபம் கொள்ளும் அறிவிழந்த நிலையில் உள்ள மமதைக்கு மிக சரியாக பொருந்துவது தான் வேடிக்கை. "ஜெய் ஸ்ரீராம்" என்பது தன்னை திட்டுவது, கேவலப்படுத்துவது என்ற பிறழ்ந்த மன நிலையில் உள்ள உள்ள இவரை திருத்துவது என்பது இயலாத காரியம். தனக்கு தானே கெடுதல்கள் வரவழைத்து கொண்டு விரைவில் அரசியலில் இருந்து காணாமல் போவார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X