பொது செய்தி

தமிழ்நாடு

வறட்சியில் சென்னை: காலியாகும் வீடுகள்

Updated : ஜூன் 03, 2019 | Added : ஜூன் 03, 2019 | கருத்துகள் (44)
Advertisement

சென்னை : கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னைவாசிகள் பலர், பல ஆண்டுகளாக வசித்து வரும் வீடுகளை காலி செய்து, தண்ணீர் கிடைக்கும் வேறு பகுதிகளில் குடியேறி வருகின்றனர். சிலர் விடுமுறை முடிந்து வீடு திரும்புவதை தவிர்த்து வருகின்றனர். சிலர் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு சென்று தங்கி வருகின்றனர்.

நீண்ட நாட்களாக கோடம்பாக்கத்தில் வசித்து வரும் அசோக் குமார் என்பவர் கே.கே.நகர் பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளார். அவர் கூறுகையில், ஒரு நாளைக்கு 3 மணிநேரம் மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. அதனைக் கொண்டு தண்ணீர் தேவையை சமாளிக்க முடியவில்லை. இதனால் பல சமயங்களில் வீடுகளில் இருப்பதில்லை என்றார்.
2017 ம் ஆண்டில் மழை அளவு குறைந்ததாலும், 2018 ம் ஆண்டில் பருவமழை பெய்த்ததாலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் போர்வெல்களில் தண்ணீர் இல்லை. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக இம்மாத துவக்கத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக தமிழக அரசு அறிவித்தது. இந்த மாவட்டங்களில் கடந்த ஆண்டு மழை அளவு 19 சதவீதம் முதுல் 59 சதவீதம் வரை குறைந்துள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான 4 நீர்ஆதாரங்களும் முற்றிலும் வறண்டு விட்டன.
தண்ணீர் இல்லாததால் பெருங்குடியை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர் 2 நாட்கள் தனது உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். வார விடுமுறைகளில் பெங்களூருவில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்று விடுவதாக கூறுகிறார். அண்ணா பல்கலை.,யில் திட்ட விஞ்ஞானியாக பணியாற்றி வரும் ஸ்ரீகாந்த் கூறுகையில், எனக்கு விடுமுறை கிடையாது. இருந்தும் கடந்த 10 நாட்களாக தண்ணீர் இல்லாததால் குடும்பத்தை கூட்டிக் கொண்டு, சென்னையை விட்டு சென்று விட்டேன். ஒரு வாரத்திற்கு பிறகு திரும்பிய போதும் தண்ணீர் இன்னும் வரவில்லை என அண்டை வீட்டினர் தெரிவித்தனர் என்றார்.
கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னை தீரும் வரும் கேரளாவில் உள்ள உறவினர் வீட்டில் தங்க முடிவு செய்திருப்பதாக கூறுகிறார், பெருங்குடியில் உள்ள மற்றொரு குடியிருப்பு வாசியான கோபால். தண்ணீர் பிரச்னையால் தங்கள் குடியிருப்பில் உள்ள பலரும் வீடுகளை காலி செய்து விட்டு சென்று விட்டதாக கூறுகிறார்.

Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
04-ஜூன்-201921:29:15 IST Report Abuse
Poongavoor Raghupathy Desalination of sea water is the only best solution to free Tamilnadu people from this agony. There is no point in putting the issue of less Rainfall in front of people. The Ruling Party and opposition Party are equally responsible for not taking adequate preventive measures on this important issue.Tamilnadu people have voted DMK to send 37 MPs to the Paliament and DMK is watching the agony of people and blaming Edappadi Ministry as usual.When DMK is able to shout on Hindi why they are not taking any actions to lessen the problems of water scarcity for the people.What is the use of Stalin meeting so many people to get votes and now watching the water problems being faced by the poor people. All the elected MPs and MLAs must be asked to stay in a village acute shortage of water to get the feel of the problems. DMK meets people for votes but not taking any actions when people suffer.
Rate this:
Share this comment
Cancel
Babu -  ( Posted via: Dinamalar Android App )
04-ஜூன்-201900:13:39 IST Report Abuse
Babu தமிழர்களின் எல்லா தேவைக்கும் போக உபரியான நீரை மட்டும் தான் அரசு கோக் கம்பெனிக்கும், மினரல் வாட்டர் கம்பெனிக்கும் விற்கிறதாம் அரசு அதுவும் லிட்டர் 0.035 பைசாவிற்கு. அரசு கஜானாவை நிரப்ப வேண்டுமல்லவா? இந்த விலைக்கு டென்டர் கொடுத்ததால் அவரது கஜானாவும் நிரம்புமல்லவா?
Rate this:
Share this comment
Cancel
Babu -  ( Posted via: Dinamalar Android App )
04-ஜூன்-201900:09:14 IST Report Abuse
Babu இதற்கும், ஆட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கார்பொரேட்டின் தண்ணீர் விற்பனையுடன் சம்பந்தப்படுத்தி பேசுபவன் தேசதுரோகி. தேர்தல் வரும் போது மட்டும் நல்லாட்சியின் சாதனைகள் பட்டியலிடப்படும் (அதுக்குள்ள எல்லாத்தையும் மறந்துருங்க மக்களே)
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X