அரசியல் செய்தி

தமிழ்நாடு

டில்லி பஸ், ரயில்களில் பெண்களுக்கு இலவசம்

Updated : ஜூன் 03, 2019 | Added : ஜூன் 03, 2019 | கருத்துகள் (49)
Advertisement

புதுடில்லி : டில்லி மாநகர பஸ்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பெண்கள் இனி இலவசமாக செல்லலாம் என்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.





டில்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், '' டில்லியில் மாநகர பஸ்களில் தினசரி 8.4 லட்சம் பெண்கள் பயணிக்கின்றனர். மெட்ரோ ரயில்களில் தினமும் 7.5 லட்சம் பெண்கள்பயணிக்கின்றனர். இனி, மாநகர பஸ்கள் மற்றும் ரயில்களில் கட்டணமின்றி பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். கட்டணச் செலவை டில்லி மாநில அரசே ஏற்கும். ஒருவேளை, இலவசத்தை விரும்பாத பெண்கள் கட்டணம் செலுத்த விரும்பினால், டிக்கெட் வாங்கியும் பயணிக்கலாம்,'' என்று கூறியுள்ளார்.





சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், டில்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தோற்றது. விரைவில் டில்லி சட்டமன்றத்திற்கு தேர்தல் வருகிறது. இதனை மனதில் வைத்துதான் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த இலவசத்தை அறிவித்துள்ளதாக, விமர்சனங்கள் எழுந்துள்ளன.


Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராமநாதன் நாகப்பன் பாஜக இலவசமாக கொடுத்தால் பிரமாதம். அதை மற்றவர்கள் செய்தால் கேவலம். உங்க நியாயத் தராசின் விலை என்ன?!
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
04-ஜூன்-201904:20:58 IST Report Abuse
meenakshisundaram இது இலவசம் அல்ல ,'விலையில்லா பயணம்' என்பதே சரி,இது நாளடைவில் ,குழந்தைகளுக்கு ,முதியோருக்கு ,கடைசில ஆண்களுக்கும் என்றே வரும்.கேஜ்ரிவால் இதை படிப்படியாக கொண்டுவர வாய்ப்புள்ளது .அவர் எடுக்கும் வாக்குகளை பொறுத்து இது வேறுபடலாம்.ஆனா முதல்லே இவர் சலுகை யாருக்கு கொடுக்கணும்னா -அலிகளுக்கே முதலில் கொடுத்திருக்க வேணும்.ஆனா அவிங்க மஜுரிட்டி இல்லையே ?
Rate this:
Share this comment
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
03-ஜூன்-201923:32:49 IST Report Abuse
Rajagopal இனிமேல் புடவை, புர்கா போட்டுக் கொண்டு மறைமுகமாக, டிக்கெட் வாங்காமல் ஆண்கள், பிக் பாக்கெட்டுகள், தடவும் ரோமியோக்கள் என்று நுழைந்து அழ விடப் போகிறார்கள் கெஜ்ரிவாலை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X