இவர் போல யாரென்று...

Updated : ஜூன் 03, 2019 | Added : ஜூன் 03, 2019 | கருத்துகள் (27)
Share
Advertisement
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்…சைக்கிளில்தான் பயணம்குடிசை வீட்டில்தான் சயனம்பொது குழாயில் குளியல்மெல்லிய தேகம்வெளுத்த தாடி தலைமுடிஎளிமையான பைஜாமா குர்தாஇதுதான் நமது நாட்டின் சிறு மற்றும் குறு தொழிலுக்கான மத்திய அமைச்சராக பிரதமர் மோடி தலைமையில் பொறுப்பேற்றுள்ள அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கியின் அசல் தோற்றம்.சாரங்கி என்றால் நல்லதொரு

இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்…



latest tamil news




சைக்கிளில்தான் பயணம்
குடிசை வீட்டில்தான் சயனம்
பொது குழாயில் குளியல்
மெல்லிய தேகம்
வெளுத்த தாடி தலைமுடி
எளிமையான பைஜாமா குர்தா


latest tamil news




இதுதான் நமது நாட்டின் சிறு மற்றும் குறு தொழிலுக்கான மத்திய அமைச்சராக பிரதமர் மோடி தலைமையில் பொறுப்பேற்றுள்ள அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கியின் அசல் தோற்றம்.


latest tamil news




சாரங்கி என்றால் நல்லதொரு இசைக்கருவி இந்த கருவியில் இருந்து வரும் இசை எப்படி நாடு, இனம் மொழி தாண்டி எல்லோரையும் மயக்குமோ? அது போல புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களில் பிரதாப் சந்திர சாரங்கி ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துவிட்டார் ,எளிமையின் இலக்கணம் இவரோன்றோ என்று விரும்பி ஏற்கவும் வைத்துவிட்டார்.


latest tamil news



இதற்கு காரணம் இவர் ஜெயித்து வந்த விதம் அப்படி.

ஒடிசாவின் சக்தி வாய்ந்த டி.வி.,மற்றும் செய்தித்தாளை கையில் வைத்திருக்கும் நவஜோதி பட்நாயக் என்ற காங்.வேட்பாளர் ஒரு பக்கம் (இவர் முன்னாள் முதல்வர் பிஜூ பட்நாயக்கின் மருமகன் வேறு) சிட்டிங் எம்பியும் பிஜூ ஜனதா தளத்தின் சக்தி வாய்ந்த தலைவருமான ரபிந்திரகுமார் இன்னோரு பக்கம் இப்படிப்பட்ட இரு பெரும் அசுர பணபலமி்க்க சக்திகளை வென்றுவந்துள்ளார் சாரங்கி.

சைக்கிளிலும் தொண்டர்கள் வற்புறுத்தும் போது ஆட்டோவில் மட்டுமே பயணித்து பிரச்சாரம் செய்த சாராங்கி வெற்றி வேட்பாளராக தனது குடிசை வீட்டில் இருந்து டில்லி கிளம்பும் போது ஒரு தபால் பையில் மாற்று உடையை மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்பியவர்.

அவரைத்தான் அடையாளம் கண்டு கொண்டு பிரதமர் மோடி சிறு மற்றும் குறு தொழிலுக்கான இணை அமைச்சராக்கி அழகு பார்த்திருக்கிறார்.இவர் பதவி ஏற்கும் போது கூடியிருந்த ஆறாயிரம் பேர்களும் எழுந்து நின்கு கைதட்டி வரவேற்றது எளிய வாழ்க்கை வாழ்பவர்களுக்கு கிடைத்திட்ட பெரிய அங்கீாரமாகவே பார்க்கப்பட்டது.

இத்தனைக்கும் இவர் ஒரு காலத்திலும் அமைச்சராக ஆசைப்பட்டது கிடையாது ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து துறவியாகவே விரும்பினார்.

ஆனால் அங்கு அவர்கள் தந்த ஆலோசனையின் அடிப்படையில் கிராமத்து மக்களின் முன்னேற்றத்திற்கான களம்காண ஆரம்பித்தவர் அதற்கான வெகுமதியாக இன்று தனது 64 வயதில் அமைச்சராகியுள்ளார்.

ஒடிசாவின் பாலாசோர் தொகுதியில் உள்ள கோபிநாத்பூர் கிராமத்தில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர் அங்குள்ள பல்கலையில் இளநிலை படிப்பை முடித்தவர்.

ஆன்மீகத்தில் மிகவும் நாட்டம் கொண்டவர் சிறந்த சொற்பொழிவாளர்

மக்கள் பிரச்னை எதுவென்றாலும் தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு அதிகாரிகளை பார்க்க கிளம்பிவிடுவார் பிரச்னையை முடித்துக்கொண்டுதான் வீடுதிரும்புவார்.

மடியில் கனமில்லாதவர் திருமணமாகாதவர் ஆகவே யாரையும் நேருக்கு நேர் சந்திப்பார் எவரோடும் விவாதிப்பார் சுயேட்சையாக நின்று ஒரு முறை வெற்றி பெற்றார் இவரது செயல்பாடுகளை பார்த்து மறுமுறை பாஜக தனது வேட்பாளராக நிறுத்தியது அதற்கான கடிதத்துடன் பஸ்சில் பயணித்தவர் அந்தக் கடிதத்தை தவறவிட்டதால் கடைசி நேரத்தி்ல் தன்னை சுயேட்சை வேட்பாளராக அறிவித்துக் கொண்டு மீண்டும் வென்றார்.

இப்படி இரண்டு முறை எம்எல்ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டவர் தனது சம்பளப்பணத்தை வைத்து அங்குள்ள மலைவாழ் மக்களுக்கு பள்ளிக்கூடங்களை கட்டித்தந்து படிக்கவைத்தார்.எம்எல்ஏ.,நிதியில் ஒரு பைசாகூட வீணாக்காமல் தொகுதிக்கு நன்கு செலவழித்தார்.

ஏழை இந்தியனாக ஒரு பழைய சைக்கிளுடன் எப்போதும் மக்களுடன் கலந்து களத்தில் காணப்படும் சாரங்கி முதல் முறையாக பாஜக வேட்பாளராக பாலசோர் தொகுதியில் லோக்சபா வேட்பாளராக களம் நிறுத்தப்பட்டார்.

எதிர்த்து நின்ற வேட்பாளர்கள் தங்கள் சொத்து மதிப்பாக 104 கோடியையும் 72 கோடியையும் கணக்கில் காட்ட இவரே எம்எல்ஏ பென்சனில்தான் வாழ்வதாக சொல்லியிருக்கிறார்.

12 ஆயிரத்து 956 ஒட்டுக்கள் வித்தியாசத்தில் ஜாம்பாவன்களை குப்புறத்தள்ளி வெற்றி வாகை சூடியுள்ளார்.இவர் வெற்றி பெற்றார் என்று சொல்வதை விட எதற்கும் விலை போகாமல் ஒரு எளிய உண்மையான மனிதரை வெற்றி பெறச் செய்து தொகுதி மக்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மு.நா.பூங்கொடி செந்தில்குமார்,மதுரை. ஆன்மீக ,அரசியல் வழிகாட்டியாக திகழ்கிறீர்கள் பாராட்டுக்கள்.......
Rate this:
Cancel
abhinandan jain - chennai,இந்தியா
12-ஜூன்-201916:08:00 IST Report Abuse
abhinandan jain LovelyMarees இவற மாதிரி ஆட்களை தேர்வுசெய்த அந்த தொகுதி வாக்காளர்களை பாராட்ட வேண்டும்.
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
16-ஜூன்-201903:12:58 IST Report Abuse
Amal Anandanஇவர் ஒரு கிரிமினல் இதில் இவரை தேர்ந்தெடுத்த முட்டாள்களுக்கு பாராட்டு ஒரு கேடா?...
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
12-ஜூன்-201912:38:19 IST Report Abuse
madhavan rajan இவர் தமிழ் நாட்டில் எந்த தேர்தலில் நின்றிருந்தாலும் நோட்டாவை விட குறைந்த வாக்குகளே பெற்றிருப்பார். அவ்வளவு நேர்மையான அறிவாளிகள் நமது மாநிலத்து வாக்காளர்கள். சுடலையைப் போல, ராகுலைப் போல பொய் சொல்லாத தெரியாதவர்களெல்லாம் அரசியலுக்கு வந்து என்ன செய்யப்போகிறார்கள்?
Rate this:
Gopi - Chennai,இந்தியா
13-ஜூன்-201916:06:21 IST Report Abuse
Gopiஇன்னொண்ணையும் விட்டுடீங்களே . நம்ம கனி மாதிரி ராசா மாதிரி கார்த்தி மாதிரி தயாநிதி மாதிரி அப்பழுக்கற்ற தங்கங்களை தேர்ந்தெடுத்தவர்கள் வாழ்க வாழ்க...
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
16-ஜூன்-201903:13:39 IST Report Abuse
Amal Anandanகண்டிப்பாக தமிழகத்தில் இவர் ஓட்டுவாங்க வாய்ப்பேயில்லை ஏனென்றால் இந்தா ஆள் கிரிமினல்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X