பெண்ணை நடுரோட்டில் எட்டி உதைத்த எம்.எல்.ஏ.,

Updated : ஜூன் 04, 2019 | Added : ஜூன் 03, 2019 | கருத்துகள் (58)
Advertisement

ஆமதாபாத் : தண்ணீர் பிரச்னை குறித்து பேச வந்த, தேசியவாத காங்., பெண் பிரமுகரை, குஜராத்தைச் சேர்ந்த, பா.ஜ., - எம்.எல்.ஏ., அடித்து உதைத்த, 'வீடியோ' சர்ச்சையை ஏற்படுத்தியது.அதையடுத்து, அந்தப் பெண்ணை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டதுடன், ராக்கி கட்ட வைத்து, அண்ணனாக மாறினார், அந்த எம்.எல்.ஏ.,







குஜராத்தில் ஆமதாபாத் மாவட்டம் நரோடாவில், தேசியவாத காங்., கட்சி பிரமுகரான, நீது தேஜ்வானி, தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கேட்டு, எம்.எல்.ஏ.,வான பல்ராம் தவானியின் வீட்டுக்கு, மேலும் சில பெண்களுடன் சென்றார். அந்தப் பெண்ணின் கன்னத்தில், எம்.எல்.ஏ., அறைந்தார். கீழே விழுந்த அந்த பெண்ணின் வயிற்றில், காலால் எட்டி உதைத்தார்.இது தொடர்பான வீடியோ, சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது. அதைத் தொடர்ந்து, 'எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தேசியவாத காங்., மற்றும் காங்., கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.








இது தொடர்பாக, நீது தேஜ்வானி கூறியதாவது: எம்.எல்.ஏ., பல்ராம் தவானியின் சகோதரர், கிஷோர் தவானி, எங்கள் பகுதியின் கவுன்சிலராக உள்ளார். இந்தப் பகுதியில், சட்டவிரோதமாக சிலர், குடிநீர் இணைப்பை எடுத்திருந்தனர். இது தொடர்பான பிரச்னை நடந்து வருகிறது. இந்த நிலையில், அந்த குடிநீர் இணைப்புகளை, கிஷோர் தாவனி துண்டித்தார். இது தொடர்பாக அவருடன் பேசியபோது, எங்களை மோசமான வார்த்தைகளால் திட்டியதுடன், தாக்கினார். இது தொடர்பாக முறையிடுவதற்காக, எம்.எல்.ஏ., வீட்டுக்கு, சில பெண்களுடன் சென்றேன். ஆனால், பல்ராம் தவானியும் என்னை தாக்கினார். அதை தடுக்க வந்த என் கணவரை, எம்.எல்.ஏ.,வின் ஆட்கள் தாக்கினர். இவ்வாறு, அவர் கூறினார்.

இந்த நிலையில், நீது தேஜ்வானியின் வீட்டுக்குச் சென்று, பல்ராம் தவானி மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், ராக்கி கட்ட வைத்து, தங்கையாக்கி கொண்டார். இது குறித்து, பல்ராம் தவானி கூறியதாவது: ஆத்திரத்தில் அவசரப்பட்டு விட்டேன். நடந்த தவறுக்கு, என்னுடைய தங்கையிடம் மன்னிப்பு கேட்டு விட்டேன். இனி இது போன்ற சர்ச்சை ஏற்படாமல் பார்த்து கொள்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.









இந்த சம்பவத்துக்கு, மாநில பா.ஜ., கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது. கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் பாரத் பாண்டயா கூறியதாவது: இந்த சம்பவம், கட்சிக்கு அவப் பெயரை ஏற்படுத்தி உள்ளது. காந்தி பிறந்த மண்ணில், வன்முறைக்கு இடம் கிடையாது. அதுவும், பொது சேவை புரிபவர், நிதானத்துடன் நடந்து கொண்டிருக்க வேண்டும். இந்தப் பிரச்னையை, கட்சி தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
04-ஜூன்-201918:42:18 IST Report Abuse
D.Ambujavalli பரவாயில்லை உதைத்து விட்டு ராக்கி கட்டினால் போலீஸ், சட்டத்திலிருந்து தப்பிக்கலாம் நல்ல யுக்திதான் நம்மூர் பிரியாணி பஜ்ஜிக்கெல்லாம் நல்ல முன்னோடி
Rate this:
Share this comment
Cancel
SELF -  ( Posted via: Dinamalar Android App )
04-ஜூன்-201915:18:44 IST Report Abuse
SELF எம் எல் ஏ என்றால் ரவுடித்தனம் செய்வது தானா.
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
04-ஜூன்-201913:25:49 IST Report Abuse
Tamilan நிலைமை மோசமாகும் பட்சத்தில் இவரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டால் இழந்த ஓட்டுக்களை விட அதிக ஓட்டுக்களை கவர்ந்து விடலாம் என்பது பி ஜெ பி தலைமைக்கு தெரியாதது இல்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X