அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
180 தொகுதிகளில் வெற்றி பெற தயாராகுங்கள்

'சட்டசபை பொதுத்தேர்தலை சந்தித்து, ஆட்சி அமைக்க முயற்சிப்போம். தமிழகத்தில், 150 - 180 தொகுதிகளில் வெற்றி பெற தயாராகுங்கள்' என, தி.மு.க., - எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, அக்கட்சி தலைவர், ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை, 180 தொகுதி, ஸ்டாலின் ,பூத் கமிட்டி, கண்காணிப்பு கூட்டம், சட்டசபை


தி.மு.க., மாவட்ட செயலர்கள் , எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், அக்கட்சியின் தலைமை அலுவலகமான, சென்னை, அறிவாலயத்தில், நேற்று நடந்தது. இதில், ஒன்பது சட்ட சபை தொகுதிகளின் இடைத்தேர்தல் மற்றும் தேனி லோக்சபா தொகுதியில், தி.மு.க., தோற்றதற்கான காரணங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசியதாவது : நடந்து முடிந்த, 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்றிருந்தால், அ.தி.மு.க., ஆட்சி கவிழ்ந்திருக்கும்; தி.மு.க., ஆட்சி அமைந்திருக்கும். ஒன்பது தொகுதிகளில், நாம் தோற்றதால், ஆட்சி அமைக்க முடியாமல் போய் விட்டது.

லோக்சபா தேர்தலில், நமக்கு வெற்றி வாய்ப்பு இல்லாதவை என, கருத்துக் கணிப்பில்

தெரிவிக்கப்பட்ட தொகுதிகளிலும், நாம் வெற்றி பெற்றுள்ளோம். தேர்தலுக்கு முன், 'நமக்கு நாமே பயணம், கிராம சபை' கூட்டமெல்லாம் நடத்தி, மக்கள் நம்பிக்கையை பெற்றுள்ளோம். 'பூத் கமிட்டி' கண்காணிப்பு கூட்டம் நடத்தினோம்.

அதைப்போல, உள்ளாட்சி தேர்தலில், மாவட்ட செயலர்கள், தங்களுக்கு கீழ் உள்ள நிர்வாகிகளின் செயல்பாட்டை கண்காணிக்க வேண்டும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவரும், மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். முதலில், மக்களின் நம்பிக்கையை பெறுங்கள்; பின், தேர்தலுக்கு தயாராகுங்கள்.

அ.தி.மு.க., ஆட்சி, தானாகவே கவிழும். சில காரணங்களால், எந்த நேரமும் கவிழலாம். அந்த காரணங்களை, நான் சொல்ல முடியாது. ஆட்சியை கவிழ்த்து, தி.மு.க., ஆட்சி அமைக்கப்படுமா என, உங்களிடம் எதிர்பார்ப்பு இருக்கலாம். ஆனால், அ.தி.மு.க., ஆட்சியில், அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது. இந்த நேரத்தில், நாம் ஆட்சி பொறுப்பேற்றால், நமக்கு தான் கெட்ட பெயர் உருவாகும். கடந்த, 2006ல் நடந்த, தி.மு.க., ஆட்சியில், கூட்டணியில் இருந்த, பா.ம.க., உள்ளிட்ட சில கட்சிகள், நமக்கு அளித்த நிபந்தனைகள், நெருக்கடிகளால், அந்தக் கட்சிகள் தான் லாபம் அடைந்தன.

அதுவே, நம் தோல்விக்கு காரணமாகி விட்டது. எனவே, சட்டசபை பொதுத் தேர்தலை எதிர்பார்ப்போம்.

Advertisement

அப்போது, மக்களை சந்தித்து, தி.மு.க., பெரும்பான்மையுடன் வெற்றி பெற உழைப்போம். குறைந்தபட்சம், 150 முதல் அதிகபட்சமாக, 180 தொகுதிகள் வரை வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தால் தான், மக்களுக்கு நல்லாட்சி தர முடியும். எனவே, அந்த அளவுக்கு வெற்றி பெற, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்களும், எம்.எல்.ஏ.,க்களும் தயாராக வேண்டும். இவ்வாறு, ஸ்டாலின் பேசியதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

விசாரணை குழு!

இடைத்தேர்தல் தோல்விக்கு, மாவட்ட செயலர்கள் கூறிய காரணங்களை, ஸ்டாலின் ஏற்க மறுத்து விட்டார். 'எதுவும் நம்பும்படியாக இல்லை. ஒன்பது தொகுதிகள் தோல்விக்கு, என்ன காரணம் என்பதை கண்டறிய, விசாரணை குழு அமைக்கப்படும். அக்குழு, விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பித்த பின், காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.


- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - tokyo,ஜப்பான்
07-ஜூன்-201921:36:01 IST Report Abuse

oceஏம்பா எதிர்க்குரல் நீ எதற்கு கூக்குரலிடுகிறாய்.

Rate this:
oce - tokyo,ஜப்பான்
07-ஜூன்-201921:34:14 IST Report Abuse

oceஊரோடு ஒத்து போகாமல் இவர்களுக்கு மட்டும் என்ன நாத்திகம் வாழ்கிறது.

Rate this:
N.DURAI - trivandrum,இந்தியா
06-ஜூன்-201913:03:05 IST Report Abuse

N.DURAIஐயையே , இந்தாளு தொல்லை தாங்கலியே. பொழுது விடிஞ்சி பொழுது போனா, திமுக ஆட்சிக்கு வரும்னு கூவறாரே.

Rate this:
மேலும் 55 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X