பொது செய்தி

தமிழ்நாடு

கட்டமைப்பு முடிந்த பூங்காக்களில் உரம் தயாரிக்கும் பணி துவக்கம்

Added : ஜூன் 04, 2019
Share
Advertisement
 கட்டமைப்பு முடிந்த பூங்காக்களில் உரம் தயாரிக்கும் பணி துவக்கம்

சென்னை:பிளாஸ்டிக் தொட்டி, மூங்கில் மற்றும் உறை பள்ளம் அமைக்கப்பட்ட பூங்காக்களில், மக்கும் குப்பையில் இருந்து, உரம் தயாரிக்கும் பணி துவங்கப்பட்டு உள்ளது.
மாநகராட்சியில், மக்கும் மற்றும் மக்காத குப்பையை தரம் பிரித்து, மறுசுழற்சி செய்ய, திடக்கழிவு மேலாண்மை துறை வாயிலாக, பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், கல்வி நிறுவனங்களில் சேகரமாகும் கழிவுகளை, அவர்கள் வளாகத்திலேயே, மறு சுழற்சி செய்ய தீவிரமாக்கப்பட்டு உள்ளன.பிளாஸ்டிக் தொட்டிகடந்த மாதம், மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் வகையில், மாநகராட்சி பூங்காக்களில் கட்டமைப்புகள் அமைக்க வேண்டும் என, மாநகராட்சி கமிஷனர், பிரகாஷ் உத்தரவிட்டிருந்தார்.இதையடுத்து, பூங்காக்களில், பழுதடைந்த பிளாஸ்டிக் தொட்டி, மூங்கில் பள்ளம் அமைக்கப்பட்டது. பிளாஸ்டிக் தொட்டி, குடிநீர் வாரியத்தில் இருந்து போதிய அளவு கிடைக்காததால், உறை பள்ளம் அமைக்கப்பட்டது.இந்த பணி முடிந்த நிலையில், உரம் தயாரிக்கும் நடவடிக்கை துவங்கப்பட்டு உள்ளது.ஈரக்கழிவுகளான உணவு, காய்கறி, மாமிசம், பழம், தோட்டக்கழிவுகள், உலர் கழிவு மரம், காகிதம் உள்ளிட்ட கழிவுகளை, விஞ்ஞான ரீதியாக மறுசுழற்சி செய்து, உரம் தயாரிக்கும் பணி துவங்கப்பட்டு உள்ளது.திரவம்சோழிங்கநல்லுார் மண்டல, கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள பூங்காவில், உரம் தயாரிக்கும் பணி துவங்கப்பட்டது.
இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:ஓட்டல், சந்தை, வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்பில் சேகரமாகும் மக்கும் குப்பையை, பூங்காவில் அமைக்கப்பட்ட கட்டமைப்பில் கொட்டுகிறோம்.ஒவ்வொரு நாள் கொட்டும் போதும், அதற்கு மேல், தயிர், வெல்லம் கலந்த திரவத்தை தெளித்து விடுவோம்.பள்ளம் நிரம்பியதும், 40 நாட்கள் பதமான பின் உரமாக கிடைக்கும். அதை, பூங்கா தேவைகளுக்கு பயன்படுத்தி, மீதமாகும் உரத்தை, விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X