அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
 சட்டசபை, சபாநாயகர், தனபால்,அ.தி.மு.க., நம்பிக்கை இல்லா தீர்மானம்,

தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் மீதான, நம்பிக்கை இல்லா தீர்மானத்தை, அ.தி.மு.க., வினர் சிலரது ஆதரவுடன், சட்டசபையில் நிறைவேற்ற, தி.மு.க., ரகசிய திட்டம் வகுத்துள்ளதால், முதல்வர், இ.பி.எஸ்., ஆட்சி நீடிக்குமா என்ற, கேள்வி எழுந்துள்ளது.

அதனால், ஆட்சியை தக்க வைக்க, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை அழைத்து, சென்னையில், நேற்று முதல்வரும், துணை முதல்வரும் பேச்சு நடத்தினர். 'சபாநாயகர் மீதான, நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடிக்க, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்' என்றும் கேட்டுக் கொண்டனர்.லோக்சபா தேர்தல் மற்றும் 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை, அ.தி.மு.க., சமீபத்தில் எதிர்கொண்டது.

லோக்சபா தேர்தலில், மெகா கூட்டணி அமைத்தும், ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது; மற்ற தொகுதிகளில், தோல்வியை சந்தித்தது. இழுக்க முயற்சி அதே நேரத்தில், சட்டசபை இடைத்தேர்தலில், ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது. இதற்கிடையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை இழுக்க, தி.மு.க., முயற்சிப்பதாக, தகவல் வெளியானது. சபாநாயகருக்கு எதிராக, நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்துள்ள, தி.மு.க., தலைமை,

அந்த தீர்மானத்தை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சிலரின் ஆதரவுடன், சட்டசபையில் வெற்றி பெற வைக்க, முயற்சித்து வருகிறது.

ஆளும் கட்சியை சேர்ந்த சில, எம்.எல்.ஏ.,க்களிடம், தி.மு.க., தரப்பில் பேசப்பட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது. இதில், தி.மு.க., வெற்றி பெற்று விட்டால், இ.பி.எஸ்., ஆட்சிக்கு ஆபத்து வந்து விடும். அ.தி.மு.க., ஆட்சி பெரும்பான்மை இழந்து விட்டதாக, தி.மு.க., பிரச்னையை கிளப்பும்; ஆட்சி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்து விடும்.எனவே, தி.மு.க.,வின், இந்த முயற்சியை முறியடிக்க வேண்டிய கட்டாயத்தில், அ.தி.மு.க., தலைமை உள்ளது.ரகசிய பேச்சுஅதற்காக, முதல்வர், இ.பி.எஸ்., மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர், நேற்று தங்கள் கட்சி, எம்.எல்.ஏ.,க்களை அழைத்துப் பேசினர்.

இந்த சந்திப்புக்கு முன்னதாக, நேற்று முன்தினம், முதல்வர், இ.பி.எஸ்., அனைத்து, எம்.எல்.ஏ.,க்களையும், தனித்தனியாக, தொலைபேசியில் அழைத்து, ரகசியமாக பேசி உள்ளார். அப்போது, அவர்களின் தேவைகளையும், கோரிக்கைகளையும் கேட்டுள்ளார்;

அவற்றை உடனடியாக நிறைவேற்றித் தருவதாகவும், உறுதி அளித்துள்ளார். சென்னைக்கு வரும்படியும், அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.வாக்குறுதிஅதை ஏற்று நேற்று, ஆளும் கட்சி, எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் மாவட்ட செயலர்களுடன், முதல்வர், இ.பி.எஸ்.,சை, அவரது வீட்டில் சந்தித்தனர். அப்போது, துணை முதல்வர் பன்னீர்செல்வமும்

இருந்தார். மாவட்ட செயலர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களிடம், தேர்தல் தோல்விக்கான காரணங்களை இருவரும் கேட்டுள்ளனர். பண விவகாரம் உள்ளிட்ட பல காரணங்களை, அவர்கள் பட்டியலிட்டு உள்ளனர். அதையெல்லாம் கேட்ட பின், 'ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை எதிர்கொள்ள, நீங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்' என, முதல்வரும், துணை முதல்வரும் வலியுறுத்தினர்.

மேலும், 'சட்டசபையில், தி.மு.க., கொண்டு வர உள்ள, நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிக்க, அனைவரும் ஒற்றுமையாக இருந்து, ஒத்துழைக்க வேண்டும். 'இனி வரும் தேர்தலில் வெற்றி பெற, முழுமையாக உழைக்க வேண்டும். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், நாங்கள் செய்வோம்' என, வாக்குறுதி அளித்து உள்ளனர்.

முதல்வருக்கு பல் வலி!

எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பு நிகழ்ச்சி, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், முதல்வர், இ.பி.எஸ்.,சுக்கு பல் வலி ஏற்பட்டுள்ளதால், வீட்டிலேயே சந்திக்கலாம் எனக் கூறி விட்டார். அதனால், சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள, அவரது வீட்டில் நடத்தப்பட்டது.


- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish Sami - Trivandrum,இந்தியா
04-ஜூன்-201921:17:09 IST Report Abuse

Krish Samiஸ்டாலின் கீழ்த்தரமாக எம் எல் ஏக்களை இழுத்து ஆட்சியை கலைத்தால், நாளை தான் ஆள முடியும் என கனவு காண வேண்டாம். அது கானல் நீர்தான்.

Rate this:
raju - chennai,இந்தியா
04-ஜூன்-201919:11:27 IST Report Abuse

rajuஉங்க அப்பன் சுடாலின்

Rate this:
raju - chennai,இந்தியா
04-ஜூன்-201919:09:58 IST Report Abuse

raju2019 ஸ்டாலின் முதல்வர்

Rate this:
மேலும் 37 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X