இயற்கையை காப்போம்!

Added : ஜூன் 04, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
'புறந்துாய்மை நீரான் அமையும் அகந்துாய்மை வாய்மையால் காணப் படும்' என்ற வள்ளுவன் குறளுக்கு ஏற்ப துாய்மை என்பது நமக்கு மிகவும் அவசியம். புறந்துாய்மையான சுற்றுச்சூழல் துாய்மை மிகவும் முக்கியமாகும். சுற்றுச்சூழலை பாதுகாக்க மத்திய-, மாநில அரசுகள் பல திட்டங்களை வகுத்து கொடுத்தாலும் அதை முறையாக பின்பற்றுவது சமூகத்தின் கடமை 1976ம் ஆண்டு 42-வது சட்டதிருத்தத்தின்படி மனித
புறந்துாய்மை, இயற்கை, ஆறுகள், சூழல்,குடிநீர்

'புறந்துாய்மை நீரான் அமையும் அகந்துாய்மை வாய்மையால் காணப் படும்' என்ற வள்ளுவன் குறளுக்கு ஏற்ப துாய்மை என்பது நமக்கு மிகவும் அவசியம். புறந்துாய்மையான சுற்றுச்சூழல் துாய்மை மிகவும் முக்கியமாகும்.

சுற்றுச்சூழலை பாதுகாக்க மத்திய-, மாநில அரசுகள் பல திட்டங்களை வகுத்து கொடுத்தாலும் அதை முறையாக பின்பற்றுவது சமூகத்தின் கடமை 1976ம் ஆண்டு 42-வது சட்டதிருத்தத்தின்படி மனித கடமைகளின் ஒன்று சுற்றுச்சூழலை பாதுகாப்பது. 'இந்திய குடிமக்கள் அனைவரும்
காடுகள், ஏரிகள், கடல்கள், ஆறுகள், வனவிலங்குகள் போன்ற இயற்கை சூழலை பாதுகாக்க வேண்டும்' என்பது தலையாய கடமையாக குறிப்பிடப்பட்டுள்ளது.


சுற்றுச்சூழல் பாதிப்புநிலம், நீர், காற்று, நெருப்பு, வானம் இந்த ஐந்தை சுற்றி தான் சுற்றுச் சூழல் செயல்படுகிறது. முதலில் நிலத்தில் விதை மட்டும் விதைத்தோம். தற்போது பிளாஸ்டிக் என்ற எமனை சேர்த்து புதைப்பதால் நிலத்தில் மலட்டுத்தன்மை ஏற்பட்டு விட்டது.

தொழிற்சாலை கழிவுகளில் இருந்து வெளியேறும் நச்சு விஷத்தன்மை மண்ணையும் நீரையும் ஒரு சேர நாசமாக்குகிறது. பிளாஸ்டிக், பாலிதீன் பைகளை விளை நிலங்களில் கொட்டுவதாலும், காற்றின் மூலம் அவை அடித்து செல்லப்படுவதாலும், அது மக்க பல வருடம் ஆகின்றன. நிலத்தில் புதையுண்ட பிளாஸ்டிக் முலம் விவசாய நிலங்கள் மாசுபட்டு வீரியமிக்க செடி, கொடிகள் வளர்ச்சி தன்மையை இழந்து விடுகின்றன. நிலத்தில் இயற்கை உரங்களுக்கு பதிலாக செயற்கை உரங்களை பயன்படுத்துவதன் விளைவாக மனிதனின் நோயின் தன்மை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

இன்றைய பெரும்பிரச்னையாக இருப்பது குடிநீர் மாசடைவது. இந்தியாவில் நல்ல நீரை விட சாக்கடை நீர் அதிகமாக ஓடுகிறது.ஆய்வின் அடிப்படையில் இந்தியாவில் 4 சதவீதம் நன்னீர் மட்டுமே உள்ளன. அதைவிட தமிழ்நாட்டில் 3.5 சதவீதம் நன்னீர் அளவு இருப்பது எவ்வளவு துாரம் தண்ணீர் சுற்றுச்சுழலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் சராசரி ஒரு நாளைக்கு பயன்படுத்த குறைந்தது ஐந்து லிட்டர் தண்ணீர் தேவைப்படும். அந்த நீரை ஆறு, கிணறு, ஏரிகள், குளம், ஆழ்துளைக் கிணறுகள் மூலம் எடுக்கிறோம். அந்த நீர் இன்று மாசுப்பட்டுள்ளது. இந்தநீரை குடிப்பது மூலம் குடல் நோய்களும், மனிதனுக்கும், பறவைகளும், விலங்குகளுக்கும் தோல் நோய்களும் ஏற்படுகிறது.


சுவாசிக்கும் காற்றுநாம் சுவாசிக்கும் காற்றும் மாசு பட்டிருப்பது அபாயகரமானது. தொழிற்சாலைகளில் இருந்து கரியமில வாயுக்கள் வெளிப்பட்டு வான் மண்டலத்தையும் பாதித்து ஓசோன் படலத்தை ஓட்டையாக்குகிறது. பீடி, சிகரெட் புகைப்பதால் அந்த புகை காற்றின் முலமாக மற்ற மனிதர்களுக்கு பரவி நோய்கள் உருவாகின்றன.

பல ஆண்டுகளான வாகனங்களின் டீசல் புகையும் சுற்றுச்சூழலுக்கு பெரும்கேடு. தலைநகர் டில்லியில் அதிகமான புகை காரணமாக பழைய வாகனங்களை நகரில் பயன்படுத்த அரசு தடை விதித்து உள்ளது. அவ்வளவு அளவுக்கு புகை மண்டலமாக இந்தியா உருவாகி வருகிறது.
ஒலிமாசும் முக்கியமான விஷயம். வாகன ஒலி,தொழிற்சாலைகள் ஒலியால் மாசு ஏற்படுகிறது. ஒலி அதிகமாக மனிதன் மன அமைதியும்,உடல் நலமும் பாதிப்படைகிறது. செவிப்பறைகள், நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது. வானம் ஏழு வானவில் கலர்களை விட பல கலராக மாறக் காரணம் சுற்றுச் சூழல் பாதிப்புதான். தொழிற்சாலை புகை மூலம் வானம் இன்னும் கருமேகமாக மாறி வருகிறது. எரிபொருள் மூலமாக வெளிப்படுகின்றன கரித்துகள், கார்பன் மோனாக்சைடு, கால்பன்-டை- ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு, காரீயம் ஆகியவை வளிமண்டலத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

நாம் சுவாசிக்கும் காற்றும் மாசுபட்டிருப்பது அபாயகரமானது. தொழிற்சாலைகளில் இருந்து கரியமில வாயுக்கள் வெளிப்பட்டு வான் மண்டலத்தையும் பாதித்து ஓசோன் படலத்தை ஓட்டையாக்குகிறது. பீடி, சிகரெட் புகைப்பதால் அந்த புகை காற்றின் முலமாக மற்ற மனிதர்களுக்கு பரவி நோய்கள் உருவாகின்றன.

சூற்றுச்சூழலை காக்க என்ன செய்யலாம்?

வீட்டையும் சுற்றுப்புறத்தையும் துாய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள கழிவு பொருட்களையும், கழிவு நீரையும் முறையாக அகற்றி விட வேண்டும்.
நமது கழிவுகளை மண்ணுக்கு அடியில் விடுவது தான் சரியான மறுசுழற்சி முறையாகும். எனவே வீட்டிற்கு ஒரு கழிப்பறை கட்ட மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது.
பிளாஸ்டிக், பாலிதீன் பைகளை பயன்படுத்தக்கூடாது.
வாகனம், தொழிற்சாலை புகைகளை குறைக்கிற வழிகளை ஆராய வேண்டும். அரசின் சட்டத்தின் படி தொழிற்சாலைகள் மாசை கட்டுப்படுத்தும் வழிகளை ஆராய வேண்டும்
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் ஒரு மரத்தையாவது நட்டு தன் சந்ததிக்கு விட்டு செல்ல வேண்டும். மரம் நடுவதையும் வளர்ப்பதையும் கடமை என கொள்ள வேண்டும். ஒரு மரத்தை மிகவும் அவசியம் எனக்கருதி வெட்டினால் பத்து மரங்கள் நட வேண்டும்.
நீர்நிலைகளை மாசுபடுத்துபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். சூற்றுச்சூழலை
பாதுகாக்க, இந்த காற்றையும், மண்ணையும், நீரையும் நச்சு சேராமல் காக்க இயற்கையை
முதலில் பாதுகாக்கவேண்டும். இயற்கையை இயற்கையாகவே வைத்திருக்க வேண்டும்.


Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
04-ஜூன்-201910:19:54 IST Report Abuse
pradeesh parthasarathy நாகர்கோயில் சுங்கான்கடை பக்கத்தில் உள்ள குளத்தை படம் பிடித்து போட்டிருக்கிறீர் ஒய் .. அருமை ...குமரி இயற்கை தந்த வரப்பிரசாதம் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X