'கர்சீப், துண்டுடன் அலையும் கட்சியினர்...'

Added : ஜூன் 04, 2019
Advertisement
பள்ளி திறக்கப்பட்டதால், முக்கிய ரோடுகளில், கடும் போக்குவரத்து நெரிசல். அதில், சித்ராவும், மித்ராவும் மாட்டி கொண்டனர். எறும்புகளை விட, வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றது. ஒரு வழியாக சற்று நெரிசல் குறைந்த நிலையில், 'யோகாசன திருவிழா' என்ற போஸ்டர் தென்படவே, அப்பகுதிக்கு இருவரும் சென்றனர்.சிறியவர் துவங்கி பெரியவர் வரை, அனைவரும் ஒருசேர பல்வேறு யோகாசனங்களை செய்து
 'கர்சீப், துண்டுடன் அலையும் கட்சியினர்...'

பள்ளி திறக்கப்பட்டதால், முக்கிய ரோடுகளில், கடும் போக்குவரத்து நெரிசல். அதில், சித்ராவும், மித்ராவும் மாட்டி கொண்டனர். எறும்புகளை விட, வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றது. ஒரு வழியாக சற்று நெரிசல் குறைந்த நிலையில், 'யோகாசன திருவிழா' என்ற போஸ்டர் தென்படவே, அப்பகுதிக்கு இருவரும் சென்றனர்.சிறியவர் துவங்கி பெரியவர் வரை, அனைவரும் ஒருசேர பல்வேறு யோகாசனங்களை செய்து கொண்டிருந்தனர்.


அதைப்பார்த்து கொண்டு, பார்வையாளர் பகுதியில் உட்கார்ந்து கொண்டனர்.''இப்போதெல்லாம், கட்சியி னர், தங்கள் கையில், துண்டு, கர்சீப் வைத்து கொண்டு சுற்றுகிறார்களாமே,'' என ஆரம்பித்தாள் சித்ரா.''அக்னி நட்சத்திரம் முடிஞ்சிருச்சே. அப்புறம் எதுக்குக்கா துண்டு?''''உள்ளாட்சி தேர்தல் வரப்போகுதல்ல. அதுல சீட் வாங்க வேண்டி, ஆளுங்கட்சியினர், எம்.எல்.ஏ., மா.செ., என தேடிப் போய் பார்த்துட்டு இருக்காங்க. குறிப்பாக, பெண்கள் போட்டியிடும் வார்டுக்கு, தங்களோட மனைவியை போட்டியிட வைக்க எல்லா வேலையும் 'ஜரூரா' நடக்குதாம்,''''ஆனா, கார்ப்ரேஷன்காரங்க படு 'ஸ்லோ'வா, இருக்காங்களாம். வார்டு வரையறை குறித்த விவரங்களை வெளியிடாமல் வைத்துள்ளனர். மேலிடத்திலிருந்து எந்த உத்தரவும் வரலையாம். எல்லாம் முடிஞ்சும்கூட, இன்னும் முறைப்படி அறிவிக்கவில்லை. கடந்த முறை போல் இதில் எந்தப்பிரச்னையும் வந்து, கோர்ட், கேஸ், தடையுத்தரவு என்று யாரும் போய் விடக்கூடாதென, எச்சரிக்கையாக இருக்காங்களாம்,'' என்றாள், சித்ரா.''போலீஸ் லைன் மாரியம்மன் கோவில் முன்புறமுள்ள கேட்டை இழுத்து மூடிட்டாங்களாமே. என்ன விஷயம்,'' என, மேட்டரை மாற்றினாள் மித்ரா.
'சில வக்கீல்கள் தங்கள் பைக்குகளை அந்த கேட்டில், சென்று மர நிழலில் நிறுத்துவது வழக்கம். இதில், போலீஸ் குவார்ட்டர்ஸ் பராமரிப்பு பொறுப்பாளராக உள்ள போலீசுக்கும், வக்கீல்கள் இருவருக்கும் இடைேய தகராறு ஏற்பட்டதால், கேட்டுக்கு பூட்டு போட்டு விட்டனராம்,''''அப்படின்னா கோவிலுக்கு பக்தர்கள் எப்படி போய் வருவார்கள் என்று கூடவா? என, போலீஸ் தரப்பில் யோசிக்க மாட்டார்களா?'' என்று மித்ரா கேட்டதும், ''இந்த பிரச்னையில், போலீசார் ஒரு புறம் வக்கீல்களுக்கு எதிராகவும், வக்கீல்கள் ஒருபுறம் போலீசுக்கு எதிராகவும் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருகின்றனர்,'' சித்ரா கூடுதல் தகவல் சொன்னாள்.''வக்கீல் - போலீஸ் பிரச்னை போல், ஜி.எச்.,லும் அப்படித்தான் நடக்குது,'' மித்ரா சொன்னதும், ''அப்படியா.. என்ன அது,'' என, ஆர்வமானாள் சித்ரா.''ஜி.எச்.,ல் சில டாக்டர்கள் கூட நோயாளிகளிடம் ஒருமையில் தான் பேசுகிறார்களாம். நாய்க்கடிக்கு ஊசி போடப் போகும் நோயாளிகளிடம், சொல்லால் 'கடிக்கிறார்களாம்'. நர்சுகளும் அப்படித்தானாம்.
ரத்தம் சொட்டியபடி நாயிடம் கடி வாங்கிக் கொண்டு வரும் நோயாளிகளை நிமிர்ந்து கூடப் பார்க்காமல், நாய் பற்றி கேட்காமல், 'போ... போய் ஊசி போட்டுக்க..' என, சீட்டு கொடுத்து அனுப்புகிறார்களாம்,'' என்றாள் மித்ரா.''இதைப்பத்தி, 'டீன்'தான் கேட்கணும்,'' என்ற சித்ரா, ''மாவட்டத்தின் பல பகுதிகளில் புது குடிநீர் திட்டப்பணிகள், துவங்கியிருக்காங்க. இதில், பல இடங்களில் தரை மட்டத்தில் ராட்சத சைஸ் குழி தோண்டி 'சம்ப்' அமைப்பது தான் திட்டம்,''''குழி எடுக்கும் போது, ஏராளமான மண் கிடைக்கும்.
இதை எப்படி, யார் பயன்படுத்திக் கொள்வது என்பது தெளிவாக இல்லாததால், இஷ்டத்துக்கு எடுத்து கொண்டுபோய் வித்து, காசாக்குறாங்களாம்,''என, புகார் சொன்னாள்.''காசுன்னு சொன்னதும், ஒரு மேட்டர் நினைவுக்கு வருது. பெரிச்சிபாளையம், வாட்டர் டேங்கில், தனியார் லாரிகள் அதிகளவில் போய் குடிநீர் பிடிச்சிட்டு, செல்கிறதாம். இது எந்த கணக்கில் வருது என யாருக்கும் தெரியவில்லை,'' என்றாள் மித்ரா.''ஏன், மித்து... அங்குதான் 'சிசிடிவி' இருக்கிறதே. கார்ப்ரேஷன் ஒப்பந்த லாரிகள் என்றாலும் சம்பந்தமில்லாத லாரிகள் என்றாலும் கண்காணிப்பில் தெரிந்து விடுமே,''''இருந்து என்ன பிரயோஜனம். 'சிசிடிவி' ரொம்ப நாளாகவே வேலை செய்வதில்லையாம். அது வேலை செய்யாத அளவுக்கு 'வேலை' செய்து வைத்து விட்டனராம். அதனால, என்ன நடக்குது என யாருக்கு தெரியும்?'' என்றாள் மித்ரா.யோகா திருவிழாவில், 85 வயது பெரியவர், அழகாக பல ஆசனங்களை செய்து, பார்வையாளர்கள், அவரிடம், 'சரண்டர்' ஆகி, கைதட்டல் கொடுத்தனர்.அதைப்பார்த்த மித்ரா, ''அக்கா நம்ம 'சிட்டி' போலீஸ் டிரைவரிடம், அதிகாரி ஒருவர் சரண்டர் அடைஞ்சிட்டாராம். ஏதாவது, தெரியுங்களா?''''ஆமாண்டி.
முதலிலேயே சொல்லலாமின்னுட்டு இருந்தேன். மறந்துட்டேன். 'குளுகுளு' அதி காரி, அடிக்கடி போலீசாரை, 'வா.. போ...'ன்னு, ஒருமையில் பேசி சிக்கி கொள்வாரே, அவரேதான். அவர்கிட்ட 'சாரதி'யாக உள்ளவரை, நம்மாளு 'கசகச'ன்னு பேசியுள்ளார்''உடனே, அவர், 'கமிஷனர் ஆபீஸ்க்கு போய், உங்க வண்டவாளாத்தை, தண்டவாளத்தில் ஏத்திடுவேன்னு,' 'பிளாக் மெயில்' பண்றாராம்.
இதைக்கேட்டு மிரண்ட அதிகாரி, வேற வழியில்லைன்னுட்டு, 'சாரதி'யிடம் சரண்டர் ஆயிட்டாராம்,''''சரிங்க.. அப்படி அவர்கிட்ட என்ன எவிடன்ஸ் இருக்காம்?''''மித்து, அதிகாரியுடன், இருப்பதால், அவர் சம்பந்தப்பட்ட 'வீடியோ.. போட்டோ... ஆடியோ...' என, சகலமும் வெச்சிருக்காராம்,''''அப்ப.... அதிகாரியோட 'குடுமி' இப்ப அந்த சாரதிகட்ட வசமா சிக்கிடுச்சுன்னு சொல்லுங்க..'' என்று கூறி, கலகலவென சிரித்தாள்''மித்து... இன்னொரு விஷயம் தெரியுமா. 'டாலர் சிட்டிக்கு' வர பல போலீஸ்காரங்க பலத்த போட்டியில் இறங்கியிருக்காங்க தெரியுமா?''''சொல்லுங்க.. தெரிஞ்சிக்கிறேன்,''''லோக்சபா எலக்ஷனுக்காக, இன்ஸ்., எஸ்.ஐ.,க்கள் என, பலரை டிரான்ஸ்பர் செஞ்சாங்க. இப்ப, எலக்ஷன் முடிஞ்சதால, மீண்டும் 'சிட்டி'க்குள்ளவந்துடலாமுன்னு, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., க்களை நாடி போறாங்களாம்,''''முக்கியமாக, ஐ.எஸ்., பிரிவுக்கு, எப்படியாவது போயிடணும்னு, சில இன்ஸ்.,க்கள், உள்ளே, வெளியே போட்டியில் களமிறங்கியிருக்காங்க. அந்த இடத்துக்கு கடுமையான போட்டி நடக்குதாம்''''பசையுள்ள பதவிங்கிறதால, போட்டி பலமாக இருக்குங்க்கா. போலீசில் இப்படின்னா, 'ஷாக்' அடிக்கிற 'டிபார்ட்மென்ட்'டில், ஒரு அதிகாரி எல்லோரையும் மிரட்டி வசூல் பண்றாங்களாம்,''''அட... இந்த விவகாரம் எங்கேடி?''''பக்கத்தில, லிங்கேஸ்வரர் ஊரில்தான். புது லைன் சம்பந்தமா, விண்ணப்பம் கொடுத்தால், வைட்டமின் 'ப' வந்தால்தான், வேலை நடக்கும்னு, 'கட் அண்ட் ரைட்'டா சொல்றாங்களாம்,''''சமீபத்தில் ஒருத்தர், தன்னோட புது வீட்டுக்கு இணைப்பு கேட்டு, ஆன்லைனில், விண்ணப்பிச்சிருக்காரு.
ஆனா, வேலை நடக்கலையாம். என்ன, ஏதுன்னு, ஆபீசில் போய் கேட்டதற்கு, அது தப்பு... இது சரியில்லைன்னு, சப்பைக்கட்டு கட்டி, ரிஜெக்ட் பண்ணிட்டாராம்,''''என்னம்மா.. இப்டி பண்றீங்களேம்மா?'' என்று சிரித்த சித்ரா, ''டீச்சர்ஸ் குரூப் போட்டோ எடுத்து தரச்சொல்லி 'சாந்த'மான அதிகாரி ஆர்டர் போட்டிருக்காங்களாம்,''''இதுலென்ன இருக்கு மித்து, யூசுவல்தானே...!''''இல்லீங்க்கா.. நம்ம மாவட்டத்துக்கு அந்த அதிகாரி வந்து, மூணு வருஷமாச்சாம்.
அதனால, சீக்கிரமா, புரமேஷனோட போகப்போறாங்க. அதனால, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2வில், மாவட்டத்தை, 'டாப்'க்கு கொண்டு வந்த அத்தனை பேருக்கும், 'சீல்டு' கொடுத்து கவுரப்படுத்த ஆசைப்படறாங்களாம். அதனாலதான், குரூப் போட்டோ கேட்கறாங்களாம்,'' என்று மித்து சொன்னவுடன், ''மழை வர்ற மாதிரி இருக்கு. கிளம்பலாம்'' என்று சித்ரா, பார்க்கிங் நோக்கி பரபரவென நடந்தாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X