குஜராத்திலிருந்து ராஜ்யசபாவிற்கு ஜெய்சங்கர் தேர்வு?

Updated : ஜூன் 04, 2019 | Added : ஜூன் 04, 2019 | கருத்துகள் (24)
Share
Advertisement
குஜராத்திலிருந்து ராஜ்யசபாவிற்கு ஜெய்சங்கர் தேர்வு?

புதுடில்லி: மத்திய வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜெய்சங்கர், குஜராத் மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியுாகியுள்ளது.


latest tamil news


மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் இவர் போட்டியிடவில்லை. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அமித்ஷா, ஸ்மிருதி இராணி ஆகியோர் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அவர்கள் வகித்த ராஜ்யசபா எம்.பி.பதவியை ராஜினாமா செய்தனர்.இதையடுத்து காலியாக உள்ள ராஜ்யசபா பதவிக்கு ஜெய்சங்கரை தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளதாக பா.ஜ. வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


ராம் விலாஸ் பஸ்வன் தேர்வு


பிரதமர் மோடி அமைச்சரவையில் லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மத்திய அமைச்சராகியுள்ளார். இவரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை. இந்நிலையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பீஹாரிலிருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பீஹாரின் பாட்னாசாகிப் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் தனது ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியாக உள்ள ராஜ்யபசபா எம்.பி. பதவி ராம்விலாஸ் பஸ்வானுக்கு ஒதுக்க பா.ஜ. முடிவு செய்துள்ளது.


Advertisement


வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TamilArasan - Nellai,இந்தியா
04-ஜூன்-201919:52:27 IST Report Abuse
TamilArasan தன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லாத ஒருவரை அவரை துறை சார்ந்த திறமை மற்றும் அனுபவத்தை பயன் படுத்த மத்திய அரசின் அமைச்சரவையில் இடம்பெற செய்த இந்த செயல் மிகவும் பாராட்ட தக்கது... மேலும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட தமிழை தாய்மொழியாக கொண்ட ஜெய்சங்கர் அவர்கள் தமிழக மாணவர்களுக்கு எடுத்துக்காட்டு - திறமை இருப்பின் அரசின் உயர்பதவிகளை கட்சி, அரசியல் சாராமல் அடையாளம் என்பதற்கு...
Rate this:
Cancel
Kannan - Chennai,இந்தியா
04-ஜூன்-201918:59:53 IST Report Abuse
Kannan வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்பது எல்லாம் சும்மா. அப்துல் கலாமிற்கு இரண்டாம் முறை ஜனாதிபதி பதவிக்கு பிஜேபி முன் மொழிந்தபோது தி மு க வும் காங்கிரஸ் கட்சியும் தடுத்தது அனைவருக்கும் தெரியும். மூப்பனாரை பிரதமர் பதவிக்கு வாய்ப்பு வந்த போது தி மு க தடுத்தது. ஜெய் சங்கர் மற்றும் நிர்மலா இருவரும் தமிழர்கள் அவர்களுக்கு ராஜ்ய சபை உறுப்பினர் பதவிக்கு யாரும் தமிழ் நாட்டிலிருந்து கொடுக்க வராதது ஒன்றும் புதில்லை. இங்கே எட்டப்பர்கள் உள்ளனர் என்பது தெரியும். மற்ற மாநிலங்கள் நம்மவர்க்கு பதவி கொடுத்து அழகு பார்க்கின்றனர் என்றல் அவர்கள் இந்தியா என்று பார்க்கின்றனர். நாம் பார்ப்பதெல்லாம், ஊழல் அல்லது தடை செய்ய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் வைகோ போன்றவர்களைத்தான். இவர்கள் எப்போதும் திருந்த மாட்டார்கள் என்பது திண்ணம்.
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
04-ஜூன்-201916:10:13 IST Report Abuse
M S RAGHUNATHAN In which language P Chidambaram took oath when he is elected from Maharashtra as a Rajya Sabha M P. The same with Tirunavukkarsu when he was elected as M P from Madya Pradesh.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X