உ.பி.,யில் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணி முறிவு

Updated : ஜூன் 04, 2019 | Added : ஜூன் 04, 2019 | கருத்துகள் (22)
Share
Advertisement
உ.பி., பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, மாயாவதி, அகிலேஷ்

லக்னோ: உ.பி.,யில் சமாஜ்வாதியுடனான கூட்டணியை, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி முறித்து கொண்டார். மேலும், இது தற்காலிகமானது தான் எனவும் கூறியுள்ளார்.


தோல்விஉ.பி., யில் பா.ஜ.,வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து, லோக்சபா தேர்தலை எதிர்கொண்டன. தேர்தலில் இந்த கூட்டணியால் எதிர்பார்த்த இடங்களை வெற்றி பெற முடியவில்லை. மொத்தமுள்ள 80 தொகுதிகளில், இக்கூட்டணி 15 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

பகுஜன் சமாஜ் 10 தொகுதிகளிலும், சமாஜ்வாதி 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றன. பா.ஜ., 62 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால், இக்கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. 11 சட்டசபை தொகுதிகளுக்கு விரைவில் நடக்க உள்ள இடைத்தேர்தலில், தனியாக களம் காண தயாராகுமாறு, மாயாவதி, தனது கூட்டணியினரை கேட்டு கொண்டிருந்தார்.


அரசியல் நெருக்கடிஇந்நிலையில், நிருபர்களை சந்தித்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியதாவது: சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு இடையே கூட்டணி அமைந்ததும், அகிலேசும், அவரது மனைவி டிம்பிளும் எனக்கு நல்ல மரியாதை கொடுத்தனர். நாட்டின் நலனுக்காக கடந்த கால நிகழ்வுகளை மறந்துவிட்டு, அவர்களுக்கு நானும் மரியாதை அளித்தேன். ஆனால், அரசியல் நெருக்கடிகளை நாங்கள் புறக்கணிக்க முடியாது. லோக்சபா தேர்தல் முடிவுகளை ஆராய்ந்தால், சமாஜ்வாதி கட்சியின் ஓட்டு வங்கியான, 'யாதவ' சமுதாயத்தினர், அவர்களை ஆதரிக்கவில்லை. அக்கட்சி வலுவாக உள்ள இடங்களிலும், அவர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள பிரிவு தற்காலிகமானதுதான். சமாஜ்வாதி தலைவர், தனது அரசியல் பணியில் திறமையாக செயல்படுகிறார் என்பதை நாங்கள் உணரும்போது, அவருடன் இணைந்து செயல்படுவோம். ஆனால், அவர் அவ்வாறு செயல்படாவிட்டால், தனியாக செயல்படுவதே எங்களுக்கு சிறந்தது. எனவே, வரும் இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news

முக்கியமல்லமாயாவதி முடிவு குறித்து கருத்து தெரிவித்த சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், மஹா கூட்டணி என்பது முக்கியமல்ல. இடைத்தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிடுவோம். இதற்கான பணிகளை செய்து வருகிறோம் என்றார்


latest tamil news
Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-ஜூன்-201916:30:25 IST Report Abuse
Venkatesh P நல்ல காலம். மெகா கூ‌ட்ட‌ணி ஜெயிக்க வில்லை. ஜெயித்திருந்தால்????
Rate this:
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
04-ஜூன்-201916:03:16 IST Report Abuse
kalyanasundaram predicted and anticipated acts only and nothing new. oil and water cannot form a homogeneous fluid.
Rate this:
Cancel
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
04-ஜூன்-201915:38:16 IST Report Abuse
Chowkidar NandaIndia தேனிலவு முடிந்து விட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X