அமித்ஷாவின் ‛பவர்': உதவும் மோடி

Updated : ஜூன் 04, 2019 | Added : ஜூன் 04, 2019 | கருத்துகள் (21)
Share
Advertisement
அமித்ஷா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர்,  அஜித் தோவல்

புதுடில்லி: உள்நாட்டு பாதுகாப்பு பற்றி எந்த முடிவும் எடுக்கும் அதிகாரத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, பிரதமர் மோடி தந்துள்ளார்.
ஏற்கனவே உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங்கின் செயல்பாடுகளில் முழு திருப்தி இல்லாமல் இருந்தார் மோடி. அதனாலேயே இம்முறை தான் திறமையானவராக கருதும் அமித்ஷாவிடம் அந்த துறையை தந்துள்ளார் மோடி.


latest tamil news
குஜராத்தில் உள்துறை அமைச்சராக அமித்ஷா இருந்தபோது பயங்கரவாதத்தின் முதுகெலும்பை உடைத்தார் அமித்ஷா. இப்போது மத்திய உள்துறை அமைச்சர் ஆன பிறகு அமித்ஷாவுக்கு மேலும் பொறுப்புகள் அதிகரித்துள்ளன. மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் நடமாடும் நக்சலைட்டுகளை ஒழிக்க வேண்டும்; இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள காஷ்மீரில் பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும்.பாலகோட்டில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி பலரை அழித்த பிறகு, காஷ்மீரில் பயங்கரவாதம் கொஞ்சம் குறைந்துள்ளது. பாக்., எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்படுவது குறைந்துள்ளது. கைபர் கணவாய் பகுதியில் உள்ள தனது விமானப்படை தளத்தை திறப்பதை பாக்., தள்ளிப்போட்டுள்ளது.


அமித்ஷாவின் பெரிய சவால்


காஷ்மீரில் சாதாரண மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையிலும் காஷ்மீர் இளைஞர்களகை் கவரும் வகையிலும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.சட்ட விரோத நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளோர் மீதான வழக்குகளை வேகப்படுத்த வேண்டும். ராபர்ட் வாத்ரா, கார்த்தி சிதம்பரம், ப.சிதம்பரம், சோனியா, ராகுல் (நேஷனல் ஹெரால்ட்) ஆகியோரும் இதில் அடக்கம். இதில் எந்த சுணக்கமும் ஏற்படாமல் இருக்க தொடர்புடைய துறைகளையும் அவர் ஒருங்கிணைக்க வேண்டும்.


latest tamil news
பாக்., எல்லைக்குள் இதுவரை நடந்த இரண்டு துல்லிய தாக்குதல்களில் முக்கிய பங்காற்றியவர் அஜித் தோவல். அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கியதன் மூலம் தேசப்பாதுகாப்புக்கு தான் முன்னுரிமை என்று சொல்லாமல் சொல்லிவிட்டார் மோடி.உள்துறை, ராணுவ அமைச்சகம், மத்திய உளவுத்துறை, ராணுவ தளபதிகளுக்கு இடையே பாலமாக செயல்படுவார் தோவல். வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜெய்சங்கர் 1977 பேட்சை சேர்ந்த ஐ.எப்.எஸ் அதிகாரி. இவர் தோவலைவிட ஜூனியர். இவர் கேபினட் அமைச்சராகி விட்டதால், தோவல் அவரை விட குறைவான தகுதியில் இருக்க முடியாது என்பதால் தோவலுக்கும் கேபினட் அந்தஸ்து கொடுத்துள்ளார் மோடி.


latest tamil news

அவசர கூட்டம்


அமித்ஷாவின் பவர் வளர்ந்து வருவதை நிரூபிப்பது போல், அவரது தலைமையில் அவரது தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் ராணுவம், வெளியுறவு, நிதி, பெட்ரோலிய துறை அமைச்சர்களும் செயலாளர்களும் கலந்து கொண்டனர். ஈரானில் இருந்து பெட்ரோலியம் இறக்குமதி செய்யும் பிரச்னை உள்பட பல்வேறு பிரச்னைகள் பேசப்பட்டன.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
05-ஜூன்-201911:12:52 IST Report Abuse
J.Isaac அழிவுக்கு முன் அகந்தை. 43 % குற்ற பின்னணி உள்ள பாராளுமன்றம் மன்றம் நடக்கும் போது இடி விழனும். இல்லை என்றால் பூகம்பம் வரனும். அப்போதான் நாடு திருந்தும்.
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
05-ஜூன்-201904:48:02 IST Report Abuse
spr "சிங்கப்பூர் லீ போன்ற தலைவர் தான் வரலாற்றில் நல்லஇடத்தை பிடித்துள்ளார்கள்..- Lee's rule was criticised for curtailing civil liberties (media control and limits on public protests) and bringing libel suits against political opponents. He argued that such disciplinary measures were necessary for political stability which, together with the rule of law, were essential for economic progress, famously saying:"Anybody who decides to take me on needs to put on knuckle-dusters. If you think you can hurt me more than I can hurt you, try."- இதையும் படித்துவிட்டுச் சொல்லுங்கள் ஆனால் அவரே சொன்னது. இந்தியாவில் இருக்கும் சுதந்திரம், ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டாலே பல நன்மைகள் நடக்கும் "இந்தியாவை அது போல ஆள முடியாது சீர் செய்ய முடியாது" இன்றைய நிலையில் பாஜக ஒன்றுதான் ஓரளவு செய்ய முடியும்
Rate this:
Cancel
rm -  ( Posted via: Dinamalar Android App )
05-ஜூன்-201900:40:21 IST Report Abuse
rm Modi s chapter in Amitshah s hand.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X