காங்கிரசை கழட்டி விடும் பரூக்?

Updated : ஜூன் 04, 2019 | Added : ஜூன் 04, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement
காஷ்மீர், காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி,

புதுடில்லி: காஷ்மீரில் காங்கிரசுடனான கூட்டணியை முறித்து கொள்ள பரூக் அப்துல்லா தலைமையிலான காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், காஷ்மீரில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது. இதற்கு பரூக் மற்றும் ஒமர் அப்துல்லா தங்களுக்காக பிரசாரம் செய்யவில்லை என காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
இதனை மறுத்த தேசிய மாநாட்டு கட்சியின் அனில் தர், காங்கிரசுக்காக நாங்கள் பிரசாரம் செய்தோம். தோல்விக்கு காங்கிரஸ் தான் பொறுப்பேற்க வேண்டும். காஷ்மீரில், ராகுலும் அவரது சகோதரி பிரியங்காவும் பிரசாரம் செய்தனரா?


latest tamil news



எங்களை குற்றம் சொல்வது கண்டனத்திற்குரியது. காங்கிரஸ் மேலிடமும், மாநில தலைவர்களும் தான் தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும். காஷ்மீரில், காங்கிரசுடன் தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி வைக்காது. சட்டசபை தேர்தலை நாங்கள் தனியாக எதிர்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
காஷ்மீரில் உள்ள 6 லோக்சபா தொகுதிகளில் 3 தொகுதிகளை பா.ஜ.,வும், 3 தொகுதிகளை தேசிய மாநாட்டு கட்சியும் கைப்பற்றின. காஷ்மீர் சட்டசபை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கலைக்கப்பட்டது. ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது. இங்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
05-ஜூன்-201904:31:21 IST Report Abuse
meenakshisundaram ஆனா சூசை ஒரு' ஏமாற்று' என்பதுதானே விஷயமே?
Rate this:
Cancel
anbu - London,யுனைடெட் கிங்டம்
05-ஜூன்-201901:57:17 IST Report Abuse
anbu பிரச்சாரம் செய்யுமளவுக்கா உங்கள் கலாச்சாரம் காஷ்மீரில் இருக்கு ?
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
04-ஜூன்-201921:51:23 IST Report Abuse
madhavan rajan ராகுல் காங்கிரஸ் தலைமைப் பொறுப்பிலிருந்து கழண்டுகொள்ளப் பார்க்கும்போது இவர்களெல்லாம் காங்கிரசை கழட்டிவிடுவது பெரிய விஷயமேயில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X