பொது செய்தி

இந்தியா

சோனியா மருமகன் வழக்கு; விசாரிக்கும் அதிகாரி மாற்றம்

Updated : ஜூன் 04, 2019 | Added : ஜூன் 04, 2019 | கருத்துகள் (11)
Share
Advertisement

புதுடில்லி: சோனியா மருமகன் ராபர்ட் வாத்ராவின் வழக்கை விசாரணை செய்து வரும் அமலாக்கத்துறை அதிகாரி திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.



latest tamil news



காங்கிரஸ் மூத்த தலைவர், சோனியாவின் மகள், பிரியங்காவின் கணவர், ராபர்ட் வாத்ரா, பிரிட்டன் தலைநகர் லண்டனில், சில ஆண்டுகளுக்கு முன் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்களை வாங்கி விற்றுள்ளார். 'ரியல் எஸ்டேட்' எனப்படும், வீடு, மனைகளை வாங்கி விற்பதை பெரிய அளவில் தொழிலாக செய்யும் அவர், லண்டன் விவகாரத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக, மத்திய அரசின் அமலாக்க இயக்குனரகம் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை, டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கினை அமலாக்கத்துறை சார்பாக விசாரணை செய்து வரும் ஐபிஎஸ் அதிகாரி ராஜிவ் சர்மா, திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதில், இந்திய வருவாய் துறை பிரிவு அதிகாரி மகேஷ் குப்தா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.


latest tamil news



துணை இயக்குனராக பணியில் சேர்ந்த ராஜிவ் சர்மாவுக்கு, இணை இயக்குனராக பணி உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால் அவருக்கு நீண்ட காலமாக பணி உயர்வு வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இதனையடுத்து சொந்த பணி பிரிவான போலீசில் பணியாற்ற அவர் விருப்பம் தெரிவித்ததையடுத்து அவர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Cuddalore,இந்தியா
05-ஜூன்-201909:32:56 IST Report Abuse
 N.Purushothaman அரசியலுக்கு வந்தால் நோவாமல் சம்பாதித்து விடலாம் என்பதற்கு கட்டுமர அண்ட் கோ , சோனியா அண்ட் கோ ,லாலு அண்ட் கோ ,மாயாவதி அண்ட் கோ ,ஜெயா அண்ட் கோ ,மம்தா அண்ட் கோ ,ப .சி அண்ட் கோ ,இது போன்ற எண்ணற்ற பொறுப்பற்ற,ஒழுக்கமற்றவர்களே முன் உதாரணம் ....
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
05-ஜூன்-201908:47:33 IST Report Abuse
RajanRajan வாய்தா தொடர் கைது தடை, ஜாமீன், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு கூத்துகளுக்கு முடிவு கட்டுங்கள். மோடி சர்கார் இந்த சீர்திருத்தம் பண்ணுங்க
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
04-ஜூன்-201921:14:24 IST Report Abuse
தமிழ் மைந்தன் இவரால் கருணாநிதி, சிதம்பரம், சோனியா போன்ற மாபெரும் ஊழல்பெருச்சாளிகள் குடும்பத்தில் உள்ள ஊழல்சொத்துக்களை அரசுடமையாக்க 5 ஆண்டுகள் போதுமா?....
Rate this:
N.Purushothaman - Cuddalore,இந்தியா
05-ஜூன்-201909:28:49 IST Report Abuse
 N.Purushothaman...நீதிமன்றத்தில் கூட இவர்களுக்கு ஆதரவான நீதிபதிகள் இருப்பது அதிர்ச்சியான விஷயம் ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X