சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஜூன் 04, 2019
Advertisement
 'டவுட்' தனபாலு

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த, டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால்: டில்லியில் இயக்கப்படும், அரசு பஸ்கள், மெட்ரோ ரயில்களில், பெண்கள் கட்டணம் செலுத்தாமல் பயணம் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

டவுட் தனபாலு: ஒரு, ஐ.ஏ.எஸ்., ஆபீசர், இப்படி பேசலாமா... பதவிக்காக தான், சமூக சேவையில் இறங்கினீங்கங்கறதை, இந்த திட்டம் மூலம்,தெள்ளத் தெளிவா விளக்கிட்டீங்க... உங்களோட குருவா இருந்த, அன்னாஹசாரே, உங்களைப் பற்றிச் சொன்னபோது, அதற்கான அர்த்தம் புரியலே... இப்ப, 'டவுட்'டே இல்லாம புரிஞ்சிடிச்சு!

***

துணை முதல்வர், பன்னீர்செல்வம்: தமிழகத்தில் என்றும், ஜெ., ஆட்சி நடக்க வேண்டும் என்பது தான், தமிழக மக்களின் எண்ணம். இதை ஏற்று, அனைத்து சிறுபான்மையின மக்களும், அ.தி.மு.க.,விற்கு ஆதரவு தந்ததை, ஒன்பது சட்டசபை இடைத்தேர்தலில், நமக்கு கிடைத்த வெற்றி எடுத்து சொல்கிறது.

டவுட் தனபாலு: இப்தார் விருந்தில், எதையாவது பேசணும்னு, பேசுறீங்களா... இல்லை, நீங்க நேரில் உணர்ந்த கள யதார்த்தத்தை முன்வைக்குறீங்களா... நீங்க சொல்ற கணக்குப்படி பார்த்தால், லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்ததால், சிறுபான்மையின மக்களின் ஆதரவு கிடைக்காமல், அ.தி.மு.க., தோல்வி அடைந்ததாக அர்த்தம் வருதே... இது சரியா என்ற, 'டவுட்'டைக் கொஞ்சம் விளக்குங்களேன்...!

***

மத்திய உரம், ரசாயன துறை அமைச்சர், சதானந்த கவுடா: மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும்படி, மாநில அரசுக்கு கடிதம் எழுதப்படும்.

டவுட் தனபாலு: இதை எல்லாம், மாநில,பா.ஜ., தலைவர்கள் மூலம் சொல்ல வைப்பதற்கு பதிலாக, நீங்களே முந்திக் கொண்டால் எப்படி... மத்திய அரசுக்கு எதிராக, எந்தப் பிரச்னையை கையில் எடுக்கலாம்னு, தமிழக எதிர்க்கட்சிகள் காத்திருக்கும் நேரத்தில், நீங்களா ஏன் பொறியில் வந்து சிக்குறீங்களோ என்ற, 'டவுட்' ஏற்படுதே...!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X