ஆய்வு கூட்டத்தில் ஆபாச, 'வீடியோ'

Updated : ஜூன் 04, 2019 | Added : ஜூன் 04, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement
ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் உணவு வழங்கல் துறை செயலரின் தலைமையில் நடைபெற்ற அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில், 'கம்ப்யூட்டர்' திரையில் திடீரென ஆபாச, 'வீடியோ' திரையிடப்பட்டது.ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஜெய்ப்பூரில் உள்ள தலைமை செயலகத்தில், மாநில உணவு வழங்கல் துறையின் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம், நேற்று நடைபெற்றது.

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் உணவு வழங்கல் துறை செயலரின் தலைமையில் நடைபெற்ற அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில், 'கம்ப்யூட்டர்' திரையில் திடீரென ஆபாச, 'வீடியோ' திரையிடப்பட்டது.



latest tamil news



ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஜெய்ப்பூரில் உள்ள தலைமை செயலகத்தில், மாநில உணவு வழங்கல் துறையின் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம், நேற்று நடைபெற்றது. உணவு வழங்கல் துறை செயலர், முக்தா சிங், கூட்டத்திற்கு தலைமை வகித்தார். உணவு வழங்கல் துறை மற்றும் தேசிய தகவல் மைய அதிகாரிகள் 10 பேர், கூட்டத்தில் கலந்து பங்கேற்றனர். மேலும், 33 மாவட்டங்களை சேர்ந்த வினியோக அதிகாரிகள், 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் கூட்டத்தில் பங்கேற்றனர்.


latest tamil news



கூட்டம் நடந்து கொண்டு இருந்தபோது, கம்ப்யூட்டர் திரையில், திடீரென ஆபாச, 'வீடியோ' ஓடியது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தவறு யாரால் நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி, அறிக்கை தருமாறு, தேசிய தகவல் மைய இயக்குனரிடம், துறை செயலர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
05-ஜூன்-201915:55:03 IST Report Abuse
Nallavan Nallavan விசாரணை கோரிய அதிகாரி ஒரு பெண் ....... அவர்தான் கம்பியூட்டரை இயக்குவார் அல்லது வீடியோவைத் திறப்பார் என்பது கயவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது ....... அப்பெண் அதிகாரியால் 'பாதிக்கப்பட்ட' ஒருவர் செய்திருக்க வேண்டும் .....
Rate this:
Cancel
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
05-ஜூன்-201910:15:06 IST Report Abuse
Chowkidar NandaIndia ராஜஸ்தானில் தேர்தல் தோல்வியால் நொந்து போயிருந்தவர்களின் 'புத்துணர்ச்சிக்காக' இது போல் ஏதாவது செய்திருக்கலாம். ஹா ஹா ஹா.
Rate this:
Cancel
05-ஜூன்-201909:42:24 IST Report Abuse
மு.து.அரபிதாசன் இது மோடி அரசின் சதி குறுக்கு வழியில் ராஜஸ்தானில் ஆட்சியைப் பிடிக்கவே இவ்வாறு சதி செய்யப்பட்டது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X