பதிவு செய்த நாள் :
பா.ஜ.,வுடன் கைகோர்க்க ஜெகன் முடிவு?
ஆந்திராவில், சி.பி.ஐ., நுழைய அனுமதி

ஆந்திராவில், மாநில அரசின் அனுமதியின்றி, சி.பி.ஐ., அதிகாரிகள் உள்ளே நுழைய, முந்தைய தெலுங்கு தேசம் அரசு விதித்த தடையை விலக்கிக் கொள்வதாக, தற்போதைய, ஒய்.எஸ்.ஆர்., - காங்., அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் இணைய, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

 பா.ஜ, கைகோர்க்க, ஜெகன் , ஆந்திரா,ஜெகன்மோகன் ,சந்திரபாபு நாயுடு


மோதல்:


ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.எஸ்.ஆர்., - காங்., ஆட்சி நடக்கிறது. இதற்கு முன், சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் ஆட்சி நடந்தது. மத்தியில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில், தெலுங்கு தேசம் அங்கம் வகித்தது. ஆந்திர மாநிலத்துக்கு, மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து அளிக்க மறுத்ததை அடுத்து, தே.ஜ., கூட்டணியிலிருந்து, கடந்தாண்டு, தெலுங்கு தேசம் வெளியேறியது.

இதையடுத்து, பா.ஜ., தலைவர்களுக்கும், தெலுங்கு தேசம் தலைவர்களுக்கும் இடையே, கடும் வார்த்தை மோதல் எழுந்தது.

தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் நரேந்திர மோடியையும், பா.ஜ., தலைவர்களையும் கடுமையாக விமர்சித்தார்.

இதற்கிடையே, பல்வேறு வழக்குகள் தொடர்பாக, தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சில முக்கிய தலைவர்களின் வீடுகளில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த சந்திரபாபு நாயுடு, 'மாநில அரசின் அனுமதி பெற்ற பின்பே, சி.பி.ஐ., அதிகாரிகள், ஆந்திராவுக்குள் நுழைய வேண்டும். இல்லையெனில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, அறிவித்தார். இந்நிலையில், சமீபத்தில், ஆந்திராவில் நடந்த சட்டசபை தேர்தலில், முன்னாள் முதல்வர், மறைந்த, ராஜசேகர ரெட்டியின் மகன், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.எஸ்.ஆர்., - காங்., வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, ஆந்திர மாநில அரசின் நடவடிக்கைகளில் அதிரடி மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

விசாரணை:


'மாநில அரசின் அனுமதி இன்றி, சி.பி.ஐ., அதிகாரிகள் ஆந்திராவுக்குள் நுழையக் கூடாது' என்ற முந்தைய அரசின் உத்தரவை, 'வாபஸ்' பெறுவதாக, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். இது குறித்து, ஒய்.எஸ்.ஆர்., - காங்., செய்தி தொடர்பாளர், விஜயசாய் ரெட்டி கூறியதாவது: சி.பி.ஐ., விசாரணையிலிருந்து தப்பிப்பதற்காக, சந்திரபாபு நாயுடு, சி.பி.ஐ., அதிகாரிகள் ஆந்திராவுக்குள் நுழைய, தடை விதித்தார்.

Advertisement

ஆனால், இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில், சி.பி.ஐ., அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஊழல்வாதிகள் எவரும் தப்பி விடக் கூடாது என்பதற்காகவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த, சுஜனா சவுத்ரி, சி.எம்.ரமேஷ், நாராயணா, சாம்பசிவ ராவ் உள்ளிட்டோர், பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ளனர்.

பச்சைக்கொடி:


இவர்கள் மீது, சி.பி.ஐ., உள்ளிட்ட, மத்திய அரசு அமைப்புகளின் நடவடிக்கை பாயும் வாய்ப்புள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நடவடிக்கை மூலம், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில், ஜெகன்மோகன் ரெட்டியின், ஒய்.எஸ்.ஆர்., - காங்., கட்சி இணைவதற்கு பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளதாகவும், மத்திய அமைச்சரவையில், இவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும், அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
05-ஜூன்-201921:03:47 IST Report Abuse

Tamilanஜெகனை யாராலும் அசைக்கமுடியாது..

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
05-ஜூன்-201920:03:42 IST Report Abuse

dandyஇத்தாலிய முன்னாள் bar -girl ஐ எதிர்த்த ஒரேயொரு இளம் இந்தியஅரசியல் வாதி.

Rate this:
Sathya Dhara - chennai,இந்தியா
06-ஜூன்-201906:28:06 IST Report Abuse

Sathya Dhara தாங்கள் குறிப்பிடும் நபரை புரிந்து கொள்ள இயலவில்லை. ...

Rate this:
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
05-ஜூன்-201916:03:00 IST Report Abuse

Tamilanஇவர்களில் பெரும்பாலானோர் முன்னாள் காங்கிரஸ்காரர்கள் என்பதால் சி பி ஐ இவர்களுக்கு எதிரி அல்ல

Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X