அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைதி பூங்காவாகத் திகழ்கிறது தமிழகம்: ஜெ.,வுக்கு கருணாநிதி பதில்

Updated : ஏப் 23, 2011 | Added : ஏப் 22, 2011 | கருத்துகள் (84)
Share
Advertisement
சென்னை: "தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் ஜாதி, சமய பூசலின்றி அமைதி நிலவுகிறது' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். தி.மு.க., தலைவர் முதல்வர் கருணாநிதி கேள்வி, பதில் வடிவில் வெளியிட்ட அறிக்கை வருமாறு: * அறிக்கை அரசி ஜெயலலிதா, ஓய்வெடுக்க கொடநாடு சென்றுள்ள நேரத்திலும் தமிழகத்திலே சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டதாகவும், அதைத் தடுக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க

சென்னை: "தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் ஜாதி, சமய பூசலின்றி அமைதி நிலவுகிறது' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.


தி.மு.க., தலைவர் முதல்வர் கருணாநிதி கேள்வி, பதில் வடிவில் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

* அறிக்கை அரசி ஜெயலலிதா, ஓய்வெடுக்க கொடநாடு சென்றுள்ள நேரத்திலும் தமிழகத்திலே சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டதாகவும், அதைத் தடுக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீண்ட பட்டியலை கொடுத்துள்ளாரே?

தமிழக போலீசார் சட்டம் - ஒழுங்கை பராமரிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து, கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் ஜாதி, சமய பூசலின்றி அமைதியை நிலைநாட்டி வருகின்றனர். குற்ற நடவடிக்கைகள் எந்த ஆட்சிக் காலத்திலும் நடைபெறக்கூடிய ஒன்று தான். ரவுடிகள், கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, கைது செய்து கோர்ட்டுகளில் தண்டனை பெற்றுத் தருவதுடன், தடுப்புக் காவலிலும் வைக்கப்படுகின்றனர். குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை பலமுறை கைது செய்தாலும், அவர்கள் சட்டங்களில் உள்ள சந்து பொந்துகளை பயன்படுத்தி கோர்ட்டுகளில் வாய்தா வாங்கி, வழக்குகளை தாமதப்படுத்தி எப்படியோ தப்புகின்றனர். முன்விரோதம் மற்றும் குடும்பப் பிரச்னையால் நடக்கும் ஒரு சில சம்பவங்களை வைத்து சட்டம் - ஒழுங்கு பராமரிப்பை ஒட்டு மொத்தமாகக் குறை கூறுவது, ஊரை ஏமாற்ற முயலும் காரியம். கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் கொல்லப்பட்ட நாகராஜன், போலீஸ் பதிவேட்டில் உள்ள போக்கிரி. அவரது எதிரிகள் கொலை செய்ததாகத் தெரிகிறது. இதை தி.மு.க.,வினர் செய்ததாக ஜெயலலிதா சொல்லியிருப்பது மாய்மாலமாகும்.


மதுரை மாவட்டம் ஊமச்சிக்குளம் அருகே டீ கடைக்காரர் சந்துரு கொலையில், ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில், தி.மு.க.,வினர் யாரும் சம்பந்தப்படவில்லை. ஆனால், தி.மு.க.,வினர் மீது ஜெயலலிதா பழி சுமத்தப் பார்க்கிறார். ஜெய்ஹிந்துபுரத்தில் பாண்டி கண்ணனும், கீரைத்துறையில் கள்ளத்தொடர்பால் சித்திரைச்செல்வியும், செல்லூரில் சரவணன் என்ற சிறுவனும் கொலை செய்யப்பட்டனர். ஆனால், ஜெயலலிதாவின் அறிக்கையில், மதுரையில் 15 நாட்களில் ஏழு பேர் கொலையுண்டிருப்பதாகக் கூறுவது, எண்ணிக்கை தெரியாத குற்றம்.


சென்னை வியாசர்பாடியில் அம்பேத்கர் கல்லூரி மாணவர்கள் மறியல் செய்து போலீசார், பொதுமக்களின் உயிர், உடைமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கல் வீசி தாக்கினர். தற்போது அங்கு அமைதி நிலவுகிறது. ஆற்று வெள்ளத்தில் அடித்த ஒருவன் உலகம் போச்சு, உலகம் போச்சு என்று கத்தினான். அவனிடம் கேட்டபோது, என்னை காப்பாற்றாவிட்டால் எனக்கு உலகம் போயிருக்கும் என்றான். அதை போல் அம்மையாரும் வேறு வழி தெரியாமல் ஏதேதோ குரல் கொடுக்கிறார். இவரது அறிக்கையை பார்த்தால், தேர்தல் கமிஷனின் அதிகாரத்தை அவரே எடுத்துக் கொண்டாரோ என்ற ஐயப்பாடு ஏற்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


நடிகர் வீட்டை தாக்கியது குடிகாரன்: "நடிகர் விஜய் வீட்டில் கல் வீசி தாக்கிய சம்பவம் குறித்து போலீஸ் விசாரித்ததில், அவ்வழியே போன குடி போதையில் சென்ற யாரோ கல் வீசி தாக்கியிருக்கலாம் எனத் தெரிகிறது. போலீசார் அந்த நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கின்றனர். இச்சம்பவத்தில் ரவுடிகள் ஈடுபடவில்லை. ஆனால், ஜெயலலிதா இதற்கு கை, கால், மூக்கு வைத்து கதை சொல்ல முயல்கிறார்' என, முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.


Advertisement
வாசகர் கருத்து (84)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CUMBUM P.T.MURUGAN - TRICHY,இந்தியா
25-ஏப்-201108:20:24 IST Report Abuse
CUMBUM P.T.MURUGAN அமைதி பூங்காவில் செடி மட்டும் தான் இருக்கிறது. ஒரு பூவை கூட காணோம்.
Rate this:
Cancel
Gnanamuthu Alphonse - Parlin,யூ.எஸ்.ஏ
23-ஏப்-201105:11:49 IST Report Abuse
Gnanamuthu Alphonse "அவ்வழியே போன குடி போதையில் சென்ற யாரோ கல் வீசி தாக்கியிருக்கலாம் எனத் தெரிகிறது. ..... இச்சம்பவத்தில் ரவுடிகள் ஈடுபடவில்லை" .. எவ்வளவு தெளிவாக முதல்வர் கூறுகிறார் ...பாவம் காவல்துறை .. யார் குற்றவாளி என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை ...
Rate this:
Cancel
Kumar Sp - Chennai ,இந்தியா
22-ஏப்-201123:25:30 IST Report Abuse
Kumar Sp என் இனிய தமிழ் மக்களே, நேற்று நான் சென்னை பீச் ஸ்டேஷன் ட்ரைன்ல வந்த பொது ஒரு பொருக்கி அமைதியா ரயில் உள்ளே உட்கார்ந்து இருந்தவன பயங்கரமா அடிச்சான். ரயில் ல இருந்த ஒருத்தரும் எதுவும் கேக்க வில்லை. ஏன் எனக்கே கூட பயமா இருந்திச்சு... அடிச்சவன் பெரிய புடுங்கி மாதிரி, நான் காசி மேடு ஹீரோ டா.... இப்போ போன் பண்ணினா, உடனே நூறு பேரு வந்து நிப்பண்டா அப்படின்னு கொக்கரிச்சான்... இதில் இருந்தே தமிழ் நாடு எவ்வளவு அமைதியா இருக்குனு நல்லாவே தெரியுது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X