பதிவு செய்த நாள் :
உ.பி.,அகிலேஷ்,மாயாவதி,சமாஜ்வாதி,பகுஜன் சமாஜ்,கூட்டணி,டமால்

உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் இடையிலான மஹா கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது. லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து கூட்டணியை முறித்துக் கொள்ள பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி முடிவு செய்துள்ளார். இதையடுத்து உ.பி. அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பு நிலவுகிறது.

உ.பி.யில் மொத்தம் 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. எனவே இங்கு வெற்றி பெறும் கட்சி மத்திய ஆட்சியில் எப்போதும் முக்கிய பங்கு வகிக்கும். தேசிய அரசியலின் தலைவிதியை தீர்மானிக்கும் சக்தி படைத்த மாநிலமான உ.பி.யில் சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலின் போது அதிசயம் அரங்கேறியது. எதிரெதிர் துருவங்களாக இருந்துவந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் தேர்தலுக்காக கைகோர்த்தனர். பா.ஜ.வின் வெற்றியை தட்டிப்பறிப்பதற்காக இந்த மஹா கூட்டணி உருவாக்கப்பட்டது. இவ்விரு கட்சிகளுக்கும் மாநில அளவில் பெரும் வாக்குவங்கி உள்ளது.

எனவே இக்கட்சிகள் இணைந்ததால் அது பா.ஜ.வை பின்னுக்கு தள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. லோக்சபா தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன் உ.பி.யில் உள்ள இரண்டு லோக்சபா தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்தன. அந்த தேர்தலில் இந்த கூட்டணி இரண்டு தொகுதிகளையும் கைப்பற்றின. ஆனால் லோக்சபா தேர்தலில் இந்த வெற்றி தொடராமல் போனது. செல்வாக்கு மிகுந்த தொகுதிகளில் கூட இக்கூட்டணி தோல்வியை தழுவியது. இந்த தேர்தலில் சமாஜ்வாதியுடன் ஒப்பிடுகையில் பகுஜன் சமாஜ் ஓரளவு தனது பலத்தை நிரூபித்துள்ளது. கடந்த 2014 தேர்தலில் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாத

பகுஜன் சமாஜ் இம்முறை 10 இடங்களை பிடித்தது. சமாஜ்வாதி ஐந்து இடங்களில் மட்டுமே வென்றது.

மாறாக பா.ஜ. மொத்தமுள்ள 80 இடங்களில் 62 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. இந்த தோல்வி குறித்து ஆராய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இரு தினங்களுக்கு முன் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது யாதவ சமூக ஓட்டுக்கள் முழுஅளவில் தங்கள் கூட்டணிக்கு வரவில்லை என பலர் கருத்து தெரிவித்தனர். அகிலேஷின் மனைவி டிம்பிள் மற்றும் மைத்துனர்கள் அக் ஷய் தர்மேந்திரா என மூவருமே படுதோல்வி அடைந்து உள்ளனர்.

முலாயமின் சகோதரர் ஷிவ்பால் யாதவ் புதிய கட்சி தொடங்கியதே இதற்கு காரணம் என நிர்வாகிகள் தெரிவித்தனர். அவரது புதிய கட்சி பெரிய அளவில் ஓட்டுக்களை பிரித்துள்ளது. அதோடு காங்கிரசும் யாதவ சமூக ஓட்டுக்களை பங்குபோட்டுள்ளது என கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 'அகிலேஷின் குடும்பமே இனி யாதவ சமுதாய ஓட்டுக்களை வாங்க முடியாத சூழ்நிலையில் சமாஜ்வாதி உடனான கூட்டணியால் இனி நமக்கு பயனில்லை' என

நிர்வாகிகளிடம் மாயாவதி கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில் உ.பி.யில் உள்ள 11 சட்டபைத் தொகுதிகளுக்கு விரைவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ் தனித்து போட்டியிடும் என மாயாவதி கூறியுள்ளார். கடந்த ஜனவரியில் இந்த மஹா கூட்டணி அமைக்கப்பட்டபோது பிரதமர் பதவியை மாயாவதியும் உ.பி. மாநில முதல்வர் பதவியை அகிலேஷும் பகிர்ந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. அப்போதே இக்கூட்டணி குறித்து பெரும் எதிர்பார்ப்புகளும் எழுந்தன.

இதுகுறித்து அகிலேஷ் அப்போது அளித்த பேட்டியில் ''வரும் 2022 சட்டசபைத் தேர்தல் வரை இக்கூட்டணி தொடரும்'' என கூறினார். ஆனால் தற்போது களநிலவரங்கள் மொத்தமாய் மாறிப்போய் இருப்பதை மாயாவதி உணர்ந்துள்ளார்.

அதைவிட இந்த கூட்டணி தொடர்ந்தால் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி வரும் சட்டசபை தேர்தலின் போது உ.பி.மாநில முதல்வர் வேட்பாளராக அகிலேஷை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இதை தவிர்க்க வேண்டுமெனில் இப்போதே கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டுமென திட்டமிட்டே இந்த அதிரடி நடவடிக்கையை மாயாவதி எடுத்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரித்தனர்.

'இதுதான் இருவருக்கும் நல்லது'

மாயாவதி தனது பேட்டியில் கூறியிருப்பதாவது: சமாஜ்வாதியின் அடிப்படை ஓட்டு வங்கியான யாதவ சமூகம்கூட அந்தக் கட்சிக்கு ஆதரவு அளிக்கவில்லை. தங்கள் கட்சிக்கு என உள்ள நிரந்தர ஓட்டுக்களை அவர்கள் இழந்திருக்க கூடாது. சமாஜ்வாதியின் முக்கிய தலைவர்கள் பலரும் தோல்வியடைந்து உள்ளனர். இந்த அரசியல் நிதர்சனங்களை ஒதுக்கிவிட முடியாது. மேலும் இரு கட்சிகளுக்கு இடையிலான ஓட்டுக்கள் பரஸ்பரம் பகிரப்படவில்லை. அதனால் தான் இதுபோன்ற துரதிஷ்டமான முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அகிலேஷ் மற்றும் அவரது மனைவி இருவரும் என் மீது காட்டும் அன்பும் மரியாதையும் அளவிட முடியாதது. அவர்களுடனான எனது நட்பு அரசியலுக்கு அப்பாற்றப்பட்டது. மற்றபடி இந்த பிரிவு நிரந்தரமானது அல்ல. தனது கட்சியை முதலில் அகிலேஷ் முழுவதுமாக சரி செய்ய வேண்டும். அதில் அவர் வெற்றியடைந்தால் மீண்டும் இணைவோம். மாறாக தோல்வியடைந்தால் தனித்தனியே செயல்படுவதுதான் இருவருக்குமே நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.


''இரு கட்சிகளும் கூட்டணியை முறித்துக் கொண்டு அவரவர் வழிகளை பார்த்துக் கொள்ளத்தான் வேண்டுமெனில் அதில் ஆட்சேபணை இல்லை. 11 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாங்களும் தனித்து போட்டியிடுவோம். இதன் மூலம் மாயாவதிக்கு தகுந்த பதிலடி தருவோம்''

அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி தலைவர்


- நமது டில்லி நிருபர்-


Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
05-ஜூன்-201915:54:59 IST Report Abuse

Endrum Indianஇது அந்த மாதிரி அந்த மாதிரி குடும்பம்???பின்னர் இருவரும் சேர்ந்தால் ஆட்சி அமைக்க முடியும் என்றால் உடனே எல்லா வித்தியாசங்களையும் மறந்து இவை இரண்டும் ஒண்ணா சேர்ந்து கொள்ளையோ கொள்ளை அடிக்கும் , அவ்வளவு தான் இவர்களுக்குத்தெரிந்தது. மக்கள் சேவைக்கு அல்லவே அல்ல.

Rate this:
N.Purushothaman - Cuddalore,இந்தியா
05-ஜூன்-201911:25:11 IST Report Abuse

 N.Purushothamanஎப்படி கணக்கு போட்டாலும் ஆண்டவனின் கணக்கு முன் நிகராகுமா ? அகிலேஷ் எப்போ மாயா ஆண்ட்டியை விமர்சனம் செய்ய போறாரு ?

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
05-ஜூன்-201911:24:31 IST Report Abuse

ganapati sbதமிழக அதிமுக திமுக போல இருந்த சமஜ்வாதியும் பஹுஜனும் சேர்ந்து தோற்றத்தால் இனி பாமக விசிக போல மாறிவிடுமா அல்லது மீண்டும் ஆளும் கட்சியாக மாறுமா என்பது பாஜக யோகியின் நல்லாட்சியின் பலன் மக்களிடம் சேருவதில் உள்ளது

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X