பொது செய்தி

இந்தியா

ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தொகுதிகளை மறு சீரமைக்க முடிவு

Updated : ஜூன் 05, 2019 | Added : ஜூன் 05, 2019 | கருத்துகள் (26)
Advertisement
ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தொகுதிகளை மறு சீரமைக்க முடிவு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் சட்டசபை தொகுதிகளை மறுசீரமைப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு 1939-ம் ஆண்டு சட்டசபை கொண்டுவரப்பட்டது. முதல்வராக ஷேக் அப்துல்லா ஆட்சியின் போது ஜம்மு பகுதியில் 30 தொகுதிகளும், காஷ்மீர் பகுதிக்கு 43 தொகுதிகளும், லடாக் பகுதியில் இரண்டு என 75 தொகுதிகள் இருந்தன. தற்போது ஜம்மு பகுதியில் 37 தொகுதிகளும், காஷ்மீர் பகுதியில் 46 தொகுதிகளும், லடாக் பகுதியில் 4 தொகுதிகள் என 87 தொகுதிகள் உள்ளன.





இவற்றை மறுசீரமைப்பது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் ஜம்மு பகுதியிலிருந்து எஸ்.சி, மற்றும் எஸ்.சி., பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் தனி தொகுதி உருவாக்கி அதிக பிரதிநிதிகளை ஜம்முவிலிருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுப்பதற்கான வரைவு திட்டத்தை தயாரிக்க பரிசீலிக்கப்பட்டதாகவும் இதற்காக மறுசீரமைப்பு கமிஷன் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.


Advertisement


வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rpalnivelu - Bangalorw,இந்தியா
05-ஜூன்-201916:06:44 IST Report Abuse
Rpalnivelu 15% முஸ்லிம்கள், 85% இந்துக்களை ஆள வேண்டுமா? மோடியரசின் நடவடிக்கை சரியே.
Rate this:
Share this comment
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
05-ஜூன்-201915:35:22 IST Report Abuse
M.COM.N.K.K. எதிர் கட்சிகளே இல்லையே அப்புறம் எங்கே அவர்கள் ஓலமிடுவது
Rate this:
Share this comment
Cancel
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
05-ஜூன்-201914:46:40 IST Report Abuse
Chowkidar NandaIndia நல்ல முயற்சி. மைனாரிட்டி மைனாரிட்டி என்று எதிர்க்கட்சிகளின் ஓலமிட்டாலும் அதை காதில் வாங்காமல் செய்து முடிக்கவும். வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X