புதிய எம்.பி.,க்களுக்கு வீடுகள் தயார்

Updated : ஜூன் 05, 2019 | Added : ஜூன் 05, 2019 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி ; புதிதாக லோக்சபாவுக்கு தேர்வாகியுள்ள எம்.பி.,க்களுக்கு புதுடில்லியில் 36 குடியிருப்புகள் தயார் நிலையில் உள்ளன. இவை நவீன வசதிகளுடன், பாதுகாப்பு மிகுந்த 'நார்த் அவென்யூவில் அமைந்துள்ளன.பூகம்பத்தை தாங்கும் :லோக்சபா செயலகம், செலவினங்களை குறைக்கும் நோக்கத்தில் இந்த குடியிருப்புகளை கட்டியுள்ளது. கலையம்சத்துடன், 36 பிளாட்டுகள் இதுபோல

புதுடில்லி ; புதிதாக லோக்சபாவுக்கு தேர்வாகியுள்ள எம்.பி.,க்களுக்கு புதுடில்லியில் 36 குடியிருப்புகள் தயார் நிலையில் உள்ளன. இவை நவீன வசதிகளுடன், பாதுகாப்பு மிகுந்த 'நார்த் அவென்யூவில் அமைந்துள்ளன.latest tamil news
பூகம்பத்தை தாங்கும் :


லோக்சபா செயலகம், செலவினங்களை குறைக்கும் நோக்கத்தில் இந்த குடியிருப்புகளை கட்டியுள்ளது. கலையம்சத்துடன், 36 பிளாட்டுகள் இதுபோல கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிளாட்டும் இரண்டு அடுக்குகளை கொண்டதாக அமைந்துள்ளது. இவை பூகம்பத்தையும் தாங்கும் தொழில்நுட்பத்துடன் அமைந்துள்ளன.


நவீன வசதிகள்:


லிப்ட் வசதி, 4 படுக்கை அறைகள், மாடுலர் கிச்சன், சோலார் பேனல் வசதி, ரூப் டாப் வசதிகளுடன் இந்த குடியிருப்புகள் அமைந்துள்ளது சிறப்பம்சமாகும். ஏற்கனவே உள்ள லோக்சபா எம்.பி.,குடியிருப்புகளில் வீடுகள் கிடைப்பது அரிதாக இருந்தது. 2014 முதல் 2019 வரையில் 180 எம்.பி.,க்கள் வரை, அரசின் சுற்றுலா விடுதிகளில் தங்கவேண்டியிருந்துள்ளது.


latest tamil news
35 கோடி செலவு:


கடந்த 2019, ஏப்ரலில் நடந்த லோக்சபா கூட்டத்தொடரின் போது கூட 35 எம்.பி.,க்கள், தங்குவதற்கு இடமின்றி ஹோட்டல்களில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இதற்கு 35 கோடி ரூபாய் வரை செலவாகியுள்ளது. தற்போது, நார்த் அவென்யூவில் 232 குடியிருப்புகள் உள்ளன. அவற்றில் தற்போது 193 எம்.பி.,க்கள் தங்கியுள்ளனர். அதேபோல சவுத் அவென்யூவில் 196 குடியிருப்புகளில் 163 பேர் தங்கியுள்ளனர்.

இந்த செலவினங்களை மேற்கொள்ளவேண்டியது மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் தான். பணி ஓய்வுபெற்ற எம்.பி.,க்கள் உடனடியாக குடியிருப்புகளை காலி செய்யாத நெருக்கடியில் தான், இந்த புதிய குடியிருப்புகளை கட்டும் அவசியம் எழுந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.


தனிச்சிறப்பு :


இதனால், சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மேற்பார்வையில், லோக்சபா செயலகத்தின் அதிகாரிகள் எம்.பி.,க்களுக்கான புதிய குடியிருப்புகளை கட்டத் திட்டமிட்டனர். அதன்படி, நார்த் அவென்யூ பகுதியில் இவை கட்டப்பட்டன. இந்த வீடுகள் அமைந்துள்ள பகுதியிலிருந்து ஜனாதிபதி மாளிகை தெரியும் வகையில் அமைந்துள்ளது தனிச்சிறப்பாகும்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
09-ஜூன்-201904:52:40 IST Report Abuse
meenakshisundaram அப்போ நம்ப திருமா 'தண்ணி 'அடிக்கணும்னா ஹிந்திக்காரன் கூடத்தானா?அவனும் இனிமே ஹிந்தி கத்துக்க ஆரம்பிச்சுரக்குவானேயா -ஹிதர் ஜாவ் '
Rate this:
Cancel
06-ஜூன்-201911:57:27 IST Report Abuse
Sudha Elavarasan ஏன்டா எங்க வரிப்பணத்தை வீணாக்குறிங்க. சாதாரண குடியிருப்பில் தங்க மாட்டார்களா? என்ன ஒரு சமூக சேவை. இது போன்ற மட்ட தனமான செலவுகளை அரசு குறைக்க வேண்டும். இப்படி வீணாக்கி போலியோ s குடுக்க காசு இல்லை னு சொல்ல வேண்டியது
Rate this:
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
06-ஜூன்-201911:30:29 IST Report Abuse
JeevaKiran இதுவே ஒரு சாதாரண அரசு ஊழியர் ஓய்வு பெற்ற பிறகு அரசு வீட்டை காலி செய்யவில்லையென்றால் சும்மா விடுவார்களா? ரூல்ஸ் எல்லோருக்கும் ஒன்றுதானே. பிறகு இவர்களை ஏன் விட்டு வைத்திருக்கிறார்கள். இதற்கு பிரதமர்தான் பொறுப்பேற்கணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X