பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜூன் 05, 2019
Share
Advertisement
ஜூன் 6, 1990ஆலங்குடி சோமு: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த ஆலங்குடியில், 1932, டிச., 12ல் பிறந்தார். திரையுலகில் இவரை, பாடலாசிரியராக அறிமுகப்படுத்தியவர், அவரின் நண்பர் புரட்சிதாசன். சின்னப்ப தேவரின், யானைப்பாகன் படத்தில் இடம்பெற்ற, 'ஆம்பளைக்குப் பொம்பளை அவசியம் தான்...' என்ற நகைச்சுவை பாடல் தான், அவர் எழுதிய முதல் பாடல்.'இரவு வரும், பகலும் வரும், உலகம் ஒன்று தான்;
 இதே நாளில் அன்று

ஜூன் 6, 1990
ஆலங்குடி சோமு: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த ஆலங்குடியில், 1932, டிச., 12ல் பிறந்தார். திரையுலகில் இவரை, பாடலாசிரியராக அறிமுகப்படுத்தியவர், அவரின் நண்பர் புரட்சிதாசன். சின்னப்ப தேவரின், யானைப்பாகன் படத்தில் இடம்பெற்ற, 'ஆம்பளைக்குப் பொம்பளை அவசியம் தான்...' என்ற நகைச்சுவை பாடல் தான், அவர் எழுதிய முதல் பாடல்.

'இரவு வரும், பகலும் வரும், உலகம் ஒன்று தான்; மலருக்குத் தென்றல் பகையானால்; துள்ளுவதோ இளமை, தேடுவதோ தனிமை...' உள்ளிட்ட, ஏராளமான பாடல்களை எழுதியுள்ளார். தமிழ் திரையுலகில், 1960 முதல், 1997 வரை, 35 ஆண்டுகளில், 80 படங்களுக்கு, 170 பாடல்கள் எழுதியுள்ளார்.

கே.பாலசந்தரின் இயக்கத்தில், பத்தாம்பசலி என்ற படத்தையும், ஜெய்சங்கர் நடிப்பில், வரவேற்பு என்ற படத்தையும், சொந்தமாக தயாரித்தார். இவருக்கு, 1973- - 74ம் ஆண்டில், தமிழக அரசின், 'கலைமாமணி' விருது வழங்கப்பட்டது. 1990, ஜூன்,6ல் காலமானார். பாடலாசிரியர், கவிஞர், திரைப்படத் தயாரிப்பாளர் என, பன்முகம் உடைய, ஆலங்குடி சோமு இறந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X