பொது செய்தி

தமிழ்நாடு

3,000 'டாஸ்மாக்' கடைகளில் செப்டம்பரில் கண்காணிப்பு கேமரா

Added : ஜூன் 05, 2019
Advertisement

- நமது நிருபர் -டாஸ்மாக் மதுக் கடைகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி, செப்டம்பரில் முடிவடைகிறது. தமிழகத்தில், அரசு நிறுவனமான, 'டாஸ்மாக்' மட்டுமே, 5,200 சில்லரை கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மது வகைகளை விற்கிறது. தலா, ஒரு கடையில், தினமும் சராசரியாக, ௨ லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடக்கிறது.தினமும் வசூலாகும் பணத்தை, ஊழியர்கள், கடைகளில் வைத்து, மறு நாள், வங்கிகளில் செலுத்துகின்றனர். ஒவ்வொரு கடையிலும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மது வகைகள், இருப்பு வைக்கப்படுகின்றன.

இதனால், சமூக விரோதிகள், இரவில், மதுக் கடைகளை உடைத்து, பணம், மது பாட்டில்களை, கொள்ளை அடித்துச் செல்கின்றனர். இதற்கு, சில மதுக் கடை ஊழியர்களும், உடந்தையாக உள்ளனர்.கொள்ளை சம்பவம் குறித்து, டாஸ்மாக் சார்பில், போலீசில் புகார் அளித்தாலும், குற்றவாளிகளை அடையாளம் காண்பதில், போலீசாருக்கு சிரமம் உள்ளது. இதையடுத்து, முதல் கட்டமாக, 3,000 மதுக் கடைகளில், கண்காணிப்பு கேமராக்களை பொருத்த, டாஸ்மாக் முடிவு செய்தது. இந்த பணிகளை துவக்குவதில், தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது :கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகளை மேற்கொள்ள, ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, பிப்ரவரியில், 'டெண்டர்' கோரப்பட்டது. லோக்சபா தேர்தலால், டெண்டர் பணிகளில், முடிவு எடுக்க முடியவில்லை. இதனால், தற்போது, மறு டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் தொடர்பான பணிகள், ஜூலைக்குள் முடிக்கப்படும். ஆகஸ்ட்டில் துவங்கி, செப்டம்பருக்குள், 3,000 கடைகளிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி முடிவடையும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X