பொது செய்தி

இந்தியா

'நாரதா ஆப்பரேஷன்' எஸ்.பி.,க்கு, சி.பி.ஐ., 'சம்மன்'

Added : ஜூன் 05, 2019
Share
Advertisement
கோல்கட்டா : மேற்கு வங்கத்தில், 'நாரதா' செய்தி ஊடகம் நடத்திய, ரகசிய கேமரா நடவடிக்கையில், பிரபலங்கள் பலர் சிக்கிய விவகாரம் தொடர்பாக, புர்த்வான் மாவட்ட, முன்னாள் எஸ்.பி.,க்கு, சி.பி.ஐ., நேற்று, 'நோட்டீஸ்' அனுப்பி, விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.கடந்த, 2006ல், மேற்கு வங்கத்தில், சட்டசபை தேர்தல் நடந்த போது, 'நாரதா' என்ற செய்தி ஊடகம், திரிணமுல் காங்கிரஸ்

கோல்கட்டா : மேற்கு வங்கத்தில், 'நாரதா' செய்தி ஊடகம் நடத்திய, ரகசிய கேமரா நடவடிக்கையில், பிரபலங்கள் பலர் சிக்கிய விவகாரம் தொடர்பாக, புர்த்வான் மாவட்ட, முன்னாள் எஸ்.பி.,க்கு, சி.பி.ஐ., நேற்று, 'நோட்டீஸ்' அனுப்பி, விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.கடந்த, 2006ல், மேற்கு வங்கத்தில், சட்டசபை தேர்தல் நடந்த போது, 'நாரதா' என்ற செய்தி ஊடகம், திரிணமுல் காங்கிரஸ் தலைவர்களின் ஊழலை அம்பலப்படுத்தியது.

ரகசியமாக எடுக்கப்பட்ட, 'வீடியோ' காட்சிகளில், சில திரிணமுல் அமைச்சர்கள், கட்சி பிரமுகர்கள், அவர்களின் உறவினர்கள், லஞ்சம் பெற்றது பதிவானது.இந்த காட்சிகள், நாரதா இணையதளத்தில், தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை, மத்திய அரசின், சி.பி.ஐ., மற்றும் அமலாக்க இயக்குனரகம் விசாரிக்கின்றன. இந்நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு, மேற்கு வங்கத்தின், புர்த்வான் மாவட்ட முன்னாள் எஸ்.பி., மிர்சாவுக்கு, சி.பி.ஐ., நேற்று, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.சில நாட்களுக்கு முன், அமைச்சர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் சிலருக்கும், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X