தமிழை காப்பாற்ற வேண்டியது இந்தியிடமிருந்து அல்ல! திராவிட கட்சிகளிடமிருந்து!

Updated : ஜூன் 06, 2019 | Added : ஜூன் 06, 2019 | கருத்துகள் (293)
Advertisement
தமிழ் மொழியை வளர்க்கவும், பாதுகாக்கவும் முயற்சி எடுத்து வருவதாக திராவிட கட்சிகள், தமிழ் டி.வி., சேனல்கள் வாயிலாக கூறி வந்தாலும், இன்றைய காலகட்டத்தில் தமிழகத்தின் பெரும்பாலான பள்ளிகளில் உள்ள கல்விமுறையில் அது கடைப்பிடிக்கப்படவில்லை. சிலநாட்களுக்கு முன் தமிழக மக்களை மத்திய அரசு கொண்டு வரும் மும்மொழிக் கொள்கையின் காரணமாக இந்தி திணிப்பிலிருந்து காப்பாற்றப்போவதாக,
Tamil,Hindi,தமிழ், இந்தி, அரசியல், ஆதரவு, திணிப்பு, அரசியல், திராவிடகட்சிகள், தமிழக மக்கள், ஆதரவு

தமிழ் மொழியை வளர்க்கவும், பாதுகாக்கவும் முயற்சி எடுத்து வருவதாக திராவிட கட்சிகள், தமிழ் டி.வி., சேனல்கள் வாயிலாக கூறி வந்தாலும், இன்றைய காலகட்டத்தில் தமிழகத்தின் பெரும்பாலான பள்ளிகளில் உள்ள கல்விமுறையில் அது கடைப்பிடிக்கப்படவில்லை. சிலநாட்களுக்கு முன் தமிழக மக்களை மத்திய அரசு கொண்டு வரும் மும்மொழிக் கொள்கையின் காரணமாக இந்தி திணிப்பிலிருந்து காப்பாற்றப்போவதாக, தி.மு.க., கட்சி தெரிவித்தது.வியாபாரிகள் ஆதரவு


ஆனால் தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு சில வியாபாரிகள் அதற்கு மாறாக இந்தி மொழியை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டினர். ஏனென்றால், வியாபாரிகள் தங்கள் வியாபாரத்திற்காக வெளிமாநிலங்களுக்கு வேலையாட்களை அனுப்பும் போது, அவர்களுக்கு இந்தி தெரிந்திருப்பது அவசியமாகிறது. பள்ளியிலேயே இந்தி படித்திருந்தால் வடமாநிலங்களில் சுலபமாக வியாபாரத்தில் ஈடுபடமுடியும். தேனி மாவட்டத்தில் மட்டும் இல்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள வியாபாரிகளும் இந்தியின் முக்கியத்துவத்தை புரிந்துள்ளனர். தமிழகத்தில் நடைபெறும் பங்கு வர்த்தகத்தில் ஆங்கிலம் பேசப்பட்டாலும் பெரும்பாலான நேரங்களில் இந்தி அல்லது அந்தந்த மாநில மொழியில் தான் பேச வேண்டியதாகிறது.


latest tamil news


சுற்றுலா பயணிகள்:


தமிழகத்திற்கு ஆண்டு தோறும் 34 கோடி உள்நாட்டு சுற்றுலா பயணிகளும், 50 லட்சம் வெளிநாட்டு பயணிகளும் வருகின்றனர். சுற்றுலா பயணிகள் அனைவரும் ஆங்கிலத்தில் பேசுவதில்லை. வடமாநிலத்திலிருந்து வரும் பெரும்பாலானோர் இந்தியில் பேசுவதால், தமிழக வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை நடத்த இந்தியில் பேசுவது அவசியமாகிறது. எனவே வடநாட்டு சுற்றுலா பயணிகளை நம்பியிருக்கும் வியாபாரிகள், இந்தி கற்றுக் கொள்ள விரும்புகின்றனர்.கூலி தொழிலாளிகள்:


பீகார், ஒடிஷா போன்ற வட மாநிலங்களிலிருந்து தமிழகத்தில் வேலைக்காக வருபவர்களும் பெரும்பாலும் இந்தியில் மட்டும் பேசுவதால், அவர்களிடம் சகஜமாக பேசி வேலை வாங்குவதற்கு இந்தி அவசியமாகிறது.50 சதவீதம் பேர்:


தமிழகத்தில் உள்ள வியாபாரிகளுக்கு சிறிதளவு ஆங்கிலம் தெரிந்தாலும், இந்தி அவசியம் தேவைப்படுவதால், சிறு நகரங்கள் மற்றும் கிராமங்கள் என அனைத்துப்பகுதி மக்களும் தங்களுடைய வியாபாரத்தை நன்றாக நடத்த இந்தியை நம்பி உள்ளனர். 50 சதவீத கிராம மக்கள், சிறு வியாபாரத்தை நம்பியுள்ளதால் அவர்கள் வாழ்க்கை மேம்பட இந்தி படிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.


latest tamil news


அரசியலாகும் இந்தி படிப்பு (திணிப்பு):


அன்றாடம் பிழைப்பு நடத்தும் சிறுவியாபாரிகள் மற்றும் பெரிய வியாபாரிகள் இந்தியின் முக்கியத்துவத்தை உணர்ந்த நிலையில், தி.மு.க., போன்ற திராவிட கட்சிகள் அதை அரசியலாக்க முயற்சிக்கிறது. இந்தி திணிப்புக்கு எதிராக கோஷமிடும், அதே நேரத்தில் இன்று தமிழகத்தில், தமிழில் ஒரு வார்த்தை கூட தெரியாமல் பள்ளியில் மாணவர்கள் மேற்படிப்பை முடிக்கின்றனர். 2010ல் தமிழப் பாடம் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம் ஆக்கப்பட்டாலும், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டுமே தமிழ்ப்பாடம் கட்டாயம் ஆனது. தனியார் ஆங்கில வழி கல்விமுறையால் ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது.

இந்தி திணிப்பை வன்மையாக எதிர்த்து வரும் வேளையில், தங்கள் பிள்ளைகளை மட்டும் ஆங்கில வழிக் கல்வியில் கருணாநிதி குடும்பத்தினர் சேர்த்துள்ளனர். சென்னையில் அவர்கள் நடத்தும் பள்ளியில் கூட முழுக்க முழுக்க ஆங்கில வழியில் பாடங்கள் நடத்தப்படுகின்றது. அவர்கள் நடத்தும் பள்ளிக்கு கூட ‛சன்சைன்' என ஆங்கிலத்தில் தான் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்பள்ளியை தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன் நிர்வகித்து வருகிறார்.

ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகளில் அவர்கள் தாய்மொழியிலேயே உயர்கல்வி முறை இருப்பதாக மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறி வந்தார். ஆனால் தமிழ் மொழியிலேயே மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கான வாய்ப்பை கருணாநிதி உட்பட யாரும் ஏற்படுத்த முடியவில்லை.

தமிழகத்தின் அடித்தட்டு மக்கள் தங்கள் அன்றாட பிழைப்புக்காக இந்தி படிப்பை நம்பி இருக்கும் வேளையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் போன்றோர் இந்திக்கு எதிராக போராடி வருகின்றனர். பா.ஜ., வுக்கு எதிராக கோஷம் எழுப்புவதால் ஸ்டாலின் ஒருவரால் தான் மத்திய அரசுக்கு எதிராக போராடி இந்தித் திணிப்பை தவிர்க்க முடியும் என தி.மு.க,வினர் நம்புகின்றனர்.

இந்தி படிப்பதால் தங்கள் வாழ்வாதாரம் உயரும் என்று தமிழக மக்கள் உணர ஆரம்பித்து விட்டனர். பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான தமிழ் மொழியை இந்தி மொழியால் அகற்றி விட முடியாது என்று தமிழக மக்கள் நம்புகின்றனர்.

- கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு -


Advertisement
வாசகர் கருத்து (293)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthiban Shanmugam - CHENNAI,இந்தியா
11-ஜூன்-201912:06:59 IST Report Abuse
Parthiban Shanmugam ஹிந்தியையோ இல்லை வேறு எந்த மொழிகளையோ எதிர்க்கவில்லை. ஒரு மொழியை திணித்து அதன்மூலம் என்னுடைய தாய் மொழியையும் என் பண்பாட்டையும் அழித்து என்னை அடிமைப்படுத்த நினைப்பதை எதிர்க்கிறோம். வட மாநிலங்களில் வியாபாரம் மற்றும் மற்ற காரணங்களுக்காக செல்பவர்கள் தாராளமாக அவர்களின் தேவைக்கு ஏற்ப ஹிந்தி, பஞ்சாபி, ராஜஸ்தானி, பெங்காலி, ஒடிசி, அஸ்ஸாமி கன்னடா, தெலுகு என படித்துக்கொள்ளலாம். எதற்காக தமிழ் நாட்டில் அனைவரும் படிக்க வேண்டும். அதே நேரத்தில் ஏன் வட மாநிலங்களில் இருந்து வருபவர்கள் அந்தந்த மாநில மொழிகளை படிப்பதில்லை? மேலும் ஏன் ஆங்கிலத்தை கற்பது இல்லை? இது சுற்றுலா துறையில் உள்ளவர்களுக்கும் பொருந்தும். ஒரு சுற்றுலா தளத்திற்கு செல்வதானால் வழிகாட்டிகள் உள்ளனர் அல்லது பொதுவான சில வார்த்தைகள் அந்த மொழியில் தெரிந்து கொண்டால் போதும் அல்லது ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் தெரிந்தால் போதும். நம்முடைய வியாபாரிகள் எத்தனை பேர் வட மாநிலங்களில் வியாபாரம் செய்து வருகிறார்கள்? அவர்கள் கண்டிப்பாக அந்தந்த மொழிகளை அவர்களின் தேவைக்கு ஏற்ப கற்கிறார்கள். வட மாநிலங்களுக்கு வாகனம் ஓட்டுபவர்கள் சில மாதங்களில் அவர்களுக்கு தேவையான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள் . ஹிந்தி படித்தால் தான் வேலை வாய்ப்பு என்பது ஏமாற்று வேலை, அப்படியானால் மற்ற மொழி பேசுபவர்கள் இரண்டாம் தர குடிமக்களா ? கூலி வேலைக்கு வரும் வட மாநிலத்தவர்களுக்காக இங்கு இருப்பவர்கள் ஏன் ஹிந்தி படிக்க வேண்டும்? வேலை தேடி வருபவர்கள் தான் அந்தந்த மொழியை கற்க வேண்டும், அது தமிழனுக்கும் பொருந்தும். இருப்பினும் இங்குள்ள கூலி தொழிலாளிக்கு வேலை கொடுக்காமல் ஏன் வட மாநில தொழிலாளியை வேலைக்கு அமர்த்த வேண்டும்? ஏன் என்றால் அவர்களுக்கு குறைந்த கூலி கொடுத்து ஏமாற்றுவதற்காக மட்டுமே. அரசியல் கட்சிகள் முறையாக நடக்க வில்லை என்பதற்காக, கல்வி முறை நடை முறை படுத்துவதில் குறைகள் உள்ளன என்பதற்காக ஹிந்தி படித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பது மாயை. அப்படியானால் ஹிந்தி படிப்பவர்கள் எல்லாம் மேதைகளாகி விட்டார்களா? ஹிந்தி மாநிலங்களில் வேலை வாய்ப்பு அதிகரித்து நமக்கெல்லாம் அங்கு வேலை கிடைக்க போகிறதா? வேலை வாய்ப்பை பொறுத்த வரை தென் மாநிலங்கள் தான் இன்று வரை முன்னணியில் உள்ளன. எனவே தி மு க மற்றும் ஏனைய கட்சிகளின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப விவாதம் செய்ய வேண்டியது இல்லை. இந்தியாவில் உள்ள அணைத்து மொழிகளையும் தேசிய அரசு மொழிகளாக அறிவிக்க வேண்டும். தாய் மொழியில் கல்வியை அளிக்க வேண்டும், ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும், அவரவர் தேவைக்கு ஏற்ப சில மொழிகளை கற்க வாய்ப்பு இருக்க வேண்டும். ஹிந்தி யை திணிப்பது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது.
Rate this:
Cancel
மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா
11-ஜூன்-201907:02:12 IST Report Abuse
மு. செந்தமிழன் ஹலோ ... தினமலர் ஹிந்தி மொழியை வச்சு ஆண்டாண்டுக்கு நான், அதன் பிறகு என் வாரிசுகள் arasial நடத்த வேண்டும். நீங்க பாட்டுக்கு வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ பேச வேண்டாம்.
Rate this:
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
10-ஜூன்-201912:45:34 IST Report Abuse
Appan ஒரு மொழி படிப்பதால், அந்த மொழி வாழ்வாதாரத்திற்கு அல்லது அறிவுக்கு உதவனும்.. இந்தி மொழி பேசுகிறவர்கள் யார் தெரியுமா? அடிமைகள்.. வட இந்திய சுமார் 800 வருடம் இஸ்லாமியர்கள் ஆண்டார்கள்.. அவர்களின் ஆட்சி மொழி இந்தி அல்ல.. அவர்களின் மொழி பாரசீகம், அரபு.. இஸ்லாமியர்கள் இந்து அடிமைகளை ஆள உருவாக்கிய மொழி இந்தி.. இது பிராகிருத, அரபு, உருது பாரசீகம் மொழிகளின் கலவை.. அடிமைகளின் மொழி அடிமைகளைத் தான் உருவாக்கும்.. 60 களின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தால் தமிழகம் ஆங்கிலம் கற்றது.. அதன் நன்மையை பாருங்கள். இப்போ தமிழர்கள் ஐ.டி துறையில் கோலோய்ச்சுகிறார்கள்.. அவர்கள் இந்தி கற்று இருந்தால் என்னவாக இருப்பார்கள்.. வட இந்தியாவில் பனி பூரி விற்று கொண்டு இருப்பார்கள்.. இப்பவே தமிழத்தில் கடைநிலை வேலை செய்ப்பவர்கள் யார்../> இந்திக்காரர்கள் தான்.. மொழி என்பது கலாச்சாரம்.. இந்தி கலாச்சாரம் அடிமைகளைத்தான் உருவாக்கும்..இது தேவையா..?. மனிதனின் சிந்தனை திறனை மொழி தான் நிர்மாணிக்கிறது..அதாவது வளர்ந்த மொழி சிந்தனை திறனை வளர்க்கும்.. As per semantic the language determine the thinking capability..If the language is not developed then the people who speak that language can not think ..Do Tamil want this language..?. இங்கு இந்திக்கு வக்காலத்து வாங்குபவர்கள் பிஜேபி, காரர்களாக இருப்பார்கள்.. அதோடு தமிழர்களின் சிலர் தமிழ் பேசினாலும் தமிழின பெருமை இல்லை.. அவர்கள் இந்தியை ஆதரிப்பார்கள். அவர்களுக்கு இந்தி மொழியின் நிலை என்ன என்று தெரிந்தால் ஆதரிக்க மாட்டார்கள்.. வட இந்தியாவில் வியாபாரம் செய்ய வேண்டுமானால் இந்தி தெரியணும்.. இவர்கள் இந்தி படிக்கலாமே.. யார் வேண்டாம் என்றார்கள்.. இந்தி எதிர்ப்பு என்பது மத்திய அரசில் சேர இந்தி வேண்டும் என்பதால் தான் எதிர்க்கிறார்கள்.. மத்திய அரசில் வேலை செய்ய இந்தி வேண்டும் என்றால் இந்தி அல்லாத மாநிலங்கள் மத்திய அரசு பணியில் சேர முடியுமா? அது சரி இந்தி அறிவால் அணு உலை செய்ய முடியுமா? விமானம் செய்ய முடியுமா? இப்படி அடிமைகளின் மொழி எதற்கு ஆட்சி மொழி ஆக்கணும்..இப்படி இந்தி திணித்தால் இந்தியா என்ற நாடே இருக்காது.. ஏனென்றால் இந்திய நாடே மொழிவாரியாக பிரிக்க பட்டு உள்ளது.. மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டது எதற்கு..?.எல்லா மொழிகளும் வளரனும்..அதாவது எல்லா கலாச்சாரமும் வளரும்..அதை விட்டு ஆதிவாசிகளின் மொழியான இந்தியை திணித்தால் நாடு என்ன ஆகும்..? .யாரும் இந்தியை எதிர்க்கவில்லை..இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறார்கள்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X