தமிழை காப்பாற்ற வேண்டியது இந்தியிடமிருந்து அல்ல! திராவிட கட்சிகளிடமிருந்து!| Dinamalar

தமிழை காப்பாற்ற வேண்டியது இந்தியிடமிருந்து அல்ல! திராவிட கட்சிகளிடமிருந்து!

Updated : ஜூன் 06, 2019 | Added : ஜூன் 06, 2019 | கருத்துகள் (293) | |
தமிழ் மொழியை வளர்க்கவும், பாதுகாக்கவும் முயற்சி எடுத்து வருவதாக திராவிட கட்சிகள், தமிழ் டி.வி., சேனல்கள் வாயிலாக கூறி வந்தாலும், இன்றைய காலகட்டத்தில் தமிழகத்தின் பெரும்பாலான பள்ளிகளில் உள்ள கல்விமுறையில் அது கடைப்பிடிக்கப்படவில்லை. சிலநாட்களுக்கு முன் தமிழக மக்களை மத்திய அரசு கொண்டு வரும் மும்மொழிக் கொள்கையின் காரணமாக இந்தி திணிப்பிலிருந்து காப்பாற்றப்போவதாக,
Tamil,Hindi,தமிழ், இந்தி, அரசியல், ஆதரவு, திணிப்பு, அரசியல், திராவிடகட்சிகள், தமிழக மக்கள், ஆதரவு

தமிழ் மொழியை வளர்க்கவும், பாதுகாக்கவும் முயற்சி எடுத்து வருவதாக திராவிட கட்சிகள், தமிழ் டி.வி., சேனல்கள் வாயிலாக கூறி வந்தாலும், இன்றைய காலகட்டத்தில் தமிழகத்தின் பெரும்பாலான பள்ளிகளில் உள்ள கல்விமுறையில் அது கடைப்பிடிக்கப்படவில்லை. சிலநாட்களுக்கு முன் தமிழக மக்களை மத்திய அரசு கொண்டு வரும் மும்மொழிக் கொள்கையின் காரணமாக இந்தி திணிப்பிலிருந்து காப்பாற்றப்போவதாக, தி.மு.க., கட்சி தெரிவித்தது.வியாபாரிகள் ஆதரவு


ஆனால் தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு சில வியாபாரிகள் அதற்கு மாறாக இந்தி மொழியை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டினர். ஏனென்றால், வியாபாரிகள் தங்கள் வியாபாரத்திற்காக வெளிமாநிலங்களுக்கு வேலையாட்களை அனுப்பும் போது, அவர்களுக்கு இந்தி தெரிந்திருப்பது அவசியமாகிறது. பள்ளியிலேயே இந்தி படித்திருந்தால் வடமாநிலங்களில் சுலபமாக வியாபாரத்தில் ஈடுபடமுடியும். தேனி மாவட்டத்தில் மட்டும் இல்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள வியாபாரிகளும் இந்தியின் முக்கியத்துவத்தை புரிந்துள்ளனர். தமிழகத்தில் நடைபெறும் பங்கு வர்த்தகத்தில் ஆங்கிலம் பேசப்பட்டாலும் பெரும்பாலான நேரங்களில் இந்தி அல்லது அந்தந்த மாநில மொழியில் தான் பேச வேண்டியதாகிறது.


latest tamil news


சுற்றுலா பயணிகள்:


தமிழகத்திற்கு ஆண்டு தோறும் 34 கோடி உள்நாட்டு சுற்றுலா பயணிகளும், 50 லட்சம் வெளிநாட்டு பயணிகளும் வருகின்றனர். சுற்றுலா பயணிகள் அனைவரும் ஆங்கிலத்தில் பேசுவதில்லை. வடமாநிலத்திலிருந்து வரும் பெரும்பாலானோர் இந்தியில் பேசுவதால், தமிழக வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை நடத்த இந்தியில் பேசுவது அவசியமாகிறது. எனவே வடநாட்டு சுற்றுலா பயணிகளை நம்பியிருக்கும் வியாபாரிகள், இந்தி கற்றுக் கொள்ள விரும்புகின்றனர்.கூலி தொழிலாளிகள்:


பீகார், ஒடிஷா போன்ற வட மாநிலங்களிலிருந்து தமிழகத்தில் வேலைக்காக வருபவர்களும் பெரும்பாலும் இந்தியில் மட்டும் பேசுவதால், அவர்களிடம் சகஜமாக பேசி வேலை வாங்குவதற்கு இந்தி அவசியமாகிறது.50 சதவீதம் பேர்:


தமிழகத்தில் உள்ள வியாபாரிகளுக்கு சிறிதளவு ஆங்கிலம் தெரிந்தாலும், இந்தி அவசியம் தேவைப்படுவதால், சிறு நகரங்கள் மற்றும் கிராமங்கள் என அனைத்துப்பகுதி மக்களும் தங்களுடைய வியாபாரத்தை நன்றாக நடத்த இந்தியை நம்பி உள்ளனர். 50 சதவீத கிராம மக்கள், சிறு வியாபாரத்தை நம்பியுள்ளதால் அவர்கள் வாழ்க்கை மேம்பட இந்தி படிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.


latest tamil news


அரசியலாகும் இந்தி படிப்பு (திணிப்பு):


அன்றாடம் பிழைப்பு நடத்தும் சிறுவியாபாரிகள் மற்றும் பெரிய வியாபாரிகள் இந்தியின் முக்கியத்துவத்தை உணர்ந்த நிலையில், தி.மு.க., போன்ற திராவிட கட்சிகள் அதை அரசியலாக்க முயற்சிக்கிறது. இந்தி திணிப்புக்கு எதிராக கோஷமிடும், அதே நேரத்தில் இன்று தமிழகத்தில், தமிழில் ஒரு வார்த்தை கூட தெரியாமல் பள்ளியில் மாணவர்கள் மேற்படிப்பை முடிக்கின்றனர். 2010ல் தமிழப் பாடம் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம் ஆக்கப்பட்டாலும், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டுமே தமிழ்ப்பாடம் கட்டாயம் ஆனது. தனியார் ஆங்கில வழி கல்விமுறையால் ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது.

இந்தி திணிப்பை வன்மையாக எதிர்த்து வரும் வேளையில், தங்கள் பிள்ளைகளை மட்டும் ஆங்கில வழிக் கல்வியில் கருணாநிதி குடும்பத்தினர் சேர்த்துள்ளனர். சென்னையில் அவர்கள் நடத்தும் பள்ளியில் கூட முழுக்க முழுக்க ஆங்கில வழியில் பாடங்கள் நடத்தப்படுகின்றது. அவர்கள் நடத்தும் பள்ளிக்கு கூட ‛சன்சைன்' என ஆங்கிலத்தில் தான் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்பள்ளியை தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன் நிர்வகித்து வருகிறார்.

ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகளில் அவர்கள் தாய்மொழியிலேயே உயர்கல்வி முறை இருப்பதாக மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறி வந்தார். ஆனால் தமிழ் மொழியிலேயே மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கான வாய்ப்பை கருணாநிதி உட்பட யாரும் ஏற்படுத்த முடியவில்லை.

தமிழகத்தின் அடித்தட்டு மக்கள் தங்கள் அன்றாட பிழைப்புக்காக இந்தி படிப்பை நம்பி இருக்கும் வேளையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் போன்றோர் இந்திக்கு எதிராக போராடி வருகின்றனர். பா.ஜ., வுக்கு எதிராக கோஷம் எழுப்புவதால் ஸ்டாலின் ஒருவரால் தான் மத்திய அரசுக்கு எதிராக போராடி இந்தித் திணிப்பை தவிர்க்க முடியும் என தி.மு.க,வினர் நம்புகின்றனர்.

இந்தி படிப்பதால் தங்கள் வாழ்வாதாரம் உயரும் என்று தமிழக மக்கள் உணர ஆரம்பித்து விட்டனர். பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான தமிழ் மொழியை இந்தி மொழியால் அகற்றி விட முடியாது என்று தமிழக மக்கள் நம்புகின்றனர்.

- கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு -


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X