இந்திய ராணுவ நிலைகள் மீது அல்-குவைதா தாக்குதல் சதி

Updated : ஜூன் 06, 2019 | Added : ஜூன் 06, 2019 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி: இந்திய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த, அல் - குவைதா பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக, உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த, 2016, ஜனவரி, 2ல், பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள், திடீர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். அதை நம் வீரர்கள், வெற்றிகரமாக முறியடித்து, பயங்கர வாதிகள் அனைவரையும் கொன்று குவித்தனர்.

புதுடில்லி: இந்திய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த, அல் - குவைதா பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக, உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



latest tamil news



கடந்த, 2016, ஜனவரி, 2ல், பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள், திடீர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். அதை நம் வீரர்கள், வெற்றிகரமாக முறியடித்து, பயங்கர வாதிகள் அனைவரையும் கொன்று குவித்தனர். அது போன்றதொரு, பயங்கர தாக்குதலை மீண்டும் நடத்த, அல் - குவைதா பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக, அந்த கொடூரர்கள், பாகிஸ்தான் ஆதரவு, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகளின் உதவியை கோரியுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.


latest tamil news



அல் - குவைதா பயங்கரவாதி, அப்துல்லா அல்ஹந்த் என்பவன், இந்திய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த, பொறுப்பேற்று உள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்த இடத்தில், தாக்குதல் நடத்த உள்ளனர் என்பது, தெளிவாக தெரியாத நிலையில், ஜம்மு - காஷ்மீரில் உள்ள ராணுவ நிலைகள், தாக்குதலுக்கு உள்ளாகலாம் என, கருதப்படுகிறது. எனவே, அந்த மாநிலத்தில், பாதுகாப்புப் படையினர், உச்சக்கட்ட உஷார் நிலையில் உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
06-ஜூன்-201913:56:19 IST Report Abuse
M.COM.N.K.K. இந்தியா தற்போது செய்யவேண்டியது பலுசிஸ்தானுக்கு ஆதரவு அளித்தாலே போதும் பாக்கிஸ்தான் பிடியிலிருந்து பலுசிஸ்தான் பிரிக்கப்பட்டால் பாக்கிஸ்தான் அடங்கிப்போவார்கள் மறைமுகமாக பலுசிஸ்தான் மாநிலத்திற்கு உதவிகளை இந்தியா செய்தாலே போதும் நமது இலக்கு வெற்றியடையும் இனியும் காலதாமதம் செய்யாமல் ஆகவேண்டியதை நமது ராணுவம் பணியை உடனே துவக்கலாம் வெற்றி நமதே
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
06-ஜூன்-201911:29:32 IST Report Abuse
Tamilan இவர்களுக்கு மிக எளிதான வழி பாகிஸ்தான். மற்றவை மிக கடினமான வழிகள் .
Rate this:
Cancel
ravichandran - avudayarkoil,இந்தியா
06-ஜூன்-201909:51:50 IST Report Abuse
ravichandran காஸ்மீரை காப்பாறுவோம் இந்தியாவுக்கு எதிராக உள்ள காஸ்மீரிகள் தேவை இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X