அமிர்தசரஸ்: பஞ்சாப் பொற்கோவிலில் நடந்த ' புளூ ஆபரேஷன் ' நடவடிக்கை 34 வது ஆண்டு கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி இன்று (ஜூன்6 )கோயிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பஞ்சாப் பொற்கோவிலில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தனர். இவர்களை அப்புறப்படுத்தும் விதமாக 1984 ம் ஆண்டு இந்திரா பிரதமராக இருந்த போது அதிரடி ' புளூ ஆபரேஷன் ' என்ற ராணுவ நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆபரேஷனில் பயங்கரவாதிகள் மற்றும் பொதுமக்கள் என 1,592 பேர் உயிரிழந்தனர்.

இந்த நடவடிக்கைக்கு காலிஸ்தான் பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் 34 வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி பொற்கோவிலில் சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையில் இன்று காலை காலிஸ்தான் பிரிவினர் இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பினர்.
ஐஎஸ்ஐ தாக்குதல் அபாயம் ?
பஞ்சாபில் ஐஎஸ்ஐ தாக்குதல் அபாயம் உள்ளதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டும் கூடுதல் பாதுகாப்புக்கு முதல்வர் அமரீந்தர்சிங் உத்தரவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE